Skip to main content

"ஹரி-தாஸ-வர்யோ"-பக்தர்கள் அனைவரினும் இக் கோவர்த்தனகிரியே மிகச் சிறந்ததாகும்!

 


ஹந்தாயம் அத்ரிர் அபலா ஹரி-தாஸ-வர்யோ
யத்-ராம-க்ருஷ்ண-சரண-ஸ்பரஸ்-ப்ரமோத:
மானம் தனோதி ஸஹ-கோ-கணயோஸ் தயோர் யத்
பாணீய-ஸூயவஸ-கந்தர-கந்த மூலை:

ஹந்த—ஒ; அயம்—இந்த; அத்ரி:—மலை; அபலா:—ஒ, தோழியரே! ஹரி-தாஸ-வர்யே:—பகவானது தொண்டர்களில் மிகச் சிறந்தது; யத்- ஏனென்றால்; ராம-க்ருஷ்ண-சரண பகவான் கிருஷ்ணர் மற்றும் பலராமரின் தாமரைத்திருவடிகளின்; ஸ்பரஸ—ஸ்பரிசத்தினால்; ப்ரமோத:—மகிழ்ச்சியடைதல்; மானம்—மரியாதை; தனோதி—அளிக்கிறது; ஸஹ—உடன்; கோ-கணயோ:—பசுக்கள், கன்றுகள் மற்றும் ஆயர்குலச் சிறுவர்கள்; தயோ:—அவர்களுக்கு (ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு); யத்—ஏனென்றால்; பாணீய—குடி தண்ணிருடன்; ஸூயவஸ—மிகவும் மென்மையான புற்கள்; கந்தர—குகைகள்; கந்த—மூலை: கந்த—மூலங்கள் (கிழங்கு வகைகள்).


மொழிபெயர்ப்பு


பக்தர்கள் அனைவரினும் இக் கோவர்த்தனகிரியே மிகச் சிறந்ததாகும்! ஓ, தோழிப் பெண்களே, இம்மலை கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் அவர் தம் கன்றுகளுக்கும், பசுக்களுக்கும் மற்றும் ஆயர்குலச் சிறுவர்களுக்கும் தேவையான அனைத்தையும் அளிக்கின்றது. பருகுதற்கு நீர், மென்மையான பசும்புற்கள், குகைகள், கனிகள், மலர்கள், மற்றும் காய்கறிகள் போன்ற பொருள்கள் இவ்வாறு இம்மலை பகவானுக்குத் தனது மரியாதையினை அளிக்கின்றது. கிருஷ்ணர், மற்றும் பலராமரின் திருவடித்தாமரைகளின் ஸபரிசம் பட்டதினால் கோவர்தனகிரி மகிழ்ச்சி மிக்கதாக விளங்குகின்றது.


பொருளுரை


இம்மொழிபெயர்ப்பு ஸ்ரீல பிரபுபாதாவின் “சைதன்ய-சரிதாம்ருதத்திலிருந்து (மத்ய 18.34) எடுத்தாளப்படுகிறது.

ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகுர் கோவர்தன கிரியின் வளத்தினைப் பின்வருமாறு விளக்குகிறார்: “பாணீய” என்னும் சொல் கோவர்தன அருவிகளின் நறுமணமிக்க குளிர்ந்த நீரினைக் குறிப்பிடுகிறது. கிருஷ்ணரும் பலராமரும் இந்நீரினையேப் பருகுவதற்கும் கை கால்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். கோவர்தன கிரி மேலும் பருகுவதற்கரியத் தேன், மாங்கனிச் சாறு, “பீலு” என்னும் மரத்தின் சாறு போன்றவற்றையும் அளிக்கிறது. “ஸூயவஸ” என்னும் சொல் சமயச் சடங்குகளில் “அர்க்கியம்” செய்வதற்குப் பயன்படுத்தப்படும் “தூர்வா” புல்லைக் குறிப்பிடுகிறது. கோவர்தனகிரி பசுக்களின் வளர்ச்சிக்கும், பாலின் பெருக்கத்திற்கும் உதவும் வகையில் மணமிக்க, மென்மையான பசும்புற்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளது. இவ்வாறு அப்புற்கள் உன்னத பசுக்கூட்டங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. “சுந்தர” என்னும் வார்த்தை குகைகளைக் குறிப்பிடுகின்றது. அக்குகைகளில்தான் கிருஷ்ண பலராமரும் அவர்தம் நண்பர்களும் விளையாடுவர், அமர்ந்திருப்பர் மற்றும் படுத்திருப்பர். வெய்யில் அதிகமானாலும், குளிர் அதிகமானாலும், அல்லது மழை பெய்தாலும் அக்குகைகளே இன்பம் அளிப்பவையாகும். கோவர்தனகிரி மேலும் உண்பதற்கு கந்த மூலங்களையும், அணிவதற்கு மணிகளையும், அமர்வதற்கு சமதளத்தினைனயும், மென்மையான கற்களின் வடிவில் வீளக்குகளையும் கண்ணாடிகளையும் மின்னும் தண்ணீரையும் பிற இயற்கைப் பொருட்களையும் வழங்குகின்றது.


ஶ்ரீமத் பாகவதம் 10.21.18 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...