Skip to main content

Posts

அர்சா-விக்ரஹ அவதாரம்

  பக்தி யோகி, கிருஷ்ணரது விக்ரஹத்தினை வழிபாட்டிற்குரியதாக ஏற்கிறான், அதன் மூலம், உடல் சார்ந்த எண்ணங்களை மனதில் தாங்கியுள்ள மனிதனும் ஆன்மீகத்தில் ஈடுபட முடியும். பரம புருஷ பகவானை அவரது ரூபத்தின் மூலம் கோவிலில் வழிபடுவது சிலையை வழிபடுவதாகாது. ஸகுண வழிபாடு (பரமனை குணங்களுடன் வழிபடுதல்), நிர்குண வழிபாடு (குணங்களற்ற பரமனை வழிபடுதல்) ஆகிய இரண்டிற்குமான ஆதாரங்கள் வேத இலக்கியங்களில் உள்ளன. ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும். பண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. அது போலவே ...

பயம்

  ஆபன்ன: ஸ்ம்ஸ்ருதிம் கோராம்யன்-நாம விவசோ க்ருணன் தத: ஸத்யோ விமுச்யேத யத் பிபேதி ஸ்வயம் பயம் மொழிபெயர்ப்பு பயமே சொரூபமானதும் கூட கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது. அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு இறப்பெனும் சூழலில் சிக்கிக் கிடக்கும் ஜீவராசிகள் உடனே விடுவிக்கப்படுகின்றன. பொருளுரை  பரம புருஷ பகவானாகிய வாசுதேவன் அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் பரம ஆளுநராவார். பகவானின் கடுங்கோபத்திற்கு அஞ்சாதவர் ஒருவரும் படைப்பில் இல்லை. மாபெரும் அசுரர்களான இராவணன், ஹிரண்யகசிபு மற்றும் கம்ஸனைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஜீவராசிகள் அனைவரும் பரம புருஷனால் கொல்லப்பட்டனர். மேலும் சர்வ வல்லமை பொருந்தியவரான வாசுதேவன், தமது சுய சொரூபத்தின் சக்திகளையெல்லாம் அவரது நாமத்தில் பொருத்தியுள்ளார். அனைத்தும் அவருடன் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்தும் அவருடன் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்தும் அவருக்குள்ளேய அடங்கியுள்ளன. கிருஷ்ணரின் நாமத்தைக் கேட்டதும் பயமே உருவாக உள்ளதும், அஞ்சுகிறது என்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கிருஷ்ணா என்ற நாமத்திற்கும், கிர...

உலகியல் துன்பத்திலிருந்து மீளுதல்

பகவத்கீதையில் பகவான், ஒருவன் பிற எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு தம்மையே சரணடைய வேண்டும் என்று கூறுகிறார் அதில் சரண்புகுந்த ஆத்மாக்களை அவர் எல்லாவிதமான பாவச் செயல்களில் இருந்தும் காத்தருள்வார் என்று கூறுகிறார். ஶ்ரீல ரூபகோஸ்வாமி, அவர்கள் பாவச் செயல்களினால் உண்டாகும் துன்பங்களுக்கு, அப்பாவங்களும், முற்பிறப்பில் செயத பாவங்களுமே காரணம் என்று கூறுகிறார். பொதுவாக ஒருவன் அறியாமையினாலேயே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான் அதனால் பாவங்களில் இருந்து தப்புவதற்கு அறியாமை ஒரு பரிகாரம் ஆகிவிட்டது. பாவச் செயல்கள் இரு வகைப்படும் அவை முதிர்ந்த பாவச்செயல்கள், மற்றும் முதிராத பாவச் செயல்கள் . எந்தப் பாவச் செயல்களின் காரணமாக நாம் இப்பொழுது துன்பம் அனுபவித்து கொண்டிருக்கிறோமோ அவை முதிர்ந்த பாவச்செயலாகும். நம்மிடம் சேர்ந்திருக்கும் பாவச் செயல்களின் காரணமாக நாம் இன்னும் துன்பம் அனுபவிக்க வில்லை என்றால் அவை முதிராத பாவச்செயலாகும். இதற்கு உதாரணமாக பல குற்றங்களைச் செய்த ஒருவன் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதை கூறலாம். இப்போது அவன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சிறைவாசம் அவனுக்கு காத்துக் கொண்டிருக்கிறது ஆகையால் நமது ...

