Skip to main content

சாஸ்திர விதிகளின் முக்கியத்துவம்

 



: ஷாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:
ஸித்திம் அவாப்னோதி ஸுகம் பராம் திம்


சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.


பொருளுரை: முன்பே விவரிக்கப்பட்டபடி, சாஸ்திரங்களின் விதிகள் மனித சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நிலைகளுக்கும் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொருவரும் இந்த சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டு மென்று எதிர்பார்க்கப்படுகின்றனர். இவற்றைப் பின்பற்றாமல் தனது மனம்போன போக்கில் காமம், கோபம், மற்றும் பேராசையின்படி ஒருவன் செயல்பட்டால், அவன் தனது வாழ்வில் என்றுமே பக்குவமடைய முடியாது. வேறு விதமாகக் கூறினால், ஒரு மனிதன் இவ்வெல்லா விஷயங்களையும் கொள்கையளவில் அறிந்தவனாக இருந்தாலும், தனது சொந்த வாழ்வில் இவற்றை ஈடுபடுத்தாத வரை அவன் மனித இனத்தின் கடைநிலையைச் சேர்ந்தவனாகவே அறியப்படுகின்றான். மனித வாழ்வில் உள்ள உயிர்வாழி, வாழ்வை உன்னத தளத்திற்கு உயர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவான் என்றும், விவேகத்துடன் செயல்படுவான் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றான். ஆனால் அவ்விதிகளைப் பின்பற்றா விடில், அவன் தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றான். அதே சமயத்தில் அவன் இந்த சட்டதிட்டங்களை பின்பற்றினாலும், இறுதியில் முழுமுதற் கடவுளைப் பற்றிய அறிவின் தளத்தினை அடையாவிடில், அவனது அறிவு அனைத்தும் விரயமாகின்றது. அவ்வாறு அவன் முழுமுதற் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொண்டாலும், அந்த இறைவனின் தொண்டில் தன்னை ஈடுபடுத்தா விடில், அவனது முயற்சிகள் வீணாகிவிடுகின்றன. எனவே, ஒருவன் தன்னை படிப்படியாக கிருஷ்ண உணர்வு மற்றும் பக்தித் தொண்டின் தளத்திற்கு உயர்த்திக் கொள்ளுதல் அவசியம்; அதன் பின்னரே அவன் பக்குவத்தின் மிகவுயர்ந்த நிலையை அடைய முடியும், இல்லையேல் முடியாது.

காமகாரத: என்னும் சொல் மிகவும் முக்கியமானது. தெரிந்தே விதிகளை மீறுபவன் காமத்தில் செயல்படுகின்றான். இது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அவன் அறிகின்றான், இருந்தும் அவ்வழியில் செயல்படுகின்றான். இதுவே மனம்போன போக்கில் நடப்பது என்று அழைக்கப்படுகின்றது. இதனைச் செய்ய வேண்டும் என்று அவன் அறிவான், இருந்தும் அவன் அதனைச் செய்வதில்லை; எனவே, மனம்போன போக்கில் நடப்பவன் என்று அவன் அழைக்கப்படுகின்றான். இத்தகைய நபர்கள் முழுமுதற் கடவுளால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் மனித வாழ்வின் பக்குவத்தை அடைய முடியாது. மனித வாழ்க்கை, முக்கியமாக ஒருவனது இருப்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கானதாகும், சட்டதிட்டங்களைப் பின்பற்றா தவனால் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியாது, சுகத்தின் உண்மையான தளத்தையும் அடைய முடியாது.



ஶ்ரீமத் பகவத்கீதை (உண்மையுருவில்) 16.23 )



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...