Skip to main content

நாரதரின் கருணையும் கைலாஷின் விருப்பமும்.



நாரதரின் கருணையும் கைலாஷின் விருப்பமும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒரு உயிர்வாழி எவ்வாறு தன்னுடைய விருப்பத்திற்கேற்ப, இறந்தபிறகு ஒரு உடலிலிருந்து மற்றோரு உடலிற்கு செல்கிறது என்பதை பின்வரும் கதையிலிருந்து அறியலாம்.

கைலாஷ் என்ற ஒருவன் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தான். ஒரு நாள் மாமுனிவரான நாரதர், அவனிடம் வந்து, "கைலாஷ்! என்னோடு வா. நான் வைகுந்தத்திற்கு செல்கிறேன். என்னுடன் உன்னையும் அழைத்து செல்கிறேன்", என்று கூறினார்.

அதற்கு கைலாஷ், "என்னை மன்னியுங்கள் ஐயா. என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். நான் அவர்களை பராமரிக்க வேண்டும். என்னால் இப்போது வர இயலாது. சிறிது காலம் கழித்து பார்க்கலாம்", என்று பதிலளித்தான்.

பல வருடங்கள் கழித்து நாரத முனிவர் மீண்டும் கைலாஷிடம் வந்து, "கைலாஷ்! இப்போது வைகுந்தம் வர தயாரா?" என்று கேட்டார்.

கைலாஷ், "அய்யா, என்னுடைய பேரப்பிள்ளைகளை நான் கவனிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உதவி என் குடும்பத்தினருக்கு மிகவும் அவசியம். என்னால் வர இயலாது", என்று கூறினான்.

மீண்டும் சில வருடங்கள் கழித்து அங்கு வந்த நாரத முனிவர் கைலாஷ் இறந்து விட்ட செய்தியை அறிந்துகொண்டார். அங்கிருந்து புறப்படும்பொழுது ஒரு நாய் வீட்டின் முன் நின்று குறைத்துக்கொண்டிருந்ததை கவனித்தார். அந்த நாய், "நாரத முனிவரே! நான் தான் கைலாஷ்", என்று கூறியது. ஆச்சரியமடைந்த நாரத முனிவர், "கைலாஷ், நீ இப்போது நாயாகி விட்டாயா? நாயின் உடலில் இன்னும் நீ உனது இல்லத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இப்போது கூட என்னால் உன்னை வைகுந்தம் அழைத்து செல்ல முடியும். என்னுடன் வருகிறாயா?" என்று கேட்டார்.கைலாஷ், " என்னை மன்னியுங்கள் ஐயா. என்னுடைய புதல்வர்கள் மிகவும் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். நான் சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்க மறுக்கிறார்கள். அதனால் நானே நாயாக மாறி என்னுடைய சொத்துக்களை பராமரிக்கிறேன். ஆகையால் என்னால் இப்போதும் உங்களுடன் வர இயலாது", என்று கூறினான். கைலாஷிற்கு செல்வத்தின் மீதுள்ள பற்றுதலை நினைத்து வருந்தினார் நாரதர்.

மீண்டும் சில வருடங்கள் கழித்து அங்கு வந்த நாரதர், அந்த நாயும் இறந்ததை அறிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட முற்பட்டார். கைலாஷின் வீட்டிற்கு வெளியே இருந்த புல்வெளியில் நாரதர் நடந்து சென்ற பொழுது, ஒரு பாம்பு சீறிக்கொண்டு தன் முன் வருவதை கவனித்தார். அந்த பாம்பு, "நாரதரே! நான் தான் கைலாஷ்", என்று கூறியது. நாரதர், "பாம்பின் உடலில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் கைலாஷ்? இப்போதும் நீ என்னுடன் வைகுந்தம் வரலாம். வருகிறாயா?", என்று கேட்டார். அதற்கு அந்த பாம்பு, "இப்போது என்னுடைய புதல்வர்கள் என்னுடைய செல்வதை வங்கியில் வைத்துள்ளனர். ஆகையால் நான் சிறிது மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அவர்கள் அனைவரும் தினமும் காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருகிறார்கள். அதற்குள் என்னுடைய வயலில் இருக்கும் பயிர்கள் அனைத்தையும் யானையோ அல்லது திருடர்களோ நாசம் செய்து விடுகிறார்கள். ஆகையால் என்னுடைய வயலை காப்பாற்றுவதற்காக நான் இந்த பாம்பின் உடல் பெற்றுள்ளேன். தினமும் வயலை சுற்றி வந்து அனைவரிடமிருந்தும் என்னுடைய வயலை பாதுகாக்கிறேன். ஆகையால் நான் இப்போதும் உங்களுடன் வர இயலாது", என்றது.

