Skip to main content

Posts

மச்ச அவதாரம்

 மச்ச அவதாரம் வழங்கியவர் :-  ஶ்ரீல பிரபுபாதர் 🍁🍁🍁🍁🍁🍁🍁      பரமபுருஷ பகவான் தம்மை ‘ஸ்வாம்சம்’ எனப்படும் (அவரது சுய அம்சங்களாகவும்), ‘விபின்னாம்சம்’ எனப்படும் (ஜீவராசிகளாகவும்) விரிவடையச் செய்கிறார். பகவத் கீதையில் (4.8) கூறப்படுவதைப் போல், ‘பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்:’ பரமபுருஷ பகவான், சாதுக்கள், அல்லது பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்கள், அல்லது அசுரர்களை அழிக்கவும் இவ்வுலகில் தோன்றுகிறார். குறிப்பாக பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும், பக்தர்களுக்கும் மற்றும் வேத முறைப்படியுள்ள மதத்திற்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகவே அவர் அவதரிக்கிறார். இவ்வாறாக சிலசமயங்களில் ஒரு மீனாகவும், சிலசமயங்களில் ஒரு பன்றியாகவும், சிலசமயங்களில் நரசிம்ஹ தேவராகவும், சிலசமயங்களில் வாமன தேவராகவும், இன்னும் பல்வேறு உருவங்களில் அவர் தோன்றுகிறார். ஆனால் எத்தகைய உருவத்தில் அல்லது அவதாரத்தில் அவர் மூன்று இயற்கைக் குணங்களைக் கொண்ட இச்சூழ்நிலைகளின் வந்தாலும், அவர் பாதிப்படைவதில்லை. இது அவரது தெய்வீகமான ஆளும் சக்திக்குரிய ஒரூ அடையாளமாகும். அவர் பௌதிக சூழ்நிலைக்குள்...

ஸ்ரீல ரூபகோஸ்வாமி அறியாமல் செய்த குற்றம்

 ஸ்ரீல ரூபகோஸ்வாமி அறியாமல் செய்த குற்றம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருநாள் விருந்தாவனத்தில் , ஶ்ரீல ரூப கோஸ்வாமி தனது ஆழ்ந்த தியானத்தில் இதயம் முழுக்க பேரின்பத்தில் திளைத்திருந்தார். அவர் தனது சமாதிநிலையில் கோபியர்களின் அதியற்புதமான லீலைகளை கண்டு லயித்திருந்தார்.  கோபியர்கள் ஸ்ரீமதி ராதாராணியை அலங்கரித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணர் தனது வருகையை கோபியர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களுடைய இதயங்களை மகிழ்ச்சி திருவிழாவாக்கினார், இது எதுவுமே ராதாராணிக்கு தெரியாது.  கோபியர்கள் ராதாராணிக்கு அழகாக பின்னலிட்டு மலர்களால் அருமையாக அலங்கரித்தனர். அவளுடைய அழகை காண்பதற்காக கண்ணாடியை காண்பித்தனர். தனது தாமரைமுக அழகை ரசித்தபோது, கண்ணாடியில் கிருஷ்ணருடைய நிலவுமுகமும் தெரிவதைக் கண்டாள். இதனால் வெட்கமடைந்த ராதை தனது முகத்தை தனது மேலாடையால் மறைத்துக் கொண்டாள். இதனைக் கண்ட கோபியர்கள் சிரித்தபோது, ரூபகோஸ்வாமியும் சிரித்தார்.  அதே சமயத்தில்  ரூபகோஸ்வாமியை காண கிருஷ்ணதாஸர் என்ற வைஷ்ணவர் அங்கு வந்தார். ரூப கோஸ்வாமியின் சிரிப்பைக்கண்ட கிருஷ்ணதாஸ...

உத்பன்ன ஏகாதசி

  உத்பன்ன  ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁 சூத கோஸ்வாமி கூறுகிறார், "ஓ கற்றறிந்த பிராமணர்களே, பலகாலம் முன்பு முழுமுதற்கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஏகாதசியின் மகிமையையும் அந்தப் புனிதநாளில் அனுசரிக்கப்படும் விரதத்திற்கான நியமங்களையும் விளக்கமாகக்கூறியுள்ளார்.  ஏகாதசி தோன்றிய கதை 🍁🍁🍁🍁🍁🍁🍁 (பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது) கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர். அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீ...

கௌர ஆரதி

  கௌர ஆரதி அருளியவர் - பக்தி வினோத தாகூர் ********************************************************************* (1) ( கிப ) ஜய ஜய கோராசாந்தேர் ஆரதிகோ ஷோபா ஜாஹ்னவீ - தட - வனே ஜக - மன - லோபா மொழிபெயர்ப்பு சந்திரனை போன்ற ஶ்ரீ சைதன்ய மகா பிரபுவின் அழகிய ஆரத்தி நிகழ்ச்சிக்கு அனைத்து மங்களமும் உண்டாகட்டும் , இந்த கெளர ஆரத்தி யானது கங்கை கரையில் உள்ள வனத்தில் நடந்து கொண்டிருக்கிறது . இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களின் உள்ளங்களையும் இந்த ஆரத்தி யானது கவர்ந்து இழுக்கிறது (2) தக்ஷிணே நிதாஇசாந் பாமே கதாதர நிகடே அத்வைத ஸ்ரீநிவாஸ சத்ர - தர மொழிபெயர்ப்பு ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வலது புறம் நித்தியானந்த பிரபுவும் , இடது புறம் ஸ்ரீ கதாதரரும் இருக்கின்றனர் . அருகில் அத்வைதரும் , ஸ்ரீ வாச தாகூரரும் சைதன்ய மகாபிரவிற்கு குடை பிடித்தபடி நிற்கின்றனர் .   (3) பஸியாசே கோராசாந் ரத்ன - ஸிம்ம்ஹாஸனே ஆரதி கரேன பிரஹ்மா - ஆதி தேவ - கணே மொழிபெயர்ப்பு நவரத்தின சிம்மாசனத்தில் சைதன்ய மகாபிரபு அமர்...