Skip to main content

பௌதீக உலகத்தில் இன்பமும் துன்பமும்

 



இந்த உலகில், எல்லாரும் உலகியல் இன்பம் பெற முயற்சி செய்கின்றனர், ஆனால் நமக்குச் சிறிதளவு ஜடவுலக இன்பம் கிடைத்தவுடன், அதனோடு துன்பமும் உள்ளது. இந்த ஜடவுலகில் ஒருவர் கலப்படமில்லாத இன்பம் பெற முடியாது. ஒருவரிடம் இருக்கும் எந்த வித இன்பமும், துன்பத்தாலும் மாசுபடுத்தப்பட்டது. சான்றாக, நாம் பாலைக் குடிக்க விரும்பினால் பின்னர் ஒரு பசுவைப் பாதுகாத்து, அது பால் தரத் தகுதி வாய்ந்ததாக இருக்க வேண்டும். பால் குடித்தல் மிகவும் நல்லது; அது இன்பம் ஆனதும் ஆகும். ஆனால் பால் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் பல தொல்லைகளை ஏற்க வேண்டும். பகவானால் இங்கு குறிப்பிடப்பட்டதுபோல, யோக முறை இவ்வுலக இன்பத்தையும், இவ்வுலகின் துன்பத்தையும் போக்கவே உள்ளது. கிருஷ்ணரால் பகவத் கீதையில் கற்பிக்கப்பட்டதுபோல, சிறந்த யோகம் பக்தி யோகம் ஆகும். ஒருவர் சகிப்புத் தன்மையுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும், ஜடவுலக இன்பம் அல்லது துன்பத்தால் தொல்லை அடைதல் கூடாது என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜடவுலக இன்பத்தால் தான் தொல்லைக்கு ஆளாவதில்லை என்று கூறலாம், ஆனால் ஒருவர் ஜடவுலக இன்பம் எனப்படுவதை அனுபவித்த பின்னர், ஜடவுலகத் துன்பமும் பின் தொடரும் என்பது அவருக்குத் தெரியாது. இதுவே இவ்வுலகின் சட்டமாகும். யோக முறை ஆத்மாவின் விஞ்ஞானம் என்று பகவான் கபிலர் குறிப்பிடுகிறார். ஒருவர் ஆன்மீகப் படித்தரத்தில் முழுமை அடைவதற்காக யோகப் பயிற்சி செய்கிறார். ஜடவுலக இன்பம் அல்லது துன்பம் பற்றிய கேள்வியே இல்லை. அது தெய்வீகமானது


முழுமையான யோகம் ஒருவரை ஜடவுலக இன்ப, துன்பத்தின் நிலையினைக் கடக்கச் செய்கிறது என்று கபில முனிவர் கூறினார். அது எவ்வாறு செய்ய முடியும் என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஒருவர் தன் மனதையும், உணர்வையும் தூய்மைப்படுத்த வேண்டும். இதை பக்தி யோகத்தால் செய்ய முடியும். நாரத பஞ்சராத்திரத்தில் விளக்கப்பட்டதுபோல், ஒருவருடைய மனமும் புலன்களும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் (தத்பரத்வேன நிர்மலம்). ஒருவருடைய புலன்கள் பகவானுடைய பக்தித் தொண்டில் ஈடுபடுதல் வேண்டும். அதுவே முறையாகும். மனம் எதிலாவது ஈடுபட வேண்டும். ஒருவர் மனதைக் காலியாக வைத்திருக்க முடியாது. ஆம்மனதைக் காலியாக அல்லது வெற்றிடமாக வைக்கச் சில முட்டாள்தனமான முறைகள் முயற்சிக்கப்படுகின்றன, ஆனால் அது இயலாதது. மனதைத் தூய்மைப்படுத்தும் ஒரே முறை, அதைக் கிருஷ்ணரிடம் ஈடுபடுத்துதலாகும். மனம் ஈடுபட வேண்டும். நம் மனதை கிருஷ்ணரிடம் ஈடுபடுத்தினால், இயற்கையாகவே உணர்வு முழுவதும் தூய்மையடைகிறது. உலக ஆசை, பேராசை நம் சிந்தனையில் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை


ஶ்ரீமத் பாகவதம் 3.25.13 & 16 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...