Skip to main content

கிருஷ்ண உணர்விற்குப் புதிதாக வரும் ஒருவன் பெருந்தீனி தின்பதினால் பக்தியில் சீர்குலைகிறான்

 


த்ருப்தோ ஹ்ருஷ்ட: ஸுத்ருப்தஸ்ச கந்தர்பாக்ருஷ்ட-மானஸ:
ந வ்ய சஷ்ட வராரோஹாம் க்ருஹிணீம் க்ருஹ-மேதினீம்


மொழிபெயர்ப்பு

உணவு உண்டு தனது தாகம் தணிந்தபின் மன்னர் புரஞ்சனன் தம் மனமெங்கும் மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தார். உயர் உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவர் மன்மதலால் கவரப்பட்டார். தன்னை இல்லற வாழ்வில் மிகவும் திருப்தியுடன் வைத்திருக்கும் தன் மனைவியைத் தேடும் ஆசையினால் அவர் உந்தப்பட்டார்.

பொருளுரை

தன்னை கிருஷ்ண உணர்வு நிலைக்கு உயர்த்தக்கொள்ள விரும்புபவனுக்கு இச்சுலோகம் மிகவும் இன்றியமையாததாகும். ஒருவன் தன் ஆன்மீக குருவினால் தீட்சையளிக்கப்படும் பொழுது அவன்தன் பழக்கவழக்கங்கள் மாற்றுகிறான். விரும்பத்தகாத உணவுகளை உண்பது அல்லது புலால் உண்பது, மது வருந்துதல், தவறான பாலுறவு கொள்ளுதல், சூதாடுதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுவதில்லை. “ஸாத்துவிக ஆகாரம்” என்று சாத்திரங்களில் கோதுமை, அரிசி, காய்கறிகள், பழங்கள், பால், சர்க்கரை போன்றவைகளினாலான உணவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் சில நேரங்களில் தீட்சை பெற்றவன் பிரஸாதம் என்ற பெயரில் ஆடம்பரமான உணவுகளை உண்கிறான். அவன் தனது கடந்தகால பாவ வாழ்ககையினால் மன்மதனால் கவரப்பட்டு, சிறந்த உணவுகளைத் தின்னும் பெருந்தீனிக்காரனாகிறான். கிருஷ்ண உணர்விற்குப் புதிதாக வரும் ஒருவன் பெருந்தீனி தின்பதினால் சீர்குலைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. தூய கிருஷ்ண உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவன் மன்மதக் கவர்ச்சிக்கு ஆளாகிறான். பிரம்மச்சாரி என்பவன் பெண்களினால் கிளர்ச்சியடைகிறான். வானப்பிரஸ்தன் தன் மனைவியுடன் பாலுறவு கொள்ளும் கவர்ச்சிக்கும் ஆளாகிறான். அல்லது அவன் வேறொரு மனைவியைத் தேடத் தொடங்கலாம். சில உணர்ச்சி கொந்தளிப்பினால் அவன் தன் மனைவியை நீங்கி ஆன்மீககுரு மற்றும் பக்தர்களுடன் தொடர்பு கொள்ளலாம். ஆயினும் அவனதுகடந்த கால பாவ வாழ்க்கையினால் அவன் நிலைத்திருக்க மாட்டான். கிருஷ்ண உணர்விற்கு உயர்வதற்குப் பதிலாக அவன் தரம் தாழ்கிறான். மன்மதனால் கவரப்பட்டதினால் அவன் பாலுறவு இன்பத்திற்காக மற்றொரு மனைவியைத் தேடுகிறான். கிருஷ்ண உணர்வு பாதையிலிருந்து ஒரு புதிய பக்தன் உலக வாழ்வில் வீழ்வது பற்றி நாரதமுனிவரால் ஸ்ரீமத் பாகவதத்தில் (1.5.17) விளக்கப்பட்டிருக்கிறது.


த்யக்த்வா ஸ்வ தர்மம் சரணாம்புஜம் ஹரேர்
பஜன்ன அபக்வோ (அ)த பதேத் ததோ யதி
யத்ர க்வ வாபத்ரம் அபூத் அமுஷ்ய கிம்
கோ வார்த ஆப்தோ (அ)பஜதாம் ஸ்வ-தர்மத:

இது குறிப்பிடுவது என்னவென்றால் ஒரு புதிய பக்தன் அவனது முதிர்ச்சியின்மையினால் கிருஷ்ண உணர்வுப் பாதையின் தரம் தாழ்ந்தாலும், கிருஷ்ணருக்கு அவன் செய்யும் தொண்டு வீணாகப்போவதில்லை. ஒருவன் தனது குடும்ப கடமையில் அல்லது சமுதாயக் கடமையில் ஊறியவனாக இருந்து கிருஷ்ண உணர்வு அடையாதவனாக இருந்தான் என்றால் அவன் பெறப்போகும் நன்மை எதுவுமில்லை. கிருஷ்ண உணர்விற்கு வரும் ஒருவன் தடைசெய்யப்பட்டிருக்கும் செயல்களில் மிகவும் எச்சரிக்கையுடனும் விலகியும் இருத்தல்வேண்டும். இது ரூப கோஸ்வாமியினால் அவரது “உபதே ஸாம்ருதத்தில்” விளக்கப்பட்டிருக்கிறது.



ஒரு புதிய பக்தன் தேவைக்கு அதிகமான உண்ணவோ, பணம் சேர்க்கவோ கூடாது. தேவைக்கு மேல் உண்பதும் பொருள் சேர்ப்பதும் “அத்யாஹாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த “அத்யாஹாரத்திற்காக” ஒருவன் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கிறது. இதுவே “ப்ரயாஸம்” எனப்படும். மேலோட்டமாக ஒருவன் தன்னை ஒழுங்குமுறை விதிகளிடத்து நம்பிக்கையுடையவனாகக் காட்டிக் கொள்ளலாம். ஆயினும் அவன் அவ்விதிகளிடத்து தன்னை நிலையாக இணைத்துக் கொள்வதில்லை. இதுவே “நியமாக்ரஹம்” என்றழைக்கப்படுகிறது. விரும்பத்தகாத மனிதர்களுடன் அல்லது ஜன ஸங்கத்துடன் கலப்பதினால் ஆசை மற்றும் பேராசை என்னும் கறைபடிந்தவனாகி பக்தித் தொண்டு என்னும் பாதையிலிருந்து கீழே வீழ்ந்துவிடுகிறான்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 4.26.13 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...