Skip to main content

Posts

ஸ்ரீ கிருஷ்ணர்

 

இந்தியர்களது மிக முக்கியமான கடமை

  இந்தியர்களது மிக முக்கியமான கடமை ***************************************************************************** பாரத-பூமி ஹைல மனுஷ்ய ஜன்ம ஜாத ஜன்ம ஸார்தக கரி' கர பர-உபகார மொழிபெயர்ப்பு யாரெல்லாம் பாரத பூமியில் மனிதப் பிறவி எடுத்துள்ளார்களோ, அவர்கள் தங்களுடைய வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொண்டு, இதர மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் உழைக்க வேண்டும் பொருளுரை சைதன்ய மஹாபிரபுவின் வள்ளல் தன்மை இந்த மிக முக்கியமான ஸ்லோகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வங்காளத்தில் பிறந்தார் என்பதால் வங்காளிகள் அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்புக் கடமை உள்ளது என்ற போதிலும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இங்கே வங்காளர்களை மட்டுமின்றி இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரையும் விளிக்கின்றார். இந்த பாரத பூமியில்தான் உண்மையான மனித நாகரிகம் வளர்க்கப்பட முடியும் வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி மனித வாழ்க்கை இறைவனை உணர்வதற்கானதாகும், அதா தோ பிரம்ம ஜிக்ஞாஸா யாரொருவன் பாரத பூமியில் (பாரத-வர்ஷ) பிறக்கிறானோ அவன் வேத நாகரிகத்தின் உபதேசங்களையும் வழிகாட்டுதலையும் சாதகமாக ஏற்றுக்கொள்வதற்கான விசேஷ வசதிகளுடன் உள்ளான். அவன் ஆன்மீ...

சிவபெருமானின் பிரார்த்தனையும் விநாயகரின் பிறப்பும்

  சிவபெருமானின் பிரார்த்தனையும் விநாயகரின் பிறப்பும் விநாயகர் கதை வாமன புராணத்தில் கூறுவது, பார்வதி தேவி தனது வியர்வையினால் ஒரு வடிவத்தை உண்டாக்கி, அதில் சிவனின் உடலிலிருந்த சாம்பலை தொட்டு உயிரூட்டப்பட்டார். இதனாலேயே இவர் 'கர்பத்திலிருந்து பிறவாதவர்' என்று அழைக்கப்படுகிறார். பின்வரும், பிரம்ம-வைவர்த்த புராணம்,சிவா புராணம் & ஸ்கந்த புராணத்தில் கூறப்படுவது யாதெனில்: குழந்தை வரம் வேண்டி சிவனிடம், பார்வதி கூறுகிறாள் : 'மூவுலகிற்கும் இறைவனான உங்களை கணவனாக அடைந்தும், எனக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத பெண்ணின் வாழ்க்கை பிரோஜனம் இல்லாததாக கூறப்படுகிறது' என்று கூறுகிறாள் . பார்வதியின் விருப்பத்தினை பூர்த்திசெய்ய சிவபெருமான் அறிவுறுத்திகிறார் 'பண்புடையவளே ! புண்ய விரதத்தை கடைபிடித்து,பகவான் மீதான பக்தியினால் நீ செல்வாக்கு உடைய மகனை அடைவாய். இந்த விரதத்திற்கு வழிபாட்டுக்குகுறியவர் பகவான் கிருஷ்ணரே. அவரே வழிபடுபவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து, அவர்களது முன்னோர்களையும் விடுவிக்கிறார். இவரின் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் அனைத்து வெற்றிகளையும் அடைந்து, பின் வைகுண்டத்தை ...

ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

  ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி வழங்கியவர்: நித்யானந்த தாஸ் ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், ரகுநாத பட்டர், கோபால பட்டர், ஜீவர் ஆகிய ஆறு கோஸ்வாமிகள் பகவான் சைதன்யரின் முதன்மையான சீடர்களாவர். ரூபரும் ஸநாதனரும் சைதன்யரைக் காண ஏங்குதல் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, வங்காளத்தின் தலைநகரமான ராமகேலி எனும் இடத்தில் நவாப் ஹுசேன் ஷா என்பவரின் ஆட்சியில் ரூபரும் ஸநாதனரும் அமைச்சர்களாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்த பிராமணர்களாக இருந்தபோதிலும், சமூக நெருக்கடியினால் மிலேச்ச அரசருக்குக் கீழ் பணிபுரியும் நிலையில் இருந்தனர். எனினும், அவர்கள் தங்களின் உள்ளுணர்வின் மூலமாக, ராதையும் கிருஷ்ணரும் இணைந்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, “நாங்கள் உங்களை அடைவதற்கும் உங்களுக்குத் தொண்டு செய்வதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். நாங்கள் தற்போது மிகவும் தாழ்ந்த வருந்தத்தக்க நிலையில் இருக்கின்றோம்,” என்று அவர்கள் மஹாபிரபுவிற்குக் கடிதம் எழுதினர். மஹாபிரபுவிடமிருந்து அக்கடிதத்திற்கான பதில் உடனடியாக வரவில்லை. இறுதியில், மஹாபிரபு மறைமுகமான பதிலை...