Skip to main content

விஷ்ணு ரூபமே தியானத்தின் இறுதியான இலட்சியம்

 



தத்ரைக்காவயவம் த்யாயேத் அவ்யுச்சினனேன சேதஸா
மனோ நிர்விஷயம் யுக்த்வா தத: கிஞ்சன ஸ்மரேத்
பதம் தத் பரமம் விஷ்ணோர் மனோ யத்ர ப்ரஸீததி


மொழிபெயர்ப்பு

அதன் பிறகு, விஷ்ணுவின் அங்கங்களின் மீது ஒவ்வொன்றாக, முழு உடலைப் பற்றிய கருத்திலிருந்து விலகி விடாமல் நீர் தியானிக்க வேண்டும். இவ்வாறாக, அனைத்துப் புலன் பொருட்களிலிருந்தும் மனம் விடுபடுகிறது. வேறெதைப் பற்றியும், நினைக்கக் கூடாது. பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவே பரம சத்தியமாக இருப்பதால், அவரில் மட்டுமே மனதால் பூரணமாக ஒத்துப்போக முடியும்.

பொருளுரை

விஷ்ணுவின் புறச் சக்தியால் தடுமாற்றத்திற்கு உள்ளாகும் மூடர்கள், இன்பத்தைத் தேடி அலைவதன் இறுதி இலட்சியம் முழு முதற்கடவுளாகிய ஸ்ரீ விஷ்ணுவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதுதான் என்பதை அறிவதில்லை. விஷ்ணு-தத்துவம் எனப்படுவது முழுமுதற் கடவுளின் எண்ணிலடங்காத உன்னத உருவங்களின் விரிவங்கங்களாகும். மேலும் விஷ்ணு-தத்துவத்தின் மூல உருவமாக இருப்பவர் எல்லாக் காரணங்களுக்கும் பரம காரணமான கோவிந்தன் அல்லது ஸ்ரீகிருஷ்ணராவார். எனவே, விஷ்ணுவைப் பற்றி எண்ணுவது அல்லது விஷ்ணுவின் உன்னத உடலை தியானிப்பது, குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணரைத் தியானிப்பதே தியானம் எனும் விஷயத்தில் கடைசிச் சொல்லாகும். இத் தியானத்தை பகவானின் முழு உருவத்திலிருந்து ஒருவன் விலகிச் செல்லவோ அல்லது அதை மறந்துவிடவோ கூடாது; இப்படியாக, அவரது உன்னத உடலின் வெவ்வேறு பகுதிகளை ஒவ்வொன்றாக ஒருவன் நினைக்கப் பழக வேண்டும். இப்பதத்தில், பரமபுருஷர் அருவமானவரல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஒருநபராவார். ஆனால் அவரது உடல் நம்மைப் போன்ற பந்தப்பட்ட நபர்களின் உடலாலாருந்து வேறானதாகும். இல்லாயெனில், “பிரணவ” (ஓங்கார) மந்திரத்திலிருந்து துவங்கி, விஷ்ணுவின் சரீரத்திலுள்ள அங்கங்கள் வரை தொடரும் தியானத்தை, முழுமையான ஆன்மீக பக்குவத்தை அடைவதற்காக சுகதேவ கோஸ்வாமி சிபார்சு செய்திருக்க மாட்டார். எனவே, இந்தியாவின் பெரும் ஆலயங்களிலுள்ள விஷ்ணு மூர்த்திகளின் வழிபாடு, குறைந்த அறிவுள்ள ஒரு பிரிவினரால் தப்பான அர்த்தம் கற்பிக்கப்படுவதைப் போல், வெறும் சிலை வழிபாட்டுக்குரிய ஏற்பாடுகள் அல்ல; மாறாக, அவை விஷ்ணுவின் தேகத்திலுள்ள உன்னத அங்கங்களை தியானிப்பதற்காக உள்ள வெவ்வேறு ஆன்மீகக் கேந்திரங்கள் ஆகும். பகவானின் அற்புத சக்தியினால், விஷ்ணு ஆலயத்திலுள்ள வழிபாட்டுக்குரிய விக்கிரகத்துக்கும், பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கும் வேறுபாடு இல்லை. எனவே, பெரும் அதிகாரியாகிய சுகதேவ கோஸ்வாமி இங்கு சிபார்சு செய்துள்ளதைப் போல், நிலையாக ஓரிடத்தில் அமர்ந்து, பிரணவ ஓம்காரத்தின் மீதோ அல்லது விஷ்ணுவின் உடல் அங்கங்களின் மீதோ மனதை ஒருமுனைப்படுத்த இயலாதவர்களுக்கு, ஆலயத்திலுள்ள விஷ்ணுவின் அங்கங்களின் மீது மேற்கொள்ளும் மன ஒருமை அல்லது தியானம், ஓர் எளிய வாய்ப்பாகும். ஏற்கனவே விளக்கப்பட்டதைப் போல, --ம் எனப்படும் ஆன்மீக சேர்க்கையாகிய ஓங்காரத்தின் மீது தியானத்தைச் செலுத்துவதை விட, ஆலயத்திலுள்ள விஷ்ணுவின் ரூபங்களின் மீது மனதை ஒருமுனைப் படுத்துவதால் அதிக நன்மையை சாதாரண மனிதன் அடைய முடியும். ஓங்காரத்துக்கும், விஷ்ணு ரூபங்களுக்கும் வேறுபாடு இல்லை. ஆனால் பரிபூரண மெய்ப்பொருளைப் பற்றிய விஞ்ஞானத்தில் பழக்கம் இல்லாதவர்கள், விஷ்ணு ரூபங்களுக்கும், ஓங்காரத்துக்கும் இடையில் வேறுபாட்டைக் காண்பதன் மூலமாக சச்சரவை உண்டாக்குகின்றனர். விஷ்ணு ரூபமே தியானத்தின் இறுதியான இலட்சியம் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. மேலும் இக்காரணத்தினால், உருவமற்ற ஓங்காரத்தின் மீது மனதை ஒருமுனைப்படுத்துவதை விட விஷ்ணுவின் உருவங்களின் மீது மன ஒருமை மேற்கொள்வது சிறந்ததாகும். அதோடு ஓங்கார தியானம், விஷ்ணு ரூப தியானத்தை விட அதிக கஷ்டமானதாகும்.


ஶ்ரீமத் பாகவதம் 2.1.17 / பொருளுரை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...