Skip to main content

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினாறாம் அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினாறாம் அத்தியாயத்தின் மஹிமை


பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.


ஶ்ரீமத் பகவத் கீதை. பதினாறாம் அத்தியாயத்தின் மஹிமை

***************************

பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 16 பற்றிய வர்ணனை

சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தை மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்".

குஜராத்தில் சவுராஷ்டிரா என்ற நகரம் உள்ளது. அதை ஆட்சி செய்த மன்னர், காடபஹூ, இன்னொரு தேவேந்திரரை போல வாழ்ந்து வந்தார். அவர் அரிமாந்தனா என்ற பெயருடைய ஒரு ஆன் யானையை வளர்த்து வந்தார். அதன் மீது மிகுந்த பற்று கொண்டார். ஆனால் அந்த யானைக்கு தலைகனம் மிகவும் அதிகம். ஒரு நாள் மதம் பிடித்த அந்த யானை, சங்கிலியை அறுத்தெறிந்து தன் கொட்டகையை நாசப்படுத்தியது. அதோடல்லாமல் அங்கும் இங்கும் ஓடி மக்களை துரத்தியது. மக்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து ஓடிஒளிந்தனர். யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலாத யானை பாகன்கள் இந்த செய்தியை அரசரிடம் தெரிவித்தனர். மத யானைகளை கையாளும் வித்தை தெரிந்திருந்த அரசர் உடனடியாக இளவரசருடன் யானை இருக்கும் இடத்திற்கு விரைந்தார். அதற்குள் அந்த யானை பலரை தன் காலால் மிதித்திருந்தது. மேலும் பலரை தாக்க ஓடிக்கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் உயிர் பயத்தால் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரே ஒரு பிராமணர் மட்டும் தன் ஸ்னானத்தை முடித்து விட்டு அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் "அபயம் (பயம் அற்ற)" என்று தொடங்கும் பதினாறாம் அத்தியாயத்தின் முதல் மூன்று ஸ்லோகங்களை உச்சரித்து கொண்டே நடந்து வந்தார். ஸ்லோகம் உச்சரிப்பதில் கவனம் செலுத்திய பிராமணர், யானையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மக்கள் அவரை தடுக்க நினைத்தனர். ஆனால் பிராமணர் அவர்களை கவனிக்கவில்லை. தன்னை நோக்கி ஒரு பிராமணர் நடந்து வருவதை பார்த்த யானை, தன் அணைத்து கோபத்தையும் ஒரு நொடியில் விட்டு விட்டு, அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தது. யானையின் அருகில் சென்ற பிராமணர், அதனை சிறிது நேரம் தடவி கொடுத்து விட்டு அங்கிருந்து தன் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நடந்த அற்புதத்தை பார்த்த அரசரும் மக்களும் திகைத்தனர். அரசர் உடனடியாக அந்த பிராமணரின் காலில் விழுந்து வணங்கி, "பிராமணரே! இவ்வளவு மன அமைதியும் சக்தியும் தாம் என்ன தவம் செய்து பெற்றீர்கள்?" என்று வினவினார். பிராமணர், "தினமும் நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்திலிருந்து சில ஸ்லோகங்களை வாசிப்பேன்" என்று கூறினார்.

சிவபெருமான் கூறினார், "அரசர், பிராமணரை அரண்மனைக்கு அழைத்து, அவரை நன்று உபசரித்து அவருக்கு நூறு பொற்காசுகள் தக்ஷணையாக வழங்கி, அவரிடம், தனக்கும் ஸ்ரீமத் பகவத் கீதையின் அந்த ஸ்லோகங்களை கற்றுத்தருமாறு வேண்டினார்.

சிறிது காலத்திற்கு ஸ்லோகங்களை தினந்தோறும் வாசித்த பிறகு, ஒரு நாள் அரசர், தன் காவலர்களுடன் அந்த மத யானை அடைத்து வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு சென்றார். அங்கிருந்த யானை பாகன்களிடம் யானையை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். ஆடை கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். யானை மீண்டும் மதம் பிடித்து ஓடி அனைத்தையும் நாசப்படுத்த போகிறது என்று அனைவரும் பயந்தனர். ஆனால் அரசர் அந்த யானையின் முன்பு சென்றவுடன், அது மண்டியிட்டு அரசரை வணங்கியது. இதை கண்டு மகிழ்ந்த அரசர், அரண்மனைக்கு திரும்பி தன் மகனை அடுத்த அரசராக அறிவித்து விட்டு, சிறிதும் தாமதிக்காமல் நாட்டை துறந்து காட்டிற்கு சென்றார். அங்கு ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தை தினமும் வாசித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார். இதன் மூலம் வெகு விரைவாக பகவானின் பாத கமலங்களை அடைந்தார்.

எவரொருவர், ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தை தினமும் வாசிக்கிறார்களோ, அவர் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், பகவானின் திருப்பாதங்களை சென்றடைவது உறுதியாகும்.



 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...