கைலாஷின் பரிதாப நிலையை கண்டா நாரதர் உடனடியாக கைலாஷின் புதர்வர்களை கூப்பிட்டு அவர்களின் வயலில் இருந்த பாம்பை காண்பித்தார். உடனடியாக கைலாஷின் புதல்வர்கள் அந்த பாம்பை பெரிய கம்புகளால் அடிக்க துவங்கினர். பாம்பின் உடலிலிருந்த கைலாஷ், "நான் தான் உங்களுடைய தந்தை. நான் இந்த வயலை உங்களுக்காகத்தான் பாதுகாத்து வருகிறேன்.எதற்காக என்னை அடிக்கிறீர்கள்?" என்று கூற முற்பட்டது. ஆனால் அவர்களால் கைலாஷ் கூறியதை புரிந்துகொள்ள முடியவில்லை. பாம்பு சீறுவதை கண்ட புதல்வர்கள் மேலும் அதனை வெகுவாக தாக்கினர். பாம்பு உடனே இறந்தது. இறக்கும் தருவாயில் பாம்பு தூய பக்தரான ஶ்ரீ நாரதரை நினைத்தது. ஆகையால் அடுத்த பிறவியில் கைலாஷ், தூய கிருஷ்ணபக்தரின் குடும்பத்தில் பிறப்பெடுத்தார்.


காலம் பொன்னானது

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஏவம் க்ருஹேஷு ஸக்தானாம்
ப்ரமத்தானாம் தத்-ஈஹயா
அத்யக்ராமத் அவிக் நாத:
கால: பரம-துஸ்தர:

மொழிபெயர்ப்பு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


குடும்ப விவகாரங்களில் தீவிர பற்றுக் கொண்டு, அச்சிந்தனையிலேயே எப்பொழுதும் ஆழ்ந்திருப்பவர்களை, வெல்ல முடியாததான நித்திய காலம் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை வென்றுவிடுகிறது.

பொருளுரை

🍁🍁🍁🍁🍁🍁🍁


“நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன்; எல்லாம் சரியாக நடக்கின்றன; என்னிடம் போதுமான சேமிப்புத் தொகை உள்ளது; இப்பொழுது என் குழந்தைகளுக்குப் போதுமான சொத்தை என்னால் கொடுக்க முடியும்; நான் இப்பொழுது வெற்றியடைந்தேன்; கடவுளை நம்பியுள்ள ஏழை பிச்சைக்காரர்களான சந்நியாசிகள் என்னிடம் பிச்சை கேட்க வருகின்றனர். எனவே பரம புருஷனைவிட நான் பெரியவனாவேன்.” இவையே காலம் உருண்டோடுவதை காணக் கண்ணில்லாதவனாக உள்ள தீவிர பற்றுக் கொண்டுள்ள குடும்பஸ்தனைக் கவர்ந்துகொள்ளும் சில எண்ணங்களாகும். நமது ஆயுட்காலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. பரமனின் முடிவுக்கெதிராக ஒரு வினாடியும் அதை அதிகரிக்க ஒருவராலும் முடியாது. இத்தகைய மதிப்புயர்ந்த காலத்தை குறிப்பாக மனிதர்கள் ஜாக்கிரதையாக செலவிட வேண்டும். ஏனெனில், கடினமான உழைப்பால் சம்பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களைக் கொடுத்தாலும், நமக்குத் தெரியாமல் செலவிடப்பட்ட ஒரு நொடிப் பொழுதைக் கூட நம்மால் திரும்பப் பெற இயலாது. 84,00,000 வகையான உயிரினங்களுக்கிடையிலான தொடர்ந்த பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபடுவதே வாழ்வின் முடிவான நோக்கமாகும். இதற்காகவே வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் செலவிட வேண்டும். பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய் ஆகியவற்றிற்கு உட்பட்டதான ஜடவுடலே ஜீவராசியின் எல்லா துன்பங்களுக்கும் காரணமாகும்; இல்லையெனின் ஜீவராசி நித்தியமானவனாவான்; அவன் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இப்பிரச்சனையை மூடர்கள் மறந்து விடுகின்றனர். வாழ்வுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழியை அவர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. காலம் விரயமாகிக் கொண்டு இருப்பதையும், வாழ்நாள் குறைந்து வருகிறதென்பதையும், பெரும் பிரச்சனைகளான பிறப்பு, இறப்பு முதுமை மற்றும் நோய் ஆகியவற்றிற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதையும் அறியாமலேயே அவர்கள் தற்காலிகமான குடும்ப விவகாரங்களில் ஆழ்ந்துள்ளனர். இது மாயை என்று அழைக்கப்படுகிறது.ஆனால் பகவானுடைய பக்தித் தொண்டில் விழிப்புடன் இருப்பவர்கள் மீது இத்தகைய மாயை செயற்படாது.

ஶ்ரீமத் பாகவதம் .1.13.17 / பொருளுரை

நீதி:

ஒரு மனிதன் தன்னுடைய விருப்பங்களுக்கேற்ப வெவ்வேறு உடல்களை பெறுகிறான். அவ்வாறு ஒரு மனிதன் தன் வாழ்வனைத்தும் பௌதிக இன்பங்களுக்காக உழைத்து, தன்னுடைய நேரம் முழுவதையும் தன் புலன்களை திருப்தி செய்வதற்காக பாடுபடுகிறான் என்றால், அவனால் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட முடியாது.இந்நிலையில் இருந்து விடுபட ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தால் போதும், பௌதிக பந்தங்களிலிருந்து விடுபட்டு உன்னதமான இறைவனின் தெய்வீகத் திருநாட்டிற்குச் செல்ல முடியும்.”

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...