Skip to main content

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -10


 பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம்

அத்தியாயம் -10

பூரணத்தின் வைபவம்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

ஒன்பதாம் அத்தியாயத்தின் சுருக்கம்

பொறாமையற்ற நபர்கள் கிருஷ்ண ரைப் பற்றிக் கேட்பதால் பெறக்கூடிய அறிவு, எல்லா அறிவின் அரசனாகவும் மிகமிக இரகசியமானதாகவும் உள்ளது. கிருஷ்ணர் அனைத்தையும் படைப்பவர், ஆனால் அவர் அவற்றிலிருந்து வேறுபட்டவர். ஜட இயற்கையின் மீது தனது பார்வையைச் செலுத்துவதாலேயே அவர் அதைப் படைக்கின்றார். இருப்பினும் முட்டாள்கள் அவரை சாதாரண மனிதனாக நினைத்து ஏளனம் செய்கின்றனர். அத்தகையோரின் அனைத்து முயற்சிகளும் அழிந்துவிடும். கிருஷ்ணரை இறைவனாக ஏற்று, எப்போதும் கீர்த்தனத்தில் ஈடுபட்டுள்ள மஹாத்மாக்கள் அவரது தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் இருக் கின்றனர். கிருஷ்ணரை நேரடியாக வழிபடாத மக்களில் சிலர் அவரது பௌதிகத் தோற்றத்தையும், சிலர் தேவர்களையும் வழிபடுகின்றனர். தேவர்களை வழிபடுவோர் தேவர்களை அடைவர் என்றபோதிலும், அத்தகு வழிபாடு தவறானதாகும். கிருஷ்ணரைத் தூய பக்தியுடன் வழிபடுவோரை அவரே கவனித்துக் கொள்கிறார். கிருஷ்ணரை வழிபடுதல் மிகவும் எளிதானது. அனைவரையும் சமமாகக் காணும் கிருஷ்ணர் தனது பக்தர்களிடம் தனிக்கவனம் செலுத்துகிறார். பக்தன் ஏதேனும் காரணத்தினால் தவறு செய்தாலும், அவனை கிருஷ்ணர் பக்தனாகவே கருதி, விரைவில் அவன் நல்லவனாக மாற உதவி புரிகிறார். பக்தித் தொண்டில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பரம கதியை அடைய முடியும் என்பதால், அனைவரும் கிருஷ்ணரை நினைத்து, அவரது பக்தனாகி, அவரையே வழிபடும்படி பரிந்துரைக்கப்படுகின்றனர்.

ஒன்பதாம் அத்தியாயத்திற்கும் பத்தாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

ஒன்பதாம் அத்தியாயத்தின் இறுதி யில், தூய பக்தித் தொண்டையும் தனது பக்தர்களுடன் பழகும் முறையையும் விளக்கிய கிருஷ்ணர், மன்-மனா பவ மத்-பக்தோ, என்னையே நினைத்து என்னுடைய பக்தனாகு,” என்று தனது மிகமிக இரகசியமான உபதேசத்தை வழங்கினார். ஒன்பதாம் அத்தியாயத்தில் கூறப்பட்ட அறிவின் இரகசியமான பகுதியினை கிருஷ்ணர் இந்த அத்தியாயத்திலும் தொடர்கிறார். அத்தியாயம் பத்து, பூரணத்தின் வைபவம்” என்று தலைப்பிடப்பட் டுள்ளது. இவ்வத்தியாயத்தில் கிருஷ்ணர் தனது ஐஸ்வர்யங்கள், சக்திகள் மற்றும் நிலையைப் பற்றி மேலும்விளக்குகிறார்.

அர்ஜுனன் தனது நண்பன் என்பதால், தன்னைப் பற்றிய விவரங்களை கிருஷ்ணர் அவனுக்கு தாராளமாக எடுத்துரைக்கின்றார். வாழ்வின் குறிக்கோள் பக்தியே என்பதையும் தானே பரம புருஷ பகவான் என்பதையும் ஏற்கனவே கூறிவிட்ட கிருஷ்ணர், அர்ஜுனனின் நம்பிக்கையை மேலும் வலுப்பெறச் செய்வதற்காக தன்னுடைய வைபவங்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறுகிறார். ஒரு நண்பனின் மாபெரும் நிலையை உணரும்போது, அவரை நண்பராகப் பெற்றவன் தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக நினைப்பதைப் போல, கிருஷ்ணரின் மிகவுயர்ந்த நிலையை நாம் உணர்ந்தால், அதனால் பெருமைப்படுவது நிச்சயம்.

தேவர்கள், மாபெரும் ரிஷிகள் என அனைவருக்கும் கிருஷ்ணரே மூலமாக இருப்பதால், யாராலும் அவரது எல்லையற்ற வைபவங்களை முழுமையாக உணர முடியாது. இருப்பினும் அவரே தன்னுடைய வைபவங்களை நமக்கு தெரியப்படுத்தும்போது, நம்மால் அவற்றின் ஒரு சிறு பகுதியைப் புரிந்துகொண்டு அவருக்குத் தொண்டாற்ற முடியும். கிருஷ்ணரை பிறப்பற்றவராகவும் ஆரம்பமற்றவராகவும் எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிபவன் தனது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவான். புத்தி, ஞானம், மயக்கத்திலிருந்து விடுதலை, வாய்மை, அகிம்சை, தவம், தானம் போன்ற பல்வேறு குணங்களும் கிருஷ்ணரால் படைக்கப்பட்டவையே. சப்த ரிஷிகள், நான்கு குமாரர்கள், இதர உயிரினங்கள் என அனைத்தும் கிருஷ்ணரி டமிருந்து தோன்றியவை என்பதை உண்மையாக அறிபவன், கிருஷ்ணரின் மீதான களங்கமற்ற பக்தித் தொண்டில் ஈடுபடுகிறான்
.
கீதையின் முக்கியமான நான்கு ஸ்லோகங்கள்

என்னைப் பற்றி அறிபவன் எனது பக்தித் தொண்டில் ஈடுபடுகிறான் என்று கூறிய கிருஷ்ணர், பத்தாம் அத்தியா யத்தின் எட்டு முதல் பதி னொன்று வரையுள்ள நான்கு ஸ்லோகங்களில் கீதையின் அனைத்து கருத்துகளையும் சுருக்கமாக எடுத்துரைக்கின் றார். எனவே, இந்த நான்கு ஸ்லோகங்களும் கீதையின் சதுர்-ஸ்லோகங்கள் என்று அறியப்படுகின்றன.

ஸ்லோகம் எட்டு: ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.” தானே முழுமுதற் கடவுள் என்பதையும் பக்தியே உயர்ந்த வழிமுறை என்பதையும் கிருஷ்ணர் இதில் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

ஸ்லோகம் ஒன்பது: எனது தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னில் மூழ்கியுள்ளன, அவர்களது வாழ்க்கை எனது தொண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னைப் பற்றி தங்களுக்குள் உரையாடுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்வதிலும் இவர்கள் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்.” தனது பக்தர்கள் தன்னை எவ்வாறு வழிபடுகின்றனர் என்பதை கிருஷ்ணர் இங்கு தெளிவுபடுத்துகிறார். பக்த சங்கத்தின் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

ஸ்லோகம் பத்து: எனது அன்புத் தொண்டில் இடையறாது ஈடுபட்டிருப்பவர்களுக்கு, என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்.” தன்னை வழிபடும் பக்தர்களிடம் தான் எவ்வாறு நடந்து கொள்கிறேன் என்பதை கிருஷ்ணர் இங்குத் தெரியப்படுத்தி நம்மை ஊக்கப்படுத்துகிறார். கிருஷ்ண பக்தியை ஏற்றுக்கொள்வோர் தங்களிடம் போதிய அறிவு இல்லை என்று எண்ண வேண்டாம், தேவையான அறிவை கிருஷ்ணரே கொடுப்பார் என்ற நம்பிக்கை இதன்மூலம் ஊட்டப்படுகிறது.

ஸ்லோகம் பதினொன்று: அவர்களிடம் விசேஷ கருணை யைக் காட்டுவதற்காக, அவர்களது இதயத்தினுள் வசிக்கும் நான், அறியாமையினால் பிறந்த இருளை ஞானமெனும் சுடர்விடும் தீபத்தினால் அழிக்கின்றேன்.” கிருஷ்ணர் தனது பக்தனுக்கு அறிவைக் கொடுக்கும்போது, அவனது இதயத்தில் இருக்கும் அனைத்து இருளும் மறைந்துவிடுகிறது.

கிருஷ்ணர் யார் என்பதையும் அவர் தனது தூய பக்தர்களிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதையும் அறிந்த நபர்கள் இயற்கையாக அவரிடம் சரணடைவர். அதன்படி, சதுர் ஸ்லோகத்தைக் கேட்ட பின்னர், கிருஷ்ணரை அர்ஜுனன் மீண்டும் புகழத் தொடங்குகிறான்.

அர்ஜுனன் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ளுதல்

கிருஷ்ணர் உரைத்த சதுர் ஸ்லோகத்தைக் கேட்டவுடன், கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், பரபிரம்மன், பரம சத்தியம், ஆதி தேவர் என்று அர்ஜுனன் ஏற்றுக் கொண்டான். அர்ஜுனன் கிருஷ்ணருடைய நண்பன்; அதனால் அவன் அவரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டான் என்று சிலர் குறை கூறலாம் என்பதால், எல்லா வேத இலக்கியங்களையும் தொகுத்த வியாச தேவர், மாமுனிவர்களான நாரதர், தேவலர், அஸிதர் போன்ற பலரும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுள்ளனர் என்று அர்ஜுனன் மேற்கோள் காட்டினான்.

கிருஷ்ணர் கூறியவை அனைத்தையும் அர்ஜுனன் முழுமையாக ஏற்றான். பாதியை ஏற்று பாதியை மறுக்கக்கூடிய நபர்களால் பகவத் கீதையையும் கிருஷ்ணரையும் புரிந்துகொள்ள முடியாது. நாம் கீதையைப் பின்பற்ற விரும்பினால், அர்ஜுனனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கீதையை முழுமையாக ஏற்க வேண்டும். கிருஷ்ணர் எவ்வாறு இவ்வுலகம் முழுவதும் வியாபித்துள்ளார் என்பதை அறிய விரும்பிய அர்ஜுனன், அவற்றை விளக்கும்படி கிருஷ்ணரிடம் வேண்டினான். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் ஒருபோதும் சோர்வடையாத அர்ஜுனன், அமிர்தம் போன்ற அவரது வார்த்தைகளை மேன்மேலும் சுவைக்க விரும்பினான்.

கிருஷ்ணரின் வைபவங்கள்

அர்ஜுனனின் வேண்டுகோளைத் தொடர்ந்து கிருஷ்ணர் தான் இவ்வுலகில் எவ்வாறெல்லாம் வீற்றுள்ளேன் என்பதை எடுத்துரைக்கத் தொடங் கினார். கிருஷ்ணரின் வைபவங்கள் அளவற்றவை என்பதால், அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறினார். கிருஷ்ணர் கூறிய வைபவங்களைப் பார்க்கும்போது, இவ்வுலகில் சிறப்பானதாக என்னவெல்லாம் உள்ளதோ, அவையனைத்தும் கிருஷ்ணரின் சக்தியே என்பதை நம்மால் உணர முடியும். இவ்வுலகிற்கு ஒளி கொடுக்க எத்தனையோ மூலங்கள் உள்ளபோதிலும், அவற்றில் தலைசிறந்ததாகவும் தன்னிகரற்றதாகவும் விளங்குவது சூரியனே. அந்த சூரியன் கிருஷ்ணரே என்று விளக்கப்படுகிறது.

நீண்ட பட்டியலை தனது வைபவங்களாக எடுத்துரைத்த பின்னர், இவையனைத்தும் எனது தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே,” என்று கூறியதன் மூலம், கிருஷ்ணர் தன்னுடைய உயரிய நிலையை மீண்டும் தெளிவுபடுத்தினார். மேலும், இவற்றை விவரமாக அறிவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும், பிரபஞ்சம் முழுவதும் உள்ள அனைத்தும் தன்னால் மட்டுமே தாங்கப்பட்டுள்ளதாகவும் கூறி கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தினை நிறைவு செய்கிறார்.


"இக்கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"

 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...