Skip to main content

பக்தர்கள் சங்கத்தின்-முக்கியத்துவம்

 


பதம் 25

ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய ஸம்விதோ
பவந்தி ஹ்ருத் கர்ணரஸாயனா: கதா:
தஜ் ஜோஷணாத் ஆஸூ அபவர்க வர்த்மனி
ச்ரத்தாரதிர்பக்திர் அனுக்ரமிஷ்யதி


மொழிபெயர்ப்பு

தூய பக்தர்களின் தொடர்பில், பரம புருஷ பகவானின் செயல்கள் மற்றும் லீலைகள் பற்றிக் கலந்துரையாடுவது காதுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாகும். அந்த அறிவு பதியவைக்கப்படுவதால் ஒருவர் படிப்படியாக முக்திக்கான வழியில் முன்னேறுகிறார், அதன் பின்னர், அவர் விடுதலையடைகிறார், அவர் கவனம் நிலைபெறுகிறது. பின்னர் உண்மை பக்தியும் பக்தித் தொண்டும் தொடங்குகின்றன.

பொருளுரை

கிருஷ்ண உணர்விலும் பக்தித் தொண்டிலும் முன்னேறுவதன் முறை இங்கு வர்ணிக்கப்படுகிறது. முதல் கருத்து என்னவென்றால் ஒருவர் கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் மற்றும் பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்களின் தொடர்பை விரும்புதல் வேண்டும். அம்மாதிரித் தொடர்பு இன்றி ஒருவர் முன்னேற்றம் அடைய இயலாது என்பதாகும். புத்தக அறிவு அல்லது படிப்பு இவற்றால் மட்டும் ஒருவர் போற்றத்தக்க வகையில் முன்னேற்றம் அடைய இயலாது. ஒருவர் பொருளாசை உடைய மனிதர்களின் தொடர்பை விட்டுவிட வேண்டும், பக்தர்களின் தொடர்பை விரும்ப வேண்டும். ஏனென்றால், பக்தர்களின் தொடர்பின்றி ஒருவர் பகவானின் செயல்களைப் புரிந்துகொள்ள முடியாது. பொதுவாக மக்கள் பரம சத்தியத்தின் அருவத் தோற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். அவர்கள் பக்தர்களுடன் தொடர்புகொள்ளாததால், அவர்கள் பரம சத்தியம் ஒரு மனிதராக, தனிப்பட்ட செயல்கள் உடையவராக இருக்க முடியம் என்பதைப் புரிந்துகொள்ள இயலாதவர்கள். இது மிகவும் கடினமான பொருளாகும், ஒருவர் பரம சத்தியத்தை தனிப்பட்ட முறையில் புரிந்து கொண்டால் அன்றி, பக்தி கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. தொண்டு அல்லது பக்தி எந்த அருவத்துக்கும் அளிக்க முடியாதது. தொண்டு ஒரு தனிப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும், பக்தரல்லாதாரால் ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவானின் செயல்கள் வர்ணிக்கப்பட்டுள்ள வேறு எந்த வேத இலக்கியத்தைப் படிப்பதன் மூலம் கிருஷ்ண உணர்வைப் போற்ற முடியாது; அவர்கள் இந்தச் செயல்களைப் போலி என்றும் உருவாக்கப்பட்ட கதைகள் என்றும் நினைக்கிறார்கள். ஏனென்றால், ஆன்மீக வாழ்வு அவர்களுக்குச் சரியான மனநிலையில் விளக்கப்படவில்லை. பகவானின் தனித் தன்மை வாய்ந்த செயல்களைப் புரிந்துகொள்ள, ஒருவர் பக்தர்களின் தொடர்பை விரும்ப வேண்டும், அத்தகைய தொடர்பினால், ஒருவர் பகவானின் தெய்வீகச் செயல்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்பொழுது, ஆழ்ந்து நினைக்கும் பொழுது, விடுதலைக்கான வழி திறக்கிறது, அவர் வீடுபேறு அடைகிறார். பரம புருஷ பகவானிடம் உறுதியான நம்பிக்கை கொண்டவர் நிலைத்து நிற்கிறார், பகவானுடனும், பக்தர்களுடனும் அவர் கொள்ளும் தொடர்புக்கான கவனம் அதிகரிக்கின்றது. பக்தர்களுடன் தொடர்பு என்பது பகவானுடன் கொள்ளும் தொடர்பு என்று பொருள்படும். இந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் பக்தர் பகவானிடம் தொண்டு செய்வதற்கான உணர்வு நிலையை வளர்த்துக் கொள்கிறார். பின்னர், பக்தித் தொண்டாகிய திவ்யமான நிலையில் இருந்து, அவர் படிப்படியாக முழுமை அடைகிறார்.


(ஸ்ரீமத்-பாகவதம்  3.25.25 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...