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

 

நான் இந்த உடல் அல்ல

 

பல்வேறு கோணத்தில் பல்வேறு கிருஷ்ணர்

  கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு கண்டனர் என்பதே தெரியாத தணுக்கு. அரங்கின் வாயிலில் இருந்த குவலயாபீட என்ற யானையைக் கொன்று தமது சக்தியை அனைவருக்கும் வெளிப்படுத்திய கிருஷ்ணர் தமது அண்ணன் பலராமருடன் அரங்கினுள் நுழைந்தார். அத்தருணத்தில் அந்த அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் கிருஷ்ணருடனான தத்தமது உறவிற்கு ஏற்ப அவரைக் கண்டனர். அதாவது, ஒரே தருணத்தில் கிருஷ்ணர் அனைவருடனும் பத்து விதமான காப்பியச் சுவையை (ரஸத்தை) வெளிப்படுத்தினார். அங்கிருந்த மல்லர்கள் தங்களால் கிருஷ்ணருக்கு மரணம் நிகழப் போகிறது என்று செருக்குடன் இருந்த சமயத்தில், கிருஷ்ணரின் வஜ்ராயுதம் போன்ற திருமேனியைக் கண்டு கடும் சினம் கொண்டனர். அதனால் அவர்கள் அவரை இடியாகக் கண்டனர். (ரௌத்ர ரஸம்-சினஞ்சுவை) அங்கிருந்த மக்களும் அரசர்களும் கிருஷ்ணரின் திருமேனியில் அற்புதமான அவயங்களைக் கண்டு வியப்புற்றதால், அவரை மனிதகுல மாணிக்கமாகக் கண்டனர். (அத்புத ரஸம்-வியப்புச்சுவை) அங்கிருந்த இளம் கன்னியர்கள் கிருஷ்ணரின் பேரழகைக் கண்ட...

நமது இன்ப துன்பங்களுக்கு யார் பொறுப்பு ?

  பரம புருஷர் அனைத்திற்கும் முடிவான கர்த்தா என்றாலும் அவரது மூல ஆன்மீக நிலையில், பந்தப்பட்ட ஆத்மாக்களின் இன்ப துன்பத்திற்கோ, அல்லது பந்த மோட்சத்திற்கோ அவர் பொறுப்பாளி அல்ல. இவை இந்த ஜட உலகிலுள்ள ஜீவராசிகளின் கர்ம பலன்களால் விளைகின்றன. ஒரு நீதிபதியின் உத்தரவினால், ஒருவன் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகிறான் மற்றொருவன் சிறையில் அடைக்கப்படுகிறான். இந்த வெவ்வேறு மனிதர்களின் இன்ப துன்பங்களுக்கு அவரவர் சொந்த செயல்களே காரணம் என்பதால் இதற்கு நீதிபதி பொறுப்பாளி அல்ல. அரசாங்கமே முடிவாக உயர்ந்த அதிகாரம் உடையது என்றாலும், தனி நபர்களுக்குரிய தீர்ப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல. எனவே அரசாங்கம் எல்லா பிரஜைகளிடமும் சமமாகவே நடந்து கொள்கிறது. அதுபோலவே பரமபுருஷரும் அனைவருக்கும் சமமானவரவார். ஆனால் சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்ற அவரது மேலான அரசாங்கம் பல்வேறு இலாக்காக்களைக் கொண்டுள்ளது. அவை ஜீவராசிகளின் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன . இது தொடர்பாக கொடுக்கப்படும் மற்றொரு உதாரணம் என்னவெனில் சூரிய ஒளியின் காரணத்தினால் தான் குமுத மலர்கள் மலரவோ, மூடவோ. செய்கின்றன. இவ்வாறாக வண்டுகள் இன்புறுகின்றன , அ...

காகங்களும் அன்னப் பறவைகளும்

  ந யத் வசஸ் சித்ர-பதம் ஹரேர் யசோ ஜகத்-பவித்ரம் ப்ரக்ருணீத கர்ஹிசித் தத் வாயஸம் தீர்தம் உசந்தி மானஸா ந யத்ர ஹம்ஸா நிரமந்தி உசிக்-க்ஷயா: மொழிபெயர்ப்பு 🔆🔆🔆🔆🔆🔆🔆 பிரபஞ்சத்தின் முழு சூழ்நிலையையும் தூய்மைப்படுத்தக்கூடியவர் பகவான் ஒருவரேயாவார். அவரது பெருமைகளை விவரிக்காத அந்த சொற்கள் காக்கைகளைப் போன்ற கர்மிகளின் தீர்த்தம் என்று புண்ணிய புருஷர்களால் கருதப்படுகின்றன. பூரணத்துவம் பெற்றவர்கள் பரலோகவாசிகளாக இருப்பதால், காக்கைகளுக்குரிய இடத்தில் அவர்கள் எவ்வித இன்பத்தையும் பெறுவதில்லை. பொருளுரை 🔆🔆🔆🔆🔆🔆🔆 காகங்களும் அன்னப் பறவைகளும் மன வேறுபாடு கொண்டவை என்பதால் அவை ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் அல்ல. பலனை எதிர்பார்த்து செயற்படுபவர்கள் (கருமிகள்) காகங்களோடு ஒப்பிடப்படுகின்றனர். ஆனால் பூரணத்துவம் பெற்ற புண்ணியவான்கள் அன்னப் பறவைகளோடு ஒப்பிடப்படுகின்றனர். கருமிகள் மதுவிலும், மங்கையிலும், புலன் நுகர்விலும் இன்பம் பெறுவதைப் போலவே, வெளியில் வீசப்படும் குப்பைகள் இருக்கும் இடத்தில் காகங்கள் இன்பம் பெறுகின்றன. காகங்கள் கூடும் இடங்களில் அன்னப் பறவைகள் இன்பம் அடைவதில்லை. மாறாக, பல நிறங்களையும், ...

உண்மையான யோகப் பயிற்சி

  ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்தி ரம் ஆஸனம் ஆத்மன: நாத்-யுச்சரிதம் நாதி-நீசம் சைலாஜின-குஷோத்தரம் தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா யத-சித்தேந்த்ரிய-க்ரிய: உபவிஷ்யாஸனே புஞ்ஜ்யாத் யோகம்-ஆத்ம-விஷுத்தயே மொழிபெயர்ப்பு ****************** யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று, நிலத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரகமாவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர், இதன்மேல் ஸ்திரமாக அமர்ந்து, மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக யோகியானவன் யோகத்தைப் பயில வேண்டும். பொருளுரை ****************** "புனிதமான இடம்" என்பது புண்ணிய யாத்திரைத் தலங்களைக் குறிக்கின்றது. இந்தியாவில் யோகிகள் அனைவரும் (ஆன்மீகர்களும் பக்தர்களும்) வீட்டை விட்டு வெளியேறி, கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகள் ஓடும் பிரயாகை, மதுரா, விருந்தாவனம், ரிஷிகேஷ், ஹரித்வார் போன்ற புனிதத் தலங்களை அடைந்து, தனிமையில் யோகத்தைப் பயில்கின்றனர். ஆனால் இஃது அனைவருக்கும் சாத்தியமானதல...

உணர்வே ஆத்மாவின் அறிகுறியாகும்

 

ஆத்மா

 

ஆத்மா

 

ஆத்மா