Skip to main content

பகவத் கீதை மூன்றாவது அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

பகவத் கீதை மூன்றாவது அத்தியாயத்தின் மஹிமை


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.


பகவத் கீதை மூன்றாவது அத்தியாயத்தின் மஹிமை



பகவான் விஷ்ணு கூறினார், " எனதன்பு லட்சுமியே, ஜனஸ்தான் என்ற ஊரில் ஜடா என்ற கௌஷிக்க வம்சத்தில் பிறந்த பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் பிராமணர்களுக்கு என்று சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட எந்த செயலையும் செய்யாமல் பல அதர்ம காரியங்களை செய்து வந்தார். மது அருந்துவது, சூதாடுவது, பெண்கள் மற்றும் மிருகங்களை வேட்டையாடுவது என அனைத்திலும் ஈடுபட்டு, தன் செல்வத்தை வீணாக்கினார். ஆகையால் வட நாட்டிற்கு சென்று செல்வம் ஈட்டி வரலாம் என்று எண்ணி அவ்வாறே செய்தார். சில காலம் கழித்து தான் ஈட்டிய செல்வத்துடன் ஜனஸ்தான் திரும்ப எண்ணினார்.

வெகு தூரம் பயணம் செய்ததால் மிகவும் களைப்படைந்த ஜடா சிறிது ஓய்வெடுக்க எண்ணினார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், பாலைவனம் போல் இருந்த அந்த இடத்திலிருந்த ஒரு மரத்தடியில் உறங்கினார். அப்போது சில திருடர்கள் அங்கு வந்து ஜடாவை அடித்து கொன்று அவரிடமிருந்த செல்வம் அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர்.தன் வாழ்நாள் அனைத்திலும் ஒரு நல்ல காரியம் கூட செய்யாமல் பாவச்செயல்களையே செய்து வந்த ஜடா, இறப்பிற்கு பின் ஆவி ஆனார்.

ஜடாவின் மகன் வேத சாஸ்திரங்கள் அறிந்தவராகவும் இறைபக்தி உள்ளவராகவும் இருந்தார். வடநாடு சென்ற தன் தந்தை இன்னும் ஊர் திரும்பாததால், அவரை தேடி அவர் மகன் சென்றார். நாள்கணக்கில் தன் தந்தையை தேடி இங்கும் அங்கும் அலைந்த அவர், பார்ப்பவர்கள் அனைவரிடமும் தன் தந்தையை பற்றி விசாரிக்கவும் செய்தார்.

ஒரு நாள் அவர் தன் தந்தையின் நண்பரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஜடா எவ்வாறு இறந்தார் என்று இவருக்கு விளக்கினார். தன் தந்தையின் மரணத்தை பற்றி கேட்ட அவர், பெனாரஸில் உள்ள காசிக்கு சென்று தன் தந்தைக்கு பிண்டம் அளித்து அவரை நரகத்திலிருந்து விடுவிக்க முடிவெடுத்தார். எனவே காசி நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார். அவரது பயணத்தின் ஒன்பதாவது நாளில் தன் தந்தை கொல்லப்பட்ட அதே மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார்.

மாலை வேளையில் பகவான் கிருஷ்ணரை வணங்கிவிட்டு ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்தார். அவர் படித்து முடித்ததும் ஒரு பெரும் சத்தம் வானிலிருந்து கேட்டது. உடனே மேலே பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். மேலே அவரது தந்தை நான்கு கரங்களுடன் கார்மேக வண்ணத்தில் மஞ்சள் நிற ஆடை அணிந்து மிகவும் அழகாக இருந்தார். அவருடைய உடலிலிருந்து வந்த தேஜஸ் அந்த இடத்தையே ப்ரகாசப்படுத்தியது. அவர் தன் மகனுக்கு ஆசிகளை வழங்கினார். நடக்கும் நிகழ்வுகள் பற்றி புரியாமல் மகன் தன் தந்தையிடம் குழப்பத்துடன் வினவினார். அதற்கு தந்தை, "என் அன்பு மகனே, நீ ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்ததால், பல பாவ காரியங்களை செய்ததன் விளைவாக நான் அடைந்த இந்த ஆவி ரூபத்திலிருந்து நான் விடுதலை பெற்றேன். எனவே நீ இப்போது வீட்டிற்கு செல்லலாம். ஏனெனில் காசிக்கு சென்று நீ செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும், நீ ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்ததன் மூலமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மிகவும் மகிழ்ந்த மகன், தன் தந்தையிடம் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்று வினவினான். அதற்கு தந்தை, "என்னுடைய சகோதரனும் என்னை போலவே பாவ காரியங்களை செய்தவன். இறப்பிற்கு பின்னர் அவன் இப்போது நரகத்தில் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். அவனையும் மேலும் நரகத்தில் இருக்கும் நம்முடைய மற்ற மூதாதையர்களையும் நீ விடுவிக்க எண்ணினால் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்து வா. இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் அனைவரும் பகவான் விஷ்ணுவை போல ரூபம் அடைந்து வைகுந்தத்திற்கு திரும்புவர்" என்று தன் மகனிடம் வேண்டினார்.

