கிருஷ்ண பக்தர்கள் எப்போதும் விருந்தாவனத்தில் வசிக்க விரும்புகிறார்கள். ஆனால் விருந்தாவனத்தில் வாழ்வது என்றால் என்ன? மேலும் அணைவரும் விருந்தாவனத்தில் வாழ்வது சாத்தியமா ? என்பதை இனி விளக்கமாக கான்போம் விருந்தாவனத்தில் வசிப்பது என்றால் என்ன ? விருந்தாவனத்தில் வசிப்பது என்பது அங்கு உடல் ரீதியாக இருப்பது மட்டும் அல்ல. ஒருவன் விருந்தாவனத்தில் உடல் ரீதியாக தங்கியிருந்தாலும், பக்தியில் ஈடுபடாமல், பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவன் உண்மையில் விருந்தாவனத்தில் வசித்து என்ன பயன் ? இப்படிப்பட்ட மனிதர்கள் உண்மையில் விருந்தாவணத்தில் வசிக்கவில்லை. ஆனால் ஒருவன் விருந்தாவனத்திருக்கு வெளியே எப்போதும் கிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்துக்கொண்டும், பல்வேறு கிருஷ்ண உணர்வு செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பானாயின், அவன் உண்மையில் விருந்தாவனத்தில் வசிக்கிறான். ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார், "ஒரு தூய பக்தன் தனது பக்தித் தொண்டினால் , விருந்தாவனத்தின் சூழலை எங்கு வேண்டுமானாலும் உருவாக்க முடியும்." இங்கே பிரபுபாதர் பக்தி தொண்டின் முக்கியத்துவத்தையும், நாம் தொடர்ந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருந்தால்,...