Skip to main content

Posts

எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை

  யத் - கீர்தனம் யத் - ஸ்மரணம் யத் - ஈக்ஷணம் யத் - வந்தனம் யச் - ச்ரவணம் யத் - அர்ஹணம் லோகஸ்ய ஸத்யோ விதுனோதி கல்மஷம் தஸ்மை ஸுபத்ர - ஸ்ரவஸே நமோ நம : மொழிபெயர்ப்பு சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பெருமைகள் , நினைவுகள் , அவரது தரிசனம் , பிரார்த்தனைகள் , அவரைப் பற்றி கேட்ட மற்றும் அவரது வழிபாடு ஆகியவை சாதகனின் பாவ விளைவுகளை எல்லாம் உடனே தூய்மை செய்துவிடக் கூடியவையாகும் . அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன் . பொருளுரை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை மிகப் பெரிய அதிகாரியான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது . நினைவில் கொள்