Skip to main content

பௌதீக நன்மை பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா போலி சாமியார்களையும், யோகிகளையும், துறவிகளையும் மலிவான ஆசிகளைப் பெற அணுகுகிறான்

 


ஆன்மீக உணர்விற்குத் தங்கள் சொந்த வழிகளை உருவாக்கும் ஏமாற்றுக்காரர்கள் எப்போதும் இருக்கின்றனர். சில பௌதீக நன்மை பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா இதுபோன்ற போலி சாமியார்களையும், யோகிகளையும், துறவிகளையும் மலிவான ஆசிகளைப் பெற அணுகுகிறான். ஆனால் அவன் ஆன்மீகமான அல்லது பௌதீகமான எந்தவொரு நன்மையும் அவர்களிடமிருந்து பெறுவதில்லை. இக்காலத்தில் மந்திர, தந்திரங்கள் செய்யும் ஏராளமான ஏமாற்றுக்காரர்கள் இருக்கின்றனர். தங்கள் அடியவர்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்த அவர்கள் தங்கத்தை கூட உண்டாக்கிக் காட்டுகின்றனர். அவர்கள் அடியவர்களும் அவர்களை கடவுள் என்று நம்புகின்றனர். கலியுகத்தில் இதுபோன்ற ஏமாற்று முதன்மையாக இருக்கின்றது. அதனால்தான் விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர உண்மையான குரு யார் என்று பின்வருமாறு விளக்குகிறார்.

ஸம்ஸார - தாவாவை - வீட - லோக
த்ராணாய காருண்ய - கனாகனத்வம்
ப்ராப்தஸ்ய கல்யாண - குணார்ணவஸ்ய
வந்தே குரோ: ஸ்ரீ - சரணாரவிந்தம்

பௌதீக உலகில் எரியும் நெருப்பான வாழ்க்கைப் போராட்டத்தினை அணைக்கக் கூடிய குருவை ஒருவன் அணுகவேண்டும். மக்கள் ஏமாற விரும்பி மந்திர தந்திரம் செய்யும் யோகிகளிடமும், சுவாமிகளிடமும் செல்கின்றனர். ஆனால் மந்திர தந்திரங்கள் பௌதீக உலகின் துன்பங்களைப் போக்குவதில்லை. கடவுளாவதற்குத் தங்கத்தை உண்டாக்கும் சாமர்த்தியமே அடிப்படை என்றால் டன்டன்னாகத் தங்கத்தைத் தன்னுள் வைத்திருக்கும் இப்பிரபஞ்சத்தின் எஜமானரானக் கிருஷ்ணரை ஏன் கடவுளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது? முன்பே குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் தங்கத்தின் நிறமானது சதுப்பு நிலத்தில் தோன்றும் ஒளியுடனும், மஞ்சள்நிற மலத்துடனும் ஒப்பிடப்பட்டிருக்கிறது அதனால் தங்கத்தை உண்டு பண்ணும் குருக்களிடம் ஒருவன் கவர்ச்சியடையக் கூடாது. மாறாக ஜடபாதர் போன்ற பக்தரை அடைவதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். ஜடபாதர் ரஹுகண மகாராஜாவிற்கு நன்கு உபதேசித்ததினாலேயே அவர் உடற்கருத்திலிருந்து விடுதலை பெற்றார். போலிகுருவை ஏற்றுக் கொள்வதினால் ஒருவன் மகிழ்ச்சி பெறமுடியாது. ஸ்ரீமத் பாகவதத்தில் அறிவுறுத்தியுள்ளபடி ஒரு குருவினை ஏற்றுக் கொள்ள வேண்டும் (11.3.21). “தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிஜ்ஞாஸு ஸ்ரேய உத்தமத்”. வாழ்வின் உயர்ந்த நலன்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காக ஒருவன் ஒர் உண்மையான குருவை அணுக வேண்டும். அப்படிப்பட்ட குரு பின்வருமாறு விளக்கப்படுகிறார். “ஸாபதே பரே நிஷ்னாதம்”. இவர் போன்ற குரு தங்கத்தையோ அல்லது ஏமாற்று மொழிகளையோ உண்டாக்குவதில்லை. இவர் வேத ஞான முடிவுகளில் கரை கண்டவராக இருப்பார் (வேதைஸ் ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய). இவர் பௌதீக மாசுக்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று முற்றிலும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட்டிருப்பார். இவர் போன்ற குருவின் தாமரைத் திருவடிகளின் தூசியினைப் பெறும் திறனுடையவனாக ஒருவன் இருந்தானென்றால் அவன் வாழ்க்கை வெற்றிபெறும். இல்லையேல் அவனுடைய வாழ்க்கை இப்பிறப்பு மறுப்பிறப்பு இரண்டிலும் குழப்பமுறும்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.14.13 - பொருளுரை )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...