Skip to main content

Posts

பீஷ்ம பஞ்சக விரதம் சங்கல்பம்

  பீஷ்ம பஞ்சக விரதம் சங்கல்பம்  🍁🍁🍁🍁🍁🍁 கரத்தினால் சிறிது நீரை எடுத்து தலையின் மீது தெளித்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்: ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ‘பி வா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யாந்தர: சுசி: ஸ்ரீ-விஷ்ணு  ஸ்ரீ-விஷ்ணு  ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ குரு ப்ராணாம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 நமா ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரெஸ்தாய புதலே   ஸ்ரீமதே (உங்களுடைய ஆன்மீக குருவின் பெயர்) இதி நாமினே ஸ்ரீ கிருஷ்ண பிரணாம மந்திரம்,  🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹே க்ருஷ்ண கருணா–ஸிந்தோ தீன–பந்தோ ஜகத் பதே கோபேஷ கோபிகா–காந்த ராதா–காந்த நமோ ’ஸ்து தே ஸ்ரீ ராதா பிரணாம மந்திரம்,  🍁🍁🍁🍁🍁🍁🍁 தப்த–காஞ்சன–கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஷ்வரி வ்ருஷபானு–ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி–ப்ரியே ஸ்ரீ பஞ்ச தத்வா மந்திரம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பஞ்ச தத்வாத் மகம் க்ருஷ்ணம் பக்தரூப ஸ்வரூபகம்  பக்தாவதாரம் பக்தாக்யம் நமாமி பக்த ஷக்திகம் ஸ்ரீ நரசிம்மதேவரின் ப்ரணாம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 நமஸ்தே நரசிம்மாயா ப்ரஹ்லாதாலாத-தாயினே ஹிரண்யகசிபூர் வக்ஷ: சிலா-டங்கான காலாயே இதோ நரசிம்மா பரதோ நரசிம்மோ யதோ யதோ ...

பீஷ்ம பஞ்சகம்

 பீஷ்ம பஞ்சகம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சகம் அல்லது விஷ்ணு பஞ்சகம் என்று அழைக்கப்படும். பிதாமகர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்க செய்தார். பீஷ்ம பஞ்சகம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்  அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்க படுகிறது. இந்த நாட்களில் விரதம்  இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில்  ஆன்மிக பலன்களடைவார்கள். அதுமட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும். விரத முறைகள் 🍁🍁🍁🍁🍁🍁 ஒரு பக்தருக்கு சாதிக்கும் என்றால்  பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை ப்ரீத்தி படுத்த சில பட்சணம் பதார்த்தங்கள் தவிர்த்து உபவாசம் அனுஷ்டிக்க முடியும் என்று ஹரி பக்தி விலாசம் என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் இது  நிர்ப்பந்தம் அல்ல அவரவர் சௌகரியத்தை பொருத்தது. 🍁🍁🍁🍁🍁🍁🍁 முதல் நிலை ?...

உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசியின் மகிமைகள்

  உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசியின்  மகிமைகள் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் பிரம்மாவிற்கும் நாரத முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை நாரத முனிவரிடம் பிரம்மா கூறினார். ஓ! முனிவர்களில் சிறந்தோனே! ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து புண்ணியத்தை அதிகரித்து முத்தியை அளிக்கக்கூடிய உத்தான ஏகாதசியை பற்றி கூறுகிறேன், கேள். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! கார்த்திகை மாத (அக்டோபர் / நவம்பர்) வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி இந்த உலகில் தோன்றாத வரை கங்கையின் மேன்மை மாறாமல் நிலையாக இருந்தது. மேலும் உத்தான ஏகாதசி தோன்றாதவரை கடல் மற்றும் குளங்களின் புண்ணியத்தின் செல்வாக்கு ஈடு இணையற்று இருந்தது. இதன் பொருள் என்ன வெனில் இந்த உத்தான ஏகாதசி. கங்கையின் மேன்மைக்கும் குளங்களின் புண்ணியத்திற்கும் ஈடானது, இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது. ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதாலும், நூறு ராஜசூய யாகங்கள் செய்வதாலும் அடையக் கூடிய பலனை ஒருவர் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம். பிர...

பாம்பின் பிடியிலிருந்து தனது தந்தை நந்த மகாராஜரை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விடுவித்தல்

பாம்பின் பிடியிலிருந்து தனது தந்தை நந்த மகாராஜரை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விடுவித்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு சமயம் நந்த மகாராஜாவும் பிற ஆயர்களும் சிவபெருமானை வழிபடுவதற்காகத் தமது குடும்பத்தினருடன் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து அம்பிகா வனம் என்னும் காட்டிற்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் சரஸ்வதி நதியில் நீராடி பகவான் விஷ்ணுவின் ஒரு வடிவமான பகவான் சதாசிவனை வழிபட்ட பின்னர் அன்றைய இரவுப் பொழுதை அக்காட்டிலேயே கழிக்க முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் துயில் கொண்டிருந்த பொழுது மிகுந்த பசியுடைய ஒரு பாம்பு அங்கு வந்து நந்த மகாராஜாவை விழுங்கத் தொடங்கியது. ஆபத்தில் சிக்கிக் கொண்ட நந்தமகாராஜா “ஓ, கிருஷ்ணர்! என் மைந்தனே, சரணடைந்த இந்த ஆத்மாவைக் காப்பாயாக” என்று கூக்குரலிட்டுக் கதறினார். நந்தமகாராஜாவின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்த ஆயர்கள் அங்கு கிடந்த மரக் கொம்புகளைக் கொண்டு அப்பாம்பை அடிக்கத் தொடங்கினர். ஆனால் அப்பாம்போ நந்த மகாராஜாவை விடுவதாக இல்லை. பின்னர் பகவான் கிருஷ்ணர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அப்பாம்பினைத் தனது தாமரைத் திருவடிகளினால் தீண்டினார். உடனே அங்கிருந்த பாம்பு மறைந்து அந்த இடத்...

கோபாஷ்டமி

  பகவான் பலராமரும், பகவான் கிருஷ்ணரும் தமது பௌகண்ட வயதினை (ஆறிலிருந்து பத்து வயது வரை உள்ள பருவம்) அடைந்த பொழுது, நந்த மகாராஜாவின் தலைமையின் கீழுள்ள ஆயர்குலப் பெரியவர்கள், கிருஷ்ணரும் பிற ஆயர்குலச் சிறுவர்களைப் போல் பசுக்களை மேய்க்கலாம் என்று முடிவு செய்தனர். விருந்தாவனத்தில் உள்ள ஆயர்குலப் பெரியோர்கள், இவர்கள் இருவரையும், பசுக்களை மேய்ப்பதற்கு பல யோசனைகளுக்கு பின் அனுமதியளித்தனர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அது நாள் வரை கன்றுகளை மட்டுமே கவனிக்கும் பொறுப்பில் இருந்தவர்,  இந்த கேபாஷ்டமி நன்நாளில் பசுக்களையும், காளைகளையும் கன்றுகளையும் பாதுகாக்கும் பொறுப்பிற்குரியவராகி விட்டார். இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட தீர்மானித் ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஆண்களும், ஆண் பிள்ளைகளும் பங்கு கொள்வார்கள். ஸ்ரீமதி ராதாராணி மற்றும்  அவரது நண்பர்களான இதர கோபியர்களும்  இந்த லீலைகளில் பங்கெடுத்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடன் இந்த நிகழ்ச்சிகளை ரசிக்க விரும்பினர்.  ஸ்ரீமதி ராதாராணிக்கும் சுபலாவிற்கும் உருவ ஒற்றுமை இருந்ததால் அவர் சுபலாவின்  வேஷ்டி  மற்றும்...