Skip to main content

“க்ராம்ய வார்தா நா கஹிபே” உலகம் பொருள் பற்றிய செய்திகளை தேவையின்றிப் பேசக்கூடாது.

 




ஒரு கழுதையும், புலியும் காட்டில் பேசிக்கொண்டே நடந்தன. வழியில் பச்சைப் பசேல் என்று புல் வெளியைப் பார்த்த கழுதை, “ஆஹா, நீல நிறத்தில் இந்தப் புல்வெளி எத்தனை அழகாக இருக்கிறது” என்றது. அதிர்ச்சியடைந்த புலி, “என்ன உளறுகிறாய்?, பச்சை நிறத்திலிருக்கும் புல்லைப் பார்த்து நீலம் என்று சொல்கிறாயே” என்று கேட்டது.


“உளறுவது நீயா அல்லது நானா? புல் நீல நிறம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை” என்றது கழுதை. புலி, கழுதைக்கிடையே, வாக்குவாதம் தடிக்க, இரண்டும் காட்டின் ராஜா சிங்கத்திடம் சென்று தங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதென முடிவு செய்தன. சிங்கத்தின் சிம்மாசனத்தை அடைந்த கழுதை பெருத்த குரலில், “அரசே, புல்லின் நிறம் நீலம் என்பதுதானே சரி” என்று கேட்டது.


“உன் மனதிற்கு புல் நீல நிறமாகத் தோன்றினால், அது நீல நிறம்தான்” என்றது சிங்கம்.


“சிங்கராஜா, புல் நீல நிறம் என்பதை புலி ஒத்துக்கொள்ள மறுக்கிறது. புல்லின் நிறம் பச்சை என்று தேவையற்ற வாதம் செய்கிறது. உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிற புலிக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது.

“புலி காட்டை மூன்று முறை சுற்றி வர வேண்டும்” என்று சிங்க ராஜா கட்டளையிட, கழுதை மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றது.


புலி, சிங்க ராஜாவிடம், “அரசே, உங்களுக்குத் தெரியும் புல் பச்சை நிறம் என்று. நான் சொன்னதுதான் சரியென்றும் தெரியும். அப்படியிருந்தும் தவறு செய்யாத எனக்கு எதற்கு தண்டனை” என்று கேட்டது.


சிங்கம் சொல்லியது. :”நீ புத்திசாலியான மிருகம். உனக்கு நன்றாகத் தெரியும் புல்லின் நிறம் பச்சை என்று. அப்படித் தெரிந்தும் உன்னைவிட அறிவில் குறைந்த கழுதையுடன் வாதம் செய்தாய். அதுவுமில்லாமல், இந்த கழுதையுடன் அரச சபைக்கு மத்தியஸ்தம் செய்துகொள்ள வந்த காரணத்தால், இந்த சபையின் நேரத்தையும் வீணடித்தாய். அதற்காகத்தான் இந்த தண்டனை.”


இந்த கதையால் கிடைக்கும் நீதி என்ன?


நம்முடைய வாழ்க்கையில் பல அறிவாளிகள், தங்களுடைய பொன்னான நேரத்தை, தங்களைவிட அறிவு குறைந்தவர்களிடமும், “தான் சொல்வதுதான் சரி” என்று நம்புகின்ற தான்தோன்றி மனிதர்களிடமும் தேவையற்ற வாதம் செய்து,வீணடிக்கிறார்கள்.


அறிவாளியுடன் செய்கின்ற வாதம், நம்முடைய கருத்தில் தெளிவு பிறக்க உதவும். நம் சிந்தனைகளை உயர்த்தும். ஆனால், “எனக்கு எல்லாம் தெரியும், நானே அறிவாளி” என்று நம்புபவன் செய்வது வாதமல்ல; அது வரட்டுப் பிடிவாதம். இவர்களுடன் வாதமிட்டு நம் நேரத்தையும் நம் சக்தியையும் வீணடிப்பது அறிவற்ற செயலாகும்.



தூய பக்தர்களின் அடையாளம்


யத்ரோத்மஸ்லோக - குணானுவாத:
ப்ரஸ்தூயதே க்ராம்ய - கதா - விகாத:
நிஷேவ்யமாணோ ()னுதினம் முழுக்ஷோர்
மதிம் ஸதீம் யச்சதி வாஸுதேவ


மொழிபெயர்ப்பு

இங்கே குறிப்பிடப்படும் தூய பக்தன் யாவர்? தூய பக்தர்களின் கூட்டத்தில் உலக விஷயங்களான அரசியல், சமூகவியல் பற்றிய கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கே இடமில்லை. தூய பக்தர்களின் கூட்டத்தில் முழுமுதற் கடவுளின் குணங்கள், வடிவங்கள், லீலைகள் பற்றிய கலந்துரையாடல் மட்டுமே இடம் பெறும். அவரே முழு கவனத்துடன் போற்றி வளர்க்கப்படுகிறார். தூய பக்தர்களின் கூட்டத்தில் இவற்றை மரியாதையுடன் தொடர்ந்து கேட்பதினால் முழு மெய்ப்பொருளுடன் இணைய வேண்டும் என்று விரும்புபவன் கூட அந்த எண்ணத்தைக் கைவிட்டு படிப்படியாக வாசுதேவரின் தொண்டில் பற்றுடையவனாகிறான்.


பொருளுரை


தூய பக்தர்களின் அடையாளம் என்னவென்று இங்கே விளக்கப்பட்டிருக்கிறது. தூய பக்தன் உலகியல் விஷயங்களில் ஆர்வமுடையவனாக இருப்பதில்லை. ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனது பக்தர்கள் உலக விஷங்கள் பற்றி பேசக் கூடாது என்று கடுமையான தடை விதித்திருந்தார். “க்ராம்ய வார்தா நா கஹிபேஉலகம் பொருள் பற்றிய செய்திகளை தேவையின்றிப் பேசக்கூடாது. இவ்வாறு பேசி ஒருவன் தனது காலத்தை வீணாக்கக் கூடாது. ஒரு பக்தனின் வாழ்வில் இது முக்கியமானதாகும். முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதைவிட ஒரு பக்தனிடம் வேறு ஆசை இருத்தல் கூடாது. கிருஷ்ண பக்தி இயக்கம், மக்களை ஒர்நாளில் இருபத்தி நான்கு மணி நேரமும் பகவானின் பெருமையில் ஈடுபட்டுச் சேவை செய்யவே, துவங்கப்பட்டதாகும். இம்மையத்தின் மாணவர்கள் கிருஷ்ண உணர்வை வளர்ப்பதில் அதிகாலை ஐந்து முதல் இரவு பத்து மணிவரை ஈடுபடுகின்றனர். தேவையற்ற அரசியல், சமூகவியல், நடப்புச் செய்திகள் பேசுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதில்லை. இவையெல்லாம் தத்தமது பாதையில் செல்வன. ஒரு பக்தனின் முழுக் கவனம் கிருஷ்ணருக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டு செய்வதில் மட்டுமே இருக்கும்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.12.13 - பொருளுரை )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...