Skip to main content

Posts

ஹரி நாமாம்ருதம்

 

ஹரிஸநாமாம்ருதம்

பத்மினி ஏகாதசி

தற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் பத்மினி ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம் ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது இந்த வருடம் ''அதிக' மாதம் வந்துள்ளது. யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார், பரம்பொருளே, மதுஸூதனா! அதிக மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஓ யுதிஷ்டிரா, என் மனதிற்கு ப்ரியமான இந்த ஏகாதசி மகிமை பற்றி உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள்" என்று கூறி தொடர்கிறார். விரதம் இருக்கும் நபர், ஏகாதசி முதல் நாளான 'தசமி அன்றே ...

அளவுக்கதிகமான தவத்திலோ அல்லது அளவுக்கதிகமான புலன் நுகர்விலோ ஈடுபடுபவனால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாது

ஒருவன் தன் மனதைக் கிருஷ்ண உணர்வில் உறுதியாக ஈடுபடுத்தினாலும், மிகவும் சஞ்சலமுள்ள மனமானது திடீரென்று அதன் ஆன்மீக நிலையிலிருந்து வழுவிடக்கூடும். அப்பொழுது ஒருவன் தன் மனதைக் கவனமாக தன் வசப்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான தவத்திலோ அல்லது அளவுக்கதிகமான புலன் நுகர்விலோ ஈடுபடுபவனால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாது என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது. சிலசமயம் ஜடப் புலன்களுக்கு ஓரளவு திருப்தியைக் கொடுப்பதால் ஒருவன் தன் மனதைத் தன் வசம் கொண்டுவரக்கூடும். உதாரணமாக, ஒருவர் அதிகமான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளக்கூடும் என்றாலும், அவ்வப்போது போதுமான அளவு மகா-பிரசாதத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளலாம். இதனால் மனம் சஞ்சலப்படாமல் இருக்கும். அதுபோலவே, ஒருவன் பிற பக்தர்களோடு நகைச்சுவை, நீச்சல் போன்றவை மூலம் அவ்வப்போது ஓய்ந்திருக்கலாம். ஆனால் இவை அளவுக்கதிகமாக செய்யப்படுமானால், ஆன்மீக வாழ்வில் பிற்போக்கான நிலை ஏற்படும். தீய உறவு அல்லது மது அருந்துதல் போன்ற பாவச் செயல்களை மனம் விரும்பினால் மனதின் அந்த முட்டாள்தனத்தை ஒருவன் சகித்துக்கொண்டு, பெருமுயற்சியோடு கிருஷ்ண உணர்வைத் தொடரவேண்டும். இதனால் மதிமயக்க அலைகள் விரை...

எல்லா நேரத்திலும் என்னை நிணைத்து வழிபடலாம்

தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர யுத்ய ச மய்-யர்பித- மனோ புத்திர் மாம் ஏவைஷ்யஸ்-யஸம்ஷய: மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 எனவே, அர்ஜுனா,  என்னை இந்த (கிருஷ்ண) உருவில் எப்போதும் எண்ணிக் கொண்டு, அதே சமயம் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் செய்வாயாக. உன்னுடைய செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்துவதன் மூலம், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை. பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 அர்ஜுனனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரை, பௌதிகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் மிக முக்கியமானதாகும். விதிக்கப்பட்ட கடமையையும் தொழிலையும் விட்டுவிடும்படி கடவுள் கூறவில்லை. அவற்றை தொடர்ந்து செய்து கொண்டே, ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் கிருஷ்ணரை நினைக்க முடியும். இஃது ஒருவனை பௌதிகக் களங்கங்களிலிருந்து தூய்மைப்படுத்தி, அவனது மனதையும் புத்தியையும் கிருஷ்ணரில் ஈடுபடுத்தும். கிருஷ்ணரின் திருநாம உச்சாடனத்தின் மூலம், உன்னத லோகமான கிருஷ்ண லோகத்திற்கு ஒருவன் மாற்றப்படு. ஶ்ரீமத் பகவத்கீதை (உண்மையுருவில்) 8.7 ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண...

பாவக்ராஹீ ஜனார்தனர் (தூய பக்தர் ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி)

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்ல உள்ளார் என்பதை ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி கேள்விப்பட்டபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று தமது மனதினால் அந்தப் பாதையினை அலங்கரிக்கத் தொடங்கினார். (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.155 ) முதலில் நரசிம்மானந்த பிரம்மசாரி குலியா நகரத்திலிருந்து தொடங்கும் ஓர் அகலமான சாலையினை தியானித்தார். அவர் அச்சாலையினை இரத்தினங்களால் அலங்கரித்து, அதன்மீது காம்பு இல்லாத மலர்களின் படுக்கையை விரித்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.156) அவர் தமது மனதாலேயே சாலையின் இரு புறங்களையும் மலர்கள் மிகுந்த மகிழ மரங்களினால் அலங்கரித்தார், இடையிடையே இரு புறங்களிலும் தெய்வீகத் தன்மையைக் கொண்ட ஏரிகளை வைத்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.157 ) அந்த ஏரிகளின் படித்துறைகள் இரத்தினங்களால் கட்டப்பட்டிருந்தன, ஏரிகளோ மலர்ந்த தாமரை மலர்களால் நிரம்பியிருந்தன. அங்கே பலவிதமான பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன, அங்கிருந்த நீரானது அமிர்தம் போன்று இருந்தது.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.158 ) சாலை முழுவதும் குளிர்ந்த இளங்காற்று நிறைந்திருந்தது, அத...

பக்தித்தொண்டு மற்றும் தொண்டாற்றுபவர்களின் மனோநிலை

பக்தித்தொண்டு மற்றும் தொண்டாற்றுபவர்களின் மனோநிலை பகவத் சேவையின் பொருட்டு அனைவரும் நட்புறவுடன் வாழவேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் பகவத் சேவையை புகழ வேண்டுமேயன்றி தன்னுடைய சொந்த சேவையில் கர்வம் கொள்ளக்கூடாது. இதுதான் ஒரு வைஷ்ணவர் சிந்திக்கும் முறையாகும். இதுவே வைகுண்ட சிந்தனையுமாகும் தொண்டு செய்வதில் தொண்டர்களுக்கு இடையே போட்டிகள் இருக்கக்கூடும். ஆனால் வைகுண்ட லோகங்களில் மற்றொரு தொண்டனின் சேவை பாராட்டப்படுகிறதே ஒழிய தூஷிக்கப்படுவதில்லை. இது வைகுண்ட போட்டியாகும். தொண்டர்களுக்கிடையில் பகை என்ற கேள்விக்கே இடமில்லை. ஒவ்வொருவனும் அவனது திறமைக்கேற்ப பகவத் தொண்டு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். வைகுண்டத்திலுள்ள செயல்முறைகள் இப்படித்தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு தொண்டனே என்பதால் ஒவ்வொருவரும் ஒரே படித்தரத்தில் தான் இருக்கின்றனர். மேலும் ஒவ்வொருவனும் அவனது திறமைக்கேற்ப பகவானுக்குத் தொண்டு செய்ய அனுமதிக்கப்படுகிறான். பகவத்கீதை (15.15 ) இதை பின்வருமாறு உறுதி செய்கிறது : _ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ மத்த ஸ்ம்ருமிதிர் ஞானம் அபோஹனம் ச :_ பகவான் ஒவ்வொருவருடைய இதயத்திலும் இருந்துகொண்டு தொண்ட...

வஸுதேவ-ஸத்வம்

  மனம் சத்வ குணத்துக்குச் சொந்தமானதாக இருப்பதால் அது தேவமயம், அல்லது தெய்வீகமானது என்றழைக்கப்படுகிறது. தான் பகவானின் நித்தியத் தொண்டன் எனும் திடமான நம்பிக்கையில் ஒருவன் நிலை பெற்றிருக்கும் பொழுது பரிபூரண மனத்தூய்மை சாத்தியமாகிறது. எனவே சாதாரண நற்குணத்தைப் பெற்றிருப்பதும் பௌதிகமானதே ஆகும். பௌதிக நற்குணம் என்ற இந்நிலையைக் கடந்து, தூய நற்குணம் அல்லது வஸுதேக-ஸத்வம் என்ற நிலையை ஒருவன் அடைய வேண்டும். பகவானின் இராஜ்யத்திற்குள் நுழைவதற்கு இந்த வஸுதேவ-ஸத்வம் உதவுகிறது. ஶ்ரீமத் பாகவதம்  2.2.30 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். சுத்த   பக்தி   வாட்ஸப்   க்ரூப்   சுத்த   பக்தி   டெலிகிராம்   க்ரூப்   உத்வேக   கதைகள் டெலிகிராம் க்ரூப்   https://www.suddhabhaktitamil.com