Skip to main content

அங்கீகரிக்கப்பட்ட குரு சீட பரம்பரை மூலம் வரும் நான்கு சம்பிரதாயங்களின் முக்கியத்துவம்

 


பாகவத தர்மம், மிகவும் இரகசியமான சமயக் கோட்பாடாகும் (ஸர்வ - குஹ்யதமம், குஹ்யாத், குஹ்யதரம்) என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.


ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், “நீ எனக்குப் பிரிய நண்பன் என்பதால், மிகவும் இரகசியமான சமயத்தை உனக்கு நான் விளக்கிக் கொண்டிருக்கிறேன்.” ஸர்வ - தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ: மற்றெல்லாக் கடமைகளையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைவாயாக.” இக்கோட்பாட்டைப் புரிந்து கொள்வது மிகவும் அரிது என்றால், இதனால் என்ன பயன்? என்று ஒருவர் கேட்கக் கூடும். இதற்கு யமராஜன் பின்வருமாறு பதிலளித்தார். பிரம்ம தேவர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள் முதலானவர்களின் பரம்பரா முறையைப் பின்பற்றுபவனால் இந்த சமயக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். நான்கு சீடப் பரம்பரைகள் உள்ளன: ஒன்று பிரம்ம தேவரிலிருந்து வருகிறது, இரண்டாவது சிவபெருமானிலிருந்து வருகிறது, மூன்றாவது லக்ஷ்மி தேவியிலிருந்து வருகிறது, நான்காவது குமாரர்களிடமிருந்து வருகிறது. பிரம்ம தேவரிலிருந்து வரும் சீடப்பரம்பரை பிரம்ம - சம்பிரதாயம் என்றும், சிவ பெருமானிலிருந்து வருவது ருத்ர - சம்பிரதாயம் என்றும், லக்ஷ்மி தேவியிலிருந்தும் வருவது ஸ்ரீ - சம்பிரதாயம் என்றும், குமாரர்களிலிருந்து வருவது குமார - சம்பிரதாயம் என்றும் அழைக்கப்படுகின்றன. மிகவும் இரகசியமான சமய முறையைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன், இந்நான்கு சம்பிரதாயங்களுள் ஒன்றைத் தஞ்சமடைய வேண்டும். பத்ம புராணம் கூறுகிறது, ஸம்ப்ரதாய - விஹீனா யே மந்த்ராஸ் தே நிஷ்ஃபலா மதா: ஒருவன் அங்கீகரிக்கப்பட்டுள்ள நான்கு சீடப் பரம்பரைகளைப் பின்பற்றாவிடில், அவனுடைய தீட்சை அல்லது தீட்சை மந்திரம் பயனற்றதாகும். இன்று பல அபஸம்ப்ரதாயங்கள் உள்ளன. அதாவது, அங்கீகரிக்கப்படாதவையும், பிரம்ம தேவன், சிவ பெருமான், குமாரர்கள் அல்லது லக்ஷ்மியைப் போன்ற அதிகாரிகளுடன் பாரம்பரியத் தொடர்பு இல்லாத பல சம்பிரதாயங்கள் இன்று முளைத்துள்ளன. இத்தகைய அபஸம்ப்ரதாயங்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பிரதாயங்களில் தீட்சை பெறுவது பயனற்ற கால விரயமாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில், ஒருவன் உண்மையான சமயக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு இது ஒருபோதும் உதவாது.   ( ஶ்ரீமத் பாகவதம் 6.3.21-22 / பொருளுரை 


பிரம்ம  மத்வ கௌடீய சம்பிரதாயம்


பிரம்ம தேவர் நாரத முனிவரின் குருவாவார். நாரதர் வியாச தேவரின் குரு, வியாசதேவர் மத்வாசாரியரின் குரு. இவ்வாறாக இந்த கௌடீய மத்வ சம்பிரதாயம் நாரத முனிவரின் சீடப் பரம்பரை மூலமாக வருகிறது. இந்த சீடப் பரம்பரையின் அங்கத்தினர்கள் அதாவது, கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அங்கத்தினர்கள் நாரத முனிவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற திவ்ய மந்திரத்தை பாடிப் பரவ வேண்டும். அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று, ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதன் மூலமும், பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம், மற்றும் சைதன்ய சரிதாம்ருதம் ஆகியவற்றை உபந்நியாஸம் செய்வதன் மூலம், வீழ்ந்த ஆத்மாக்களைக் கடைத்தேற்ற வேண்டும். இது பரமபுருஷரை மிகவும் திருப்திப்படுத்தும். நாரத முனிவரின் உபதேசங்களை உண்மையாகப் பின்பற்றுபவனால் ஆன்மீக முன்னேற்றத்தை அடைய முடியும். நாரத முனிவரை ஒருவன் திருப்திப்படுத்தினால், பரமபுருஷராகிய ரிஷீகேசரும் திருப்தியடைவார் (யஸ்ய ப்ரஸாதாத் பகவத் - ப்ரஸாத்:) இப்போதுள்ள ஆன்மீக குரு நாரத முனிவரின் பிரதிநிதியாவார்; நாரதரின் உபதேசங்களுக்கும், தற்போதுள்ள ஆன்மீக குருவின் உபதேசங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. நாரத முனிவர், தற்போதைய ஆன்மீக குரு ஆகிய இருவருமே ஸ்ரீ கிருஷ்ணரின் அதே போதனைகளைத்தான் உபதேசிக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (18.65.66) கூறுகிறார்:


மன் - மனா பவ மத் - பக்தோ
மத் - யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே
ப்ரதிஜானே ப்ரியோ ‘ஸி மே
ஸர்வ - தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ - பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மா சுச:

“எப்பொழுதும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டு என் பக்தனாய் ஆவாயாக. என்னை வழிபட்டு, உனது வணக்கத்தை எனக்குச் சமர்ப்பிப்பாயாக. இவ்விதமாக நீ தவறாது என்னிடம் வந்து சேருவாய். நீ எனது பிரிய நண்பனென்பதால், உனக்கு இந்த வாக்குறுதியை நான் அளிக்கிறேன். எல்லா வகையான மதங்களையும் துறந்து, என்னிடமே சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கிறேன். பயப்படாதே.” ( ஶ்ரீமத் பாகவதம் 6.5.22 / பொருளுரை 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...