'ஸ்ரீல பிரபுபாதா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார். 1896-ல் நம் பாரத தேசத்தின் கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயர் 'அபய்சரண்தே '. அதாவது கிருஷ்ணரை சரணடைந்தவர் என்று பொருள். பெயருக்கேற்றார் போல் சிறுவயது முதலே, இவரது தந்தை கௌர்மோகன் கிருஷ்ண பக்தியுடன் இவரை வளர்த்தார். பல பல கிருஷ்ண பக்தியை ஊக்கவிக்கும் கதைகளை கேட்டு வளர்ந்த அபயின் மனதை கவர்ந்த விஷயம் வருடா வருடம் கல்கத்தாவில் நடைபெறும் ஸ்ரீஜகந்நாதரின் ரதயாத்திரை உத்ஸவம். ராதா கோவிந்தா கோவிலில் நடைபெறும் ரதயாத்திரைதான் கல்கத்தாவிலேயே பெரிய ரத யாத்திரையாகத் திகழ்ந்தது. இந்த ரதயாத்திரையில் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா ஆகியோர் மூன்று தனித்தனி ரதங்களில் பவனி வந்தனர். ரதங்கள் ஹாரிசன் ரோடிலிருந்து கிளம்பி சிறிது தூரம் பயணம் செய்து விட்டு திரும்பி வந்து விடும். ரத யாத்திரையன்று ராதா கோவிந்தா கோயில் நிர்வாகிகள் ஏராளமாக பிரசாதம் செய்து ஜனங்களுக்கு விநியோகம் செய்வார்கள். ரதயாத்திரை என்பது ஆண்டுதோறும் இந்தியா...