ஆமலகீ ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பங்குனி மாத (பிப்ரவரி/ மார்ச்) வளர்ப்பிறையில் தோன்றக்கூடிய அமலகி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் மன்ததா மன்னருக்கு வசிஸ்ட முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மன்ததா மன்னர், வசிஸ்ட முனிவரிடம் கேட்டார், ஓ! அதிர்ஷ்டசாலியே, தாங்கள் என்னிடம் மகிழ்ச்சியும் கருணையும் கொண்டவராயின். தயவு செய்து, அனைத்து மங்களங்களும் அடையக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு விளக்குங்கள். வசிஸ்ட முனிவர் பதிலளித்தார்: ஓ, மன்னா, ஒருவருக்கு அனைத்து மங்களங்களையும் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த விரதத்தின் பெருமைகளையும், வரலாற்றையும் கூறுகிறேன். ஓ, மன்னா, இந்த விரதத்தின் பெயர் அமலகி ஏகாதசி. இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளை அழித்து, முக்தியை கொடுப்பதுடன் ஆயிரம் பசுக்களை தானமளிக்கும் பலனையும் கொடுக்கிறது. பழங்காலத்தில் வைடிசா என்ற ஒரு நகரம் இருந்தது. செல்வ செழிப்பு மிக்க பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் மற்றும் சூத்திரர்கள் அந்நகரில் வசித்து வந்தனர். ஓ, மன்னா இந்த அழகிய நகரில் நாத்திகரோ...