“பற்று, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு,
என்னில் முழுமையாக ஆழ்ந்து, என்னிடம் சரணடைந்து, என்னைப் பற்றிய அறிவால் பலர் இதற்கு
முன்பு தூய்மையடைந்துள்ளனர். இவ்விதமாக, அவர்களனைவரும் என்னிடம் உன்னத பிரேமையுடைவராயினர்.”
இரு வழிகளில் கிருஷ்ணரை இடையறாது நினைக்க முடியும். ஒன்று, ஒரு பக்தனாக மற்றது, ஒரு
பகைவனாக. ஒரு பக்தன் அவனுடைய அறிவினாலும், தவத்தினாலும், பயம், கோபம் இவற்றிலிருந்து
விடுபட்டு ஒரு தூய பக்தனாகிறான். அவ்வாறே ஓர் எதிரியும் கிருஷ்ணரைப் பற்றிய பகை உணர்ச்சியுடன்
நினைத்த போதிலும், அவரையே இடையறாது நினைத்துத் தூய்மையடைகிறான். இது பகவத் கீதையில்
(9.30) பகவானால் பின்வருமாறு உறுதி செய்யப்படுகிறது:
“ஒருவன் மிகவும் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும்,
அவன் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பானாயின், அவனைப் புனிதமானவனாகவே கருத வேண்டும்.
ஏனெனில் அவன் தக்க முறையில் நிலைபெற்றுள்ளான்.” ஒரு பக்தன் மிகவும் கவனத்துடன் பகவானை
வழிபடுகிறான் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, ஒர் எதிரி (ஸு துராசார:) எப்பொழுதும் ஸ்ரீ
கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டிருப்பானாயின், அவனும் ஒரு தூய்மையடைந்த பக்தனாகிவிடுகிறான்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள உதாரணம் ஒரு புல்லின புழுவைப் பற்றியதாகும். அப்புழு, தன்னை
ஒரு துவாரத்தினுள் கட்டாயமாக புகச் செய்த ஒரு வண்டைப் பற்றி சதா நினைத்துக் கொண்டே
இருப்பதால், அதுவும் ஒரு வண்டாகவே மாறிவிடுகிறது. பயத்துடன் வண்டையே எப்பொழுதும் நினைத்துக்
கொண்டிருப்பதால், புல்லின புழுவும் ஒரு வண்டாக மாறத் துவங்குகிறது. இது அனுபவப்பூர்வமான
ஒரு உதாரணமாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இரு நோக்கங்களுக்காக இந்த ஜட உலகில் தோன்றுகிறார்
- பரித்ராயாண ஸாதூணாம் வினாசாய ச துஷ்க்ருதாம்: பக்தர்களைக் காக்கவும், அசுரர்களை அழிக்கவும்
பகவான் தோன்றுகிறார். சாதுக்களும், பக்தர்களும் எப்பொழுதும் பகவானை நினைக்கின்றனர்
என்பதில் ஐயமில்லை. ஆனால் கம்சனையும் சிசுபாலனையும் போன்ற அசுரர்கள் (துஷ்க்ருதிகள்)
ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவரை நினைக்கிகன்றனர். கிருஷ்ணரை
நினைப்பதன் மூலமாக, அசுரர்கள், பக்தர்கள் ஆகிய இருவருமே பௌதிக மாயையின் பிடியிலிருந்து
மோட்சம் அடைகின்றனர்.
இச்சுலோகம் மாயா - மனுஜே என்ற சொல்லை உபயோகிக்கிறது.
பரமபுருஷரான கிருஷ்ணர் அவரது சக்தியுடன் தோன்றும் பொழுது (ஸம்பவாமி ஆத்ம - மாயயா),
ஜட இயற்கையால் செய்யப்பட்ட ஓருடலை ஏற்கும்படி அவர் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. எனவே
தான் பகவான் ஈஸ்வரர் (மாயையை ஆள்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மாயையால் அவர் ஆளப்படுபவரல்ல.