தந்தையுடைய வேண்டுதலை கேட்ட மகன், "ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்தால் நரகத்தில் இருக்கும் ஆத்மாக்களை விடுவிக்க முடியும் என்றால், இன்றிலிருந்து நரகத்தில் உள்ள அனைவரும் விடுதலை ஆகும் வரை நான் தொடர்ந்து படிப்பேன்" என்று தந்தைக்கு வாக்களித்தார். தந்தையும் "அவ்வாறே ஆகட்டும்" என்று ஆசிர்வதித்தார். அதன் பிறகு ஆன்மிக லோகத்திலிருந்து வந்த விமானம் மூலம் தந்தை பகவானிடம் சென்றார்.

தந்தையின் கட்டளையை ஏற்ற மகன் ஜனஸ்தானுக்கு திரும்பி, பகவான் கிருஷ்ணரின் முன்பு அமர்ந்து, நரகத்தில் துன்பப்படும் அனைவரையும் விடுவிக்கும் நோக்கத்துடன் ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தார். இவர் படிப்பதை பார்த்த பகவான் விஷ்ணு, தனது விஷ்ணு தூதர்களை, நரகத்தின் அதிபதியான யமதர்மராஜாவை சந்திக்க அனுப்பினார். யமலோகம் அடைந்த விஷ்ணு தூதர்கள், யமராஜாவிடம், "பிரபு, பாற்கடல் வாசியான பகவான் விஷ்ணு, தங்கள் நலனை மிகவும் விசாரித்தார். அதோடல்லாமல், நரகத்தில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் அணைத்து ஆத்மாக்களையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்" என்று கூறினர்.

பகவான் விஷ்ணுவின் ஆணையை கேட்ட யமதர்மராஜன், உடனடியாக நரகத்திலிருந்து அனைவரையும் விடுவித்தார். அதோடு, விஷ்ணுதூதர்களுடன் அவரும் சுவேததீபம் என்னும் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பகவான் விஷ்ணுவை தரிசிக்க சென்றார்.

அங்கு பகவான் ஸ்ரீ விஷ்ணு, அனந்த சேஷன் மீது சயனித்திருந்தார். அவருடைய உடல் சூரியனை காட்டிலும் மிகுந்த தேஜஸுடன் இருந்தது. அதிர்ஷ்ட தேவதையான மஹாலக்ஷ்மி தேவியார், அவருடைய பாதங்களை பிடித்துக்கொண்டிருந்தார். அவரை சுற்றிலும் ரிஷிகள், முனிவர்கள், முப்பத்துமுக்கோடி தேவர்கள், அவர்களின் தலைவரான தேவேந்திரர் அனைவரும் பகவானுடைய புகழை பாடிக்கொண்டிருந்தனர். ப்ரம்மதேவரும் அங்கு வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவையனைத்தையும் கண்ட எமதர்மராஜா, பகவானை வணங்கி விட்டு பின்வருமாறு போற்றினார், "பகவான் விஷ்ணுவே, தாங்கள் அணைத்து கட்டுண்ட ஆத்மாக்களின் நலம்விரும்பி ஆவீர்கள். தங்களுடைய புகழுக்கு எல்லையே இல்லை. தாங்களே காலம் ஆவீர்கள்; தங்களிலிருந்தே வேதங்கள் தோன்றின; குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தாங்களே இவையனைத்தையும் அளித்து விடுவீர்கள்; மூவுலங்களையும் காப்பர் தாங்களே; ஒவொருவரின் இதயத்திலும் பரமாத்மாவாக தாங்கள் வீற்றிருந்து அவர்களை வழி நடத்துகிறீர்கள்; முழு பிரபஞ்சத்திற்கும் தாங்களே குரு; அணைத்து பக்தர்களின் இறுதி லட்சியம் தாங்கள்; தாமரை கண்ணனே, என்னுடைய பணிவான வணக்கங்களை ஏற்பீராக".

கைகளை கூப்பியவாறு பகவானை போற்றிய எமதர்மராஜா, மேலும் தொடர்ந்தார், "தங்களின் விருப்பப்படி, அனைவரையும் நரகத்திலிருந்து விடுவித்துவிட்டேன். நான் மேலும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுங்கள்" என்று கூறினார். பகவான் விஷ்ணு இனிய குரலில், "அன்பு யமதர்மா, நீ பாரபட்சம் பார்க்காதவன்; உனது கடமைமைகளை தவறாமல் செய்பவன். ஆகையால் நான் உனக்கு உத்தரவளிக்க வேண்டியதில்லை; யமலோகம் திரும்பி சென்று, எனது ஆசிகளுடன் உனது பணியினை தொடர்வாயாக" என்று பதிலளித்தார்.

பகவான் விஷ்ணு யமதர்மராஜாவின் பார்வையிலிருந்து மறைந்ததும் எமதர்மராஜா யமலோகம் திரும்பி சென்றார். பூலோகத்தில் அந்த பிராமணரும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்து கொண்டே இருந்தார். ஆகையால் அணைத்து துன்பப்படும் ஆத்மாக்களும் நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கொண்டேயிருந்தனர். பின்னர் ஒரு நாள், விஷ்ணு தூதர்கள் வந்து பிராமணரையும் விஷ்ணுலோகம் அழைத்துச்சென்றனர். அங்கு அவர் நித்தியமாக பகவானுடைய பாத கமலங்களை சேவை செய்யும் பாகியத்தை பெற்றார்.


ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitamil

ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...