ஜீவாத்மா 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவத் கீதையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது ஒரு ஜீவாத்மா என்ற உணர்வு நிலைக்கு நம்மை கொண்டு வருவதே ஆகும். இந்நிலைக்கு நாம் வந்துவிட்டால், இன்னொரு முறை “நான் இந்த உடல்” என்ற உணர்வின் மட்டத்திற்கு தள்ளப்பட மாட்டோம். இதனால் இந்த உடல் அழியும் தருவாயில் நாம் பௌதிகக் களங்கங்களில் இருந்து விடுபட்டு, நம்முடைய ஆன்மீக வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டு விடும். இத்தகைய நிலையில் நாம் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு நம்முடைய அடுத்த பிறவியில் அடையும் வாழ்க்கையானது முழுமையான, நித்தியமான ஆன்மீக வாழ்க்கையாகி விடுகிறது. இந்த உடல் அழிக்கப்பட்டவுடன் உணர்வு அழிந்துவிடுவதில்லை. மாறாக இன்னொரு உடலுக்கு அது மாற்றப்படுகிறது. மீண்டும் இன்னொரு முறை அதற்கு வாழ்க்கையின் பௌதிக கொள்கை உணர்த்தப்படுகிறது. இதுவும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. நாம் இறக்கும் தருவாயில் நம்முடைய உணர்வு தூய்மையானதாக இருக்குமாயின், நாம் நிச்சயமாக கூறலாம், நம்முடைய அடுத்த வாழ்க்கையானது பௌதிகமாக அல்லாமல் ஆன்மீகமானதாகவே இருக்கும். நம்முடைய உணர்வு மரணத் தருவாயில் தூய்மையாக இல்லாத பட்சத்தில் நாம் இந்த உடலை விட்ட பிறகு மீ...