அசுரனொருவன் கிருஷ்ணரிடமுள்ள பகைமையால் சதா அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால்,
தனது பாவ விளைவுகளிலிருந்து அவன் விடுபடுவது நிச்சயம். கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணங்கள்,
உபகரணங்கள் அல்லது அவரைப் பற்றிய எதையாவது நினைப்பதென்பது, அனைவருக்கும் நன்மை தரக்கூடிய
ஒன்றாகும். ஸ்ருண்வதாம் ஸ்வ - கதா: க்ருஷ்ண: புண்ய - ஸ்ரவண - கீர்த்தன: கிருஷ்ணரைப்
பற்றி நினைப்பது, கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கேட்பது அல்லது கிருஷ்ணரின் லீலைகளைப்
பற்றி கேட்பது ஒருவனை தூய்மைப்படுத்தும். பிறகு அவன் ஒரு பக்தனாகிவிடுவான். எனவே எப்படியாவது
ஒருவன் கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கேட்பதற்கும், கிருஷ்ண பிரசாதத்தை உண்பதற்கும்
உரிய வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு முறையை அறிமுகப்படுத்த எமது கிருஷ்ண பக்தி இயக்கம்
முயன்று வருகிறது. இவ்விதமாக படிப்படியாக ஒருவன் பக்தனாகி, வாழ்வில் வெற்றி பெறுகிறான்.
முக்கியக் கருத்துக்கள்:
1. பகவானை அடையும் வழி (கீதை 4.10)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடைவதற்குரிய வழியை பகவத் கீதை 4.10 விவரிக்கிறது:
தகுதிகள்: பற்று (வீத-ராக), பயம் (பய), கோபம் (க்ரோதா) ஆகியவற்றிலிருந்து விடுபடுதல்.
நிலை: கிருஷ்ணரில் முழுமையாக ஆழ்ந்து (மன்-மயா), அவரிடம் சரணடைதல் (மாம் உபாஸ்ரிதா).
விளைவு: ஞானம் மற்றும் தவத்தின் (ஞான-தபஸா) மூலம் தூய்மையடைந்து, உன்னத பிரேமையுடன் கிருஷ்ணரின் நிலையை அடைதல் (மத்-பாவம் ஆகதா).
2. பக்தி மற்றும் பகைமையால் தூய்மையடைதல்
கிருஷ்ணரை நினைப்பதன் மூலம் தூய்மையடைவது, பக்தர்களுக்கும் பகைவர்களுக்கும் பொதுவானது.
| வகை | கிருஷ்ணரை நினைக்கும் முறை | விளைவு |
| பக்தன் | அறிவு, தவம், அன்பு, பயமின்மை | தூய பக்தனாகிறான். தூய பக்தர்கள் மட்டுமே பிரேம பக்தியில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு சேவைகள் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. |
| பகைவன் (அசுரன்) | பகை உணர்ச்சியுடனும், கொல்லும் எண்ணத்துடனும் | இடையறாது நினைப்பதால், தூய்மையடைந்து மோட்சம் அடைகிறான். கிருஷ்ணரின் பகைவர்களான கம்சனும் மற்றவர்களும் பிரம்மனில் ஐக்கியமாயினர். ஆனால் கிருஷ்ணரின் நண்பர்களும், பக்தர்களும் கிருஷ்ணரின் பக்தர்கள் பிருந்தாவனத்திலோ அல்லது வைகுண்ட லோகங்களிலோ பகவானின் நித்திய சகாக்கள் என்ற பதவியை அடைகின்றனர் |
உறுதிப்படுத்துதல் (கீதை 9.30): ஒருவன் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும் (சுதுராசாரோ), அவன் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருந்தால், அவன் புனிதமானவனாகவே கருதப்படுவான். ஏனெனில் அவன் சரியான வழியில் நிலைபெற்றுள்ளான்.
பக்தியில்லாத போதிலும் மிகவுயர்ந்த முக்தி நிலையை அவர்கள் அடைந்த போதிலும், அவர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சரணடைவதில்லை என்பதால், அவர்கள் மீண்டும் பௌதிக இருப்பில் விழுவது நிச்சயம்.” அருவவாதிகளால் வைகுண்ட லோகங்களை அடையவும் முடியாது, பகவானின் சகாக்களாக ஆகவும் முடியாது. ஆகவே அவர்களது விருப்பப்படியே ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு ஸாயுஜ்ய - முக்தியை அளிக்கிறார். ஆனால் ஸாயுஜ்ய - முக்தியானது முழுமையற்ற முக்தி என்பதால், அவர்கள் மீண்டும் இந்த ஜட உலகிற்கு வந்து பகவானின் தூய பக்கங்களிடம் தொடர்பு கொண்டு பக்தி தொண்டில் ஆழமான பற்று கொண்டு பிரே பக்தி நிலைக்கு உயர்வார்கள். (பாகவதம் 10.2.32)
3. புல்லினப் புழுவின் உதாரணம்
பகைமை உணர்வுடன் இடையறாது நினைப்பது எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது:
நிகழ்வு: ஒரு புல்லினப் புழு தன்னை ஒரு துவாரத்தினுள் கட்டாயமாகப் புகச் செய்த வண்டைப் பற்றி பயத்துடன் சதா நினைத்துக் கொண்டே இருக்கிறது.
விளைவு: இடைவிடாத சிந்தனையால், அந்தப் புழுவும் வண்டாகவே மாறிவிடுகிறது.
4. கிருஷ்ணரின் தோற்றத்தின் நோக்கம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஜட உலகில் தோன்றுவதற்கு இரு முக்கிய நோக்கங்கள் உள்ளன:
பரித்ராயாண ஸாதூணாம்: பக்தர்களைக் காப்பது.
வினாசாய ச துஷ்க்ருதாம்: அசுரர்களை (கம்சன், சிசுபாலன் போன்ற துஷ்க்ருதர்கள்) அழிப்பது.
அசுரர்களும், பக்தர்களைப் போலவே, கிருஷ்ணரை நினைப்பதன் மூலம் பௌதிக மாயையின் பிடியிலிருந்து மோட்சம் அடைகின்றனர்.
5. மாயை மற்றும் தூய்மை
கிருஷ்ணர் மாயையை ஆள்பவர் (ஈஸ்வரர்), மாயையால் ஆளப்படுபவர் அல்ல.
மாயா-மனுஜே (ஸம்பவாமி ஆத்ம-மாயயா): பரமபுருஷர் தமது சக்தியுடன் தோன்றும் போது, அவர் ஜட இயற்கையால் செய்யப்பட்ட உடலை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதில்லை.
பகைமையால் தூய்மை: அசுரர்கள் பகைமையால் கிருஷ்ணரை சதா நினைப்பதால், அவர்கள் தங்கள் பாவ விளைவுகளிலிருந்து விடுபடுகிறார்கள்.
தூய்மையடையும் வழிகள்: கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணங்கள் அல்லது லீலைகள் பற்றி நினைப்பது, கேட்பது, அல்லது கீர்த்தனம் செய்வது (புண்ய-ஸ்ரவண-கீர்த்தன:) அனைவருக்கும் நன்மை பயக்கும்.
6. கிருஷ்ண பக்தி இயக்கத்தின் இலக்கு
நோக்கம்: எப்படியாவது ஒருவன் கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கேட்பதற்கும் (ஸ்ருண்வதாம் ஸ்வ-கதா:) மற்றும் கிருஷ்ண பிரசாதத்தை உண்பதற்கும் உரிய வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களைப் படிப்படியாகப் பக்தனாக்குவது.
இறுதி: இவ்விதமாக, ஒருவன் பக்தனாகி வாழ்வில் வெற்றி பெறுகிறான்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment