Skip to main content

Posts

பிள்ளை பருவத்தில் ஸ்ரீல பிரபுபாதர் கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாத ரதயாத்திரை

  'ஸ்ரீல பிரபுபாதா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார். 1896-ல் நம் பாரத தேசத்தின் கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயர் 'அபய்சரண்தே '. அதாவது கிருஷ்ணரை சரணடைந்தவர் என்று பொருள். பெயருக்கேற்றார் போல் சிறுவயது முதலே, இவரது தந்தை கௌர்மோகன் கிருஷ்ண பக்தியுடன் இவரை வளர்த்தார். பல பல கிருஷ்ண பக்தியை ஊக்கவிக்கும் கதைகளை கேட்டு வளர்ந்த அபயின் மனதை  கவர்ந்த விஷயம் வருடா வருடம் கல்கத்தாவில் நடைபெறும் ஸ்ரீஜகந்நாதரின் ரதயாத்திரை உத்ஸவம்.  ராதா கோவிந்தா கோவிலில் நடைபெறும் ரதயாத்திரைதான் கல்கத்தாவிலேயே பெரிய ரத யாத்திரையாகத் திகழ்ந்தது. இந்த ரதயாத்திரையில் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா ஆகியோர் மூன்று தனித்தனி ரதங்களில் பவனி வந்தனர். ரதங்கள் ஹாரிசன் ரோடிலிருந்து கிளம்பி சிறிது தூரம் பயணம் செய்து விட்டு திரும்பி வந்து விடும். ரத யாத்திரையன்று ராதா கோவிந்தா கோயில் நிர்வாகிகள் ஏராளமாக பிரசாதம் செய்து ஜனங்களுக்கு விநியோகம் செய்வார்கள். ரதயாத்திரை என்பது ஆண்டுதோறும் இந்தியா...

யோகினி ஏகாதசி

ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் /ஜூலை) தோன்றக்கூடிய யோகினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார், ஓ! முழுமுதற் கடவுளே! ஓ! மதுசூதனா நான் நிர்ஜல ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டுள்ளேன். இப்பொழுது ஆனி மாத (ஜூன்/ஜூலை) தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! ஆனி மாத தேய்பிறையில் (ஜூன்/ஜூலை) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி நான் விளக்குகிறேன். இந்த ஏகாதசியின் பெயர் யோகினி. எல்லா கடுமையான பாவ விளைவுகளையும் அழித்து ஒருவரை ஜட இருப்பிலிருந்து விடுவிக்கிறது. ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த உண்மையை விளக்க புராணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறுகிறேன். அழகாபுரியின் மன்னனான குபேரன். பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன், அவரிடம் யக்ஷ வம்சத்தை சேர்ந்த தோட்டக்காரன் இருந்தான். அவன் பெயர் ஹேமா. அவன் மனைவியின் பெயர் விசாலாக்ஷி மிக அழகானவர். ஹேமா அவனிடம் மிக்க பற்று கொண்டிருந்தான். ஹேமா தினந்தோறும் மானஸ சரோவ...

முரண்பாடான சம்பவங்களும் யுதிஷ்டிரரின் விளக்கமும்

அரசர் யுதிஷ்டிரரின் ஆட்சியின் போது, நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். அதனால், எவருக்கேனும் கேள்விகளோ, பிரச்சனைகளோ இருந்தால், அவரிடம் மட்டுமே உதவி நாடி வந்தனர். ஒரு நாள், விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும், அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக, அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு சகஜமாக இருந்தது; ஆனால், இதைப் போன்ற விஷயங்களைக் கண்டு பீமனுக்கு வியப்பாக இருந்ததால், அவனை யுதிஷ்டிரரிடம் செல்லும் படியாக அவர் கூறினார். அதே தினத்தில், இன்னொரு விசித்திரமான சம்பவமும் நடந்தது. வேறொருவன் தன் கதையை இவ்வாறு கூறினான் – அவனிடம் ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதை முதலில் சிறிய பானைகளில் நிரப்பிய பிறகு, மறுபடியும் அச்சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்குள் நிரப்பிய போது, பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன், அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். கூடிய விரைவில், மூன்றாவதாக ஒ...

கலியுக அவதாரம் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர்

 

கலியுக அவதாரம் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர்

 

கலியுக அவதாரம் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர்

 

தூய பக்தித் தொண்டு

 

கலப்படமற்ற பக்தி

 

தூய பக்தித் தொண்டின் பூரணத்துவம்

 

சுத்த பகத சரண ரேணு

சுத்த பகத சரண ரேணு  (அருளியவர் :- ஶ்ரீல பக்தி வினோத தாகூர்) (1)   சுத்த பகத சரண ரேணு  பஜன அனுகூல  பகத சேவா பரம சித்தி  ப்ரேம லதிகார மூல மொழிபெயர்ப்பு சுத்த பக்தர்களது பாதத் தூளிகள் பக்தித் தொண்டிற்கு அனுகூலமானவை. பக்தர்களுக்கு சேவை செய்வதே பரம சித்தியும், பிரேமை என்னும் கொடியின் வேருமாகும். (2) மாதவ திதி பக்தி ஜனனி ஜதனே பாலன கோரி  க்ருஷ்ண பசதி பசதி போலி  பரம ஆதரே போரி மொழிபெயர்ப்பு ஏகாதசி, ஜென்மாஷ்டமி ஆகிய நாள்கள் பக்திக்கு அன்னையாகத் திகழ்வதால், நான் அச்சமயங்களில் கவனத்துடன் விரதம் அனுசரிக்கிறேன். பெரும் அன்புடனும் மதிப்புடனும் ஸ்ரீ கிருஷ்ணாது தெய்வீக தாமத்தை எனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். (3) கௌர் ஆமார ஜே சப ஸ்தானே  கோரலோ ப்ரமண ரங்கே சே சப ஸ்தான ஹேரிபோ ஆமி  ப்ரணயி பகத சங்கே  மொழிபெயர்ப்பு எனது கௌராங்கர் தமது லீலைகளுக்காக எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் நான் பக்தர்களுடைய சங்கத்துடன் செல்வேன். (4) ம்ருதங்க பாத்ய சுனிதே மன  அபசர சதா ஜாசே  கௌர பிஹித கீர்தன சுனி  ஆனந்த ஹ்ருதோய நாசே மொழிபெயர்ப்பு மிருதங்க வாத்தியத்...

ஓஹே, வைஷ்ணவ தாகுர தோயார சாகர

  ஓஹே, வைஷ்ணவ தாகுர தோயார சாகர  (அருளியவர் :- ஶ்ரீல பக்தி வினோத தாகூர்) 🔅🔅🔅🔅🔅🔅 (1) ஓஹே வைஷ்ணவ தாகுர தோயார சாகர  ஏ தாஸே கோருணா கோரி தியா-பத-சாயா சோதோ ஹே ஆமாயா தோமார சரண தோரி மொழிபெயர்ப்பு (1) பெருமதிப்பிற்குரிய வைஷ்ணவ தாகூரே, கருணையின் கடலே, என் மீது கருணைக் காட்டுவீராக. உமது திருவடி நிழலைக் கொண்டு இந்த சேவகனைத் தூய்மைப்படுத்துவீராக, நான் உமது திருவடிகளைப் பற்றிக் கொண்டுள்ளேன். (2) சய பேக தோமி சய தோஷ சோதி  சய குண தேஹோ தாஸே  சய சத்-சங்க தேஹோ ஹே ஆமாரே  போசேசி சங்கேர ஆசே மொழிபெயர்ப்பு உமது தாஸனான எனது ஆறு உந்துதல்களைக் * கட்டுப்படுத்தி, ஆறு தவறுகளைத் தூய்மைப்படுத்தி, ஆறு நற்குணங்களை* எனக்கு அளிப்பீராக. ஆறு விதமான சத்சங்கத்தினையும் எனக்கு அளிப்பீராக. உமது சங்கத்தைப் பெறும் நோக்கத்துடன் நான் இங்கு அமர்ந்துள்ளேன். (3) ஏகாகி ஆமார, நாஹி பாய பல ஹரி நாம சங்கீர்தன  துமி  கி ருபா கோரி ஷ்ரத்தா பிந்து தியா  தேஹோ  கி ருஷ்ண நாம தனே மொழிபெயர்ப்பு  தனிமையில் ஹரி நாம ஸங்கீர்த்தனம் புரிய எனக்கு பலமில்லை. எனவே, ஒரு துளி நம்பிக்கையை வழங்கி, கிருஷ்ண ...

வக்ரேஷ்வர பண்டிதர்

  ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகவும் பிரியமான சேவகர் ஆவார்,  கௌர-கணோத்,தேஷ தீபிகா வில், வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் நாராயணரிலிருந்து வரும் (வாசுதேவர், சங்கர்சனர், அனிருத்தர், மற்றும் பிரதியும்னர்) நான்கு விரிவாக்கங்களில் ஒன்றான அனிருதரின் அவதாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வக்ரேஷ்வர பண்டிதரின் சீடர் கோபால குரு கோஸ்வாமியும் , கோபால குரு கோஸ்வாமியின் சீடரான தியான் சந்திரரும் அவர்கள் எழுதிய புத்தகங்களில் வக்ரேஷ்வர பண்டிதர், ஸ்ரீமதி ராதரானியின் நெருங்கிய தோழிகளான அஷ்ட-சகிகளில் ஒருவரான துங்கவித்யா-சகியின் அவதாரம் என்று கூறுகிறார். இந்த துங்கவித்யா சகி மிக சிறந்த பாடகரும் நேர்தியான நடனக் கலைஞருமாவார். வக்ரேஷ்வர பண்டிதர் நதியா மாவட்டம், திரிவேணிக்கு அருகிலுள்ள குப்தபரா என்னும் கிராமத்தில் பிறந்தார். அனுதினமும் ஸ்ரீவாச பண்டிதரின் வீட்டில் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் ,மற்றும் நாட்டிய நாடகங்கள் நடைபெறும். அதில் பங்கு கொண்டு நடித்தபோது, ​​வக்ரேஷ்வர பண்டிதர் தலைமை நடனக் கலைஞர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் தொடர்ந்து எழுபத்திரண்டு...