Skip to main content

சிவம் என்றால் “மங்கலம்”.

 


யத் த்வி - அக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்
ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆஸு ஹந்தி தத்
பவித்ர - கீர்திம் தம் அலங்க்ய - ஸாஸனம்
பவான் அஹோ த்வேஷ்டி ஸிவம் ஸிவதேர:


மொழிபெயர்ப்பு


சதீ தொடர்ந்து கூறினாள்: எனது அன்பான தந்தையே, நீர் சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டதின் மூலம் மிகப் பெரியத் தவரைச் செய்திருக்கிறீர். ‘சி’ மற்றும் ‘வ’ என்னும் இரண்டெழுத்துக்களுடைய சிவ என்னும் நாமம் ஒருவரது எல்லாப் பாவங்களையும் நீக்குகிறது. அவரது ஆணைகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. சிவபெருமான் எப்போதும் தூய்மையானவர். அவர் மீது உம்மைத் தவிர வேறு யாராலும் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியாது.


பொருளுரை


சிவபெருமான் பௌதீக உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் மிகச் சிறந்த மகாத்மாவாக விளங்குகிறார். உடலோடு ஆத்மாவை அடையாளம் காணும் மனிதர்களுக்கு அவரத நாமம் மிகவும் மங்கலமானதாகும். இதுபோன்ற மனிதர்கள் சிவபெருமானைச் சரண் புகுந்தால், படிப்படியாகத் தாம் இந்தப் பரு உடல் அல்ல, ஆத்மா என்று உணர்ந்து கொள்வர். சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். உடலினுள் இருக்கும் ஆத்மா மங்கலகரமானதாகும். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி:’ “நான் பிரம்மம்”. இவ்வுணர்தலே மங்கலம் ஆகும். ஒருவன் தான் ஆத்மா என்று உணராதவரை அவன் எதைச் செய்தாலும் அது அமங்கலம் ஆகும். சிவம் என்றால் “மங்கலம்”. சிவபெருமானின் பக்தர்கள் படிப்படியாக ஆன்மீக அடையாளம் கண்டுணரும் நிலையினை எய்துகின்றனர். ஆனால் இது மட்டும் போதாது. மங்கலகரமான வாழ்க்கை ஆன்மீக அடையாளத்தினைக் கண்டுணரும் நிலையிலிருந்தே தொடங்குகிறது. அதற்கும் மேலாக பரமாத்மாவுடன் தனக்கிருக்கும் உறவினைப் பற்றியெல்லாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. ஒருவன் சிவபெருமானின் உண்மையான பக்தனாக இருந்தால் அவன் ஆத்ம உணர்தலை அறியும் நிலையினை அடைகிறான். ஆனால் அவன் புத்திமானாக இல்லாதிருக்கும் பட்சத்தில், தான் ஆத்மா (அஹம் ப்ரஹ் மாஸ்மி) என்னும் உணர்வினைப் பெற்று அத்துடன் நின்றுவிடுகிறான். அவன் அறிவுடையோனாக இருந்தால் அவனும் சிவபெருமான் போல் சதா சர்வகாலமும் வாசுதேவரின் சிந்தனையிலேயே மூழ்கியிருப்பான். முன்னரே, ஸத்த்வம் விஷுத்தம் வஸுதேவ ஷப்திதம்: என்று விளக்கப்பட்டிருக்கிறது. வாசுதேவராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளையே சிவபெருமான் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பார். இவ்வாறு சிவபெருமானின் மங்கலகரமான நிலையினை ஒருவன் உணரவேண்டும் என்றால் அவன் விஷ்ணு வணக்கம் செய்தல் வேண்டும். ஏனென்றால் சிவபெருமானே சிவபுராணத்தில் வழிபாடுகள் அனைத்திலும் சிறந்தது விஷ்ணு வழிபாடே என்று கூறுகிறார். பகவான் விஷ்ணுவின் தலைசிறந்த பக்தராதலினால் சிவபெருமான் வணங்கப்படுகிறார். ஆகையினால் சிவபெருமானையும் பகவான் விஷ்ணுவையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் தவறினை யாரும் செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அதுவும் நாத்திகக் கருத்தேயாகும். மேலும் வைஷ்ணவீய புராணம் மேலான முழுமுதற் கடவுளாக விஷ்ணு அல்லது நாராயணரே விளங்குகிறார் என்றும் அவரோடு வேறு எவரையும் சமமாக வைத்துப் பார்க்கக் கூடாது என்றும், அவர் பிரம்மதேவனோ, சிவபெருமானோ அல்லது பிற தேவர்களோ யாரையும் அவரோடு ஒப்பிடக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.






Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...