Skip to main content

Posts

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -10

  பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -10 பூரணத்தின் வைபவம் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஒன்பதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பொறாமையற்ற நபர்கள் கிருஷ்ண ரைப் பற்றிக் கேட்பதால் பெறக்கூடிய அறிவு, எல்லா அறிவின் அரசனாகவும் மிகமிக இரகசியமானதாகவும் உள்ளது. கிருஷ்ணர் அனைத்தையும் படைப்பவர், ஆனால் அவர் அவற்றிலிருந்து வேறுபட்டவர். ஜட இயற்கையின் மீது தனது பார்வையைச் செலுத்துவதாலேயே அவர் அதைப் படைக்கின்றார். இருப்பினும் முட்டாள்கள் அவரை சாதாரண மனிதனாக நினைத்து ஏளனம் செய்கின்றனர். அத்தகையோரின் அனைத்து முயற்சிகளும் அழிந்துவிடும். கிருஷ்ணரை இறைவனாக ஏற்று, எப்போதும் கீர்த்தனத்தில் ஈடுபட்டுள்ள மஹாத்மாக்கள் அவரது தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் இருக் கின்றனர். கிருஷ்ணரை நேரடியாக வழிபடாத மக்களில் சிலர் அவரது பௌதிகத் தோற்றத்தையும், சிலர் தேவர்களையும் வழிபடுகின்றனர். தேவர்களை வழிபடுவோர் தேவர்களை அடைவர் என்றபோதிலும், அத்தகு வழிபாடு தவறானதாகும். கிருஷ்ணரைத் தூய பக்தியுடன் வழிபடுவோரை அவரே கவனித்துக் கொள்கிறார். கிருஷ்ணரை வழிபடுதல் மிகவும் எளிதானது. அனைவரையும் சமமாகக் காணும் கிருஷ்ணர் தனது...

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -9

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -9 மிக இரகசியமான அறிவு வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் எட்டாம் அத்தியாயத்தின் சுருக்கம் ஏழாம் அத்தியாயத்தின் இறுதியில் கிருஷ்ணர் உபயோகித்த சில வார்த்தைகளுக்கு, எட்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் விளக்கம் கேட்டதால், கிருஷ்ணர் அவற்றை விளக்கினார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் பொதுவான கேள்விகளுக்கு சுருக்கமான பதிலை வழங்கி விட்டு, மரண நேரம் குறித்த கேள்வியை மட்டும் விளக்கமாக எடுத்துரைத்தார். மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைப்பவன், நிச்சயமாக கிருஷ்ணரை அடைய முடியும். உண்மையில், மரண நேரத்தில் ஒருவன் எந்த நிலையை நினைத்தாலும், நிச்சயம் அதனை அடைவான். எனவே, ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணரை நினைக்கப் பழக வேண்டும், அவ்வாறு பழகுபவனால் மரண நேரத்தில் கிருஷ்ணரை எளிதில் நினைக்க முடியும். கிருஷ்ணரை யோகப் பயிற்சியின் மூலம் நினைக்க விரும்புபவர்கள், அவரை எல்லாமறிந்தவர், கட்டுப்படுத்துபவர் என்று நினைப்பர். தூய பக்தர்களோ பிறழாத மனதுடன் எப்போதும் கிருஷ்ணரின் நேரடியான அன்புத் தொண்டில் ஈடுபட்டு, அவரை ஒருபோதும் மறக்க முடியாத நிலையில் உள்ளனர். அத்தகு மக...

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -8

  பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -8 அத்தியாயம் எட்டு : பரத்தை அடைதல் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஏழாம் அத்தியாயத்தின் சுருக்கம் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்; கிருஷ்ணரை அறிந்தவர் மேலும் அறிவதற்கு ஒன்றும் இல்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய எட்டு பௌதிகப் படைப்புகளும் கிருஷ்ணரின் சக்திகளே, இவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஜீவனும் அவரது சக்தியே. கிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் மூலம், அவரைவிட உயர்ந்த உண்மை வேறெதுவும் இல்லை. அனைத்திலும் அவரே முக்கிய அம்சமாக உள்ளார். அவரது தெய்வீக சக்தியான மாயையை வெல்வது மிகவும் அரிது, ஆனால் அவரிடம் சரணடைவோர் அதனை எளிதில் கடக்கலாம். இருப்பினும், நான்கு வித மக்கள் அவரிடம் சரணடைவதில்லை. அவரிடம் சரணடையும் நான்கு வித நல்லோரில் ஞானியே மிகச் சிறந்தவன். ஆனால் போதிய அறிவற்ற மக்களோ, பௌதிக ஆசைகளில் மயங்கி தேவர்களிடம் சரணடைகின்றனர். அவர்களுக்கான பலன்களை கிருஷ்ணரே வழங்குகிறார் என்றபோதிலும், அவை தற்காலிகமானவை. கிருஷ்ணரின் உருவத்தை மறுத்து, பரம்பொருள் அருவமானது என்று கருதுவோர், தே...