Skip to main content

பக்குவமான கிருஷ்ண உணர்வு

 


சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத்பர:
புத்தியோகம் உபாஷ்ரித்ய மச்சித்த: ஸததம்


மொழிபெயர்ப்பு


எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக. இத்தகு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு.


பொருளுரை


கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன், உலகின் எஜமான னைப் போன்று செயல்படுவதில்லை. அவன் ஒரு சேவகனைப் போன்று, பரம புருஷரின் முழுமையான வழிகாட்டுதலின் கீழ் செயல்பட வேண்டும். சேவகனுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் கிடையாது. அவன் எஜமானரின் கட்டளைப்படி மட்டுமே செயல்படுகின்றான். உன்னத எஜமானருக்காகத் தொண்டு செய்யும் சேவகன், இலாப நஷ்டங்களினால் பாதிக்கப்படுவ தில்லை. அவன் தனது கடமையை பகவானது கட்டளையின்படி நம்பிக்கையுடன் நிறைவேற்றுகிறான். அர்ஜுனன் கிருஷ்ணருடைய சொந்த வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்தான், ஆனால் கிருஷ்ணர் இல்லாதபோது ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தற்போது விவாதிக்கலாம். இந்தப் புத்தகத்தில் கிருஷ்ணரால் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுவதாலும், கிருஷ்ணருடைய பிரதிநிதியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதாலும், ஒருவன் அதே பலனை அடைய முடியும். மத்பர: என்னும் சமஸ்கிருதச் சொல் இப்பதத்தில் மிகவும் முக்கியமானது. கிருஷ்ண உணர்வில், கிருஷ்ணரைத் திருப்திப்படுத்து வதற்காக மட்டும் செயலாற்றுவதைத் தவிர வாழ்வில் எந்த நோக்கமும் ஒருவனுக்கு இல்லை என்பதை இது குறிப்பிடுகின்றது. மேலும், அவ்வாறு செயல்படும்போது, அவன் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்: “இந்தக் குறிப்பிட்ட கடமையை ஆற்றுவதற்காக நான் கிருஷ்ணரால் நியமிக்கப்பட்டுள்ளேன்.” இந்த எண்ணத்தில் செயல்படும் போது, அவன் இயற்கையாகவே கிருஷ்ணரைப் பற்றி நினைத்தாக வேண்டும். இதுவே பக்குவமான கிருஷ்ண உணர்வு. இருப்பினும், மனம் போன போக்கில் எதையாவது செய்துவிட்டு, அதன் பலனை முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணித்தல் கூடாது. அத்தகு கடமை கிருஷ்ண உணர்வின் பக்தித் தொண்டல்ல. ஒருவன் கிருஷ்ணருடைய ஆணைக்கேற்ப செயல் பட வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயம். கிருஷ்ணரின் அந்த ஆணை, சீடப் பரம்பரையின் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிட மிருந்து வருகின்றது. எனவே, ஆன்மீக குருவின் கட்டளையினை வாழ்வின் முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அடைந்து அவரது அறிவுரைகளுக்கு ஏற்ப செயல்பட்டால், ஒருவன் வாழ்வின் பக்குவத்தை கிருஷ்ண உணர்வில் அடைவது நிச்சயம்.



( ஶ்ரீமத் பகவத் கீதை 18.57 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...