ஒரு கிணற்றில் தவளை ஒன்று நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது . அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது வெளி உலகம் பார்த்ததும் இல்லை . அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழுபூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப்படுத்தி அதைஉண்டு தனது குடும்பத்துடனும் உறவினர்களுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது ஒருநாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது . கினற்று தவளை கடல் தவளையிடம் ' நீ எங்கிருந்து வருகிறாய் ?' என்றது அதற்கு ' கடலிலிருந்து ' என்று அது பதிலுரைத்தது . ' கடலா ? அது எவ்வளவு பெரியது ? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா ?' என்று கூறி , ஒரு பக்கத் திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத்தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை . ' நண்பா , இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும் ?' என்று கேட்டது கடல் தவளை . கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து , ' உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா ?' என...