Skip to main content

வைஷ்ணவானாம் யதா ஸம்பு

 


வைஷ்ணவானாம் யதா ஸம்பு”: அதாவது எல்லாப் பக்தர்களிலும் சிறந்தவர் சிவபெருமானே என்று சொல்லப்படுகின்றது. ஆகையினால் பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் அனைவரும் சிவபெருமானின் பக்தர்களும் ஆவர். பிருந்தாவனத்தில் கோபீஸ்வரன் கோயில் எனப்படும் சிவபெருமான் ஆலயம் இருக்கின்றது. கோபியர்கள் சிவபெருமானை மட்டுமல்லாது காத்யாயனி என்னும் துர்கையையும் வழிபடுகின்றனர். ஆனாலும் அவர்களது நோக்கம் பகவான் கிருஷ்ணரின் கருணையைப் பெற வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. பகவான் கிருஷ்ணரின் பக்தன் சிவபெருமானை நிந்திப்பதில்லை மாறாக அவனும் சிவபெருமானை, சிறந்த பக்தர் என்று வணங்குகிறான். ஆகையினால் சிவபெருமானை வணங்கும் பக்தன், கிருஷ்ணரின் அருளைப் பெறவேண்டும் என்றே அவரை வணங்குகின்றானே ஒழிய வேறு எந்தவித பொருள் இன்பத்திற்காகவும் அல்ல. இது பகவத்கீதையிலும் (7.20) பொருட் செல்வம் வேண்டியே மக்கள் பொதுவாக பிறதேவர்களை வழிபடுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. “கானமஸ்தைஸ் தைர் ஹ்ருத ஜ்ஞானா:” பொருளாசையே ஒருவனைத் தேவர்களை வணங்கத் தூண்டுகிறது. ஆனால் ஒரு பக்தன் அவ்வாறு வணங்குவதில்லை. காரணம் அவனிடம் பௌதீக இச்சை இல்லை. இதுதான் சிவபெருமானை வழிபடும் ஒரு பக்தனுக்கும் அசுரனுக்கும் உள்ள வேறுபாடாகும். சிவபெருமானிடம் இருந்து வரத்தினைப் பெற்று அதனைத் தவறான முறையில் பயன்படுத்தும் ஒரு அசுரன் முடிவில் முழுமுதற் கடவுளால் கொல்லப்பட்டு விடுதலை பெறுகிறான்.

ஏனென்றால் சிவபெருமான் முழுமுதற் கடவுளின் சிறந்த பக்தர் என்பதோடு பகவானின் பக்தர்களை நேசிப்பவரும் ஆவார். இதனைச் சிவபெருமானே பிரசேதர்களிடம், அவர்கள் பகவானின் பக்தர்களாக இருக்கின்ற காரணத்தினாலேயே தான் அவர்களை விரும்புவதாகக் கூறுகின்றார். சிவபெருமான் பிரசேதர்களிடம் மட்டும் அன்பும் கருணையும் கொண்டவர் என்றில்லை, அவர் முழுமுதற் கடவுளின் பக்தர்கள் அனைவரிடமும் அன்புடையவர் ஆவார். அப்பக்தர்கள் மீது சிவபெருமான் அன்புமட்டுமல்ல, முழுமுதற் கடவுள் மீதும் வைத்திருக்கின்றார். இதனால் பகவானின் பக்தர்கள் சிவபெருமானை அவர் பகவான் கிருஷ்ணரின் சிறந்த பக்தர் என்று வணங்குகின்றனர். அவர்கள் அவரை தனித்த முழுமுதற் கடவுள் என்று வணங்குவதில்லை. நாம அபராதப் பட்டியலில் ஹரி நாமத்தோடு ஹரநாமத்தையும் சேர்த்து ஓத நினைப்பது குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பக்தர்கள் எப்போதும் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும் சிவபெருமான் அவர் பக்தர் என்றும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். முழுமுதற் கடவுளுக்குரிய மரியாதை அல்லது அதற்கும் மேலான மரியாதையினை ஒரு பக்தனுக்கு அளித்தல் வேண்டும். முழுமுதற் கடவுளான பகவான் இராமச்சந்திர மூர்த்தியே சிவபெருமானை சில வேளைகளில் வணங்கியிருக்கிறார். பகவானாலேயே ஒரு பக்தர் வணங்கப்படும் பொழுது, பிறபக்தர்கள் அவரைப் பகவானது நிலையில் வைத்து ஏன் வணங்கக் கூடாது? இதுதான் முடிவாகும். சிவபெருமான் அசுரர்களுக்கு தனது அருளை ஒரு சம்பிரதாயத்திற்காகவே வழங்குகிறார் என்பது இச்சுலோகத்திலிருந்து தெரிய வருகிறது. முழுமுதற் கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவனையே அவர் உண்மையில் விரும்புகிறார்.


ஶ்ரீமத் பாகவதம் 4.24.30 / பொருளுரை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...