Skip to main content

மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய், அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது எனவே . . .



ப்ராருத்வ்யம் ஏனம் தத் அதப்ர - வீர்யம்
உபேக்ஷயாத்யேதிதம் அப்ரமத்த
குரோர் ஹரேஸ் சரணோபா ஸனாஸ்த்ரோ
ஜஹி வ்யவீகம் ஸ்வயம் ஆத்ம - மோஷம்


மொழிபெயர்ப்பு


அடக்க முடியாத இந்த மனமே உயிர் வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான். ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ, இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது. உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும். இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது. , மன்னனே! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம் மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ள முயல்வாயாக. இதனைச் செய்வாயாக.

பொருளுரை

மனிதனை வெல்லவோ புறக்கணிக்கவோ ஒரே ஒரு எளிமையான கருவிதான் இருக்கிறது. மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய், அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனவே மனதின் கட்டளைகளுக்குப் பணியாதிருக்க நாம் மிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். படிப்படியாக மனம் ஆத்மாவின் கட்டளைக்குப் படியுமாறு பயிற்சிப்படுத்தப்பட வேண்டும். மனதின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ஒன்றும் இல்லை. ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், மனதைக் கட்டுப்படுத்த ஒருவன் அதிகாலை விழித்தது முதல் இரவு உறங்கும்வரை காலணியால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனை ஒருவன் செய்யவில்லையெனில் மனதின் ஆணைகளுக்கு அடங்கி ஆக வேண்டியுள்ளது. மற்றொரு சிறந்த முறை ஆன்மீக குருவின் கட்டளைகளைக் கடுமையாகப் பின்பற்றி இறைபணியில் ஈடுபடுவதாகும். பிறகு மனத் தானே கட்டுப்பாட்டிற்கு வரும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஸ்ரீல ரூபகோஸ்வாமிக்கு உபதேசிக்கிறார்:

ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோண பாக்யவான் ஜீவ
குரு க்ருஷ்ண ப்ரஸாதே பாய பக்தி லதா பீஜ

ஒருவன் பக்தித் தொண்டின் விதையினை குரு மற்றும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் கருணையினால் பெறும்பொழுது அவனது உண்மை வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஆன்மீக குருவின் கட்டளைக்கு ஒருவன் கீழ்ப்படியும்பொழுது கிருஷ்ணரின் கருணையினால் அவன் மனதிற்குச் செய்யும் தொண்டிலிருந்து விடுதலை பெறுகிறான்.



(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.11.17 - பொருளுரை )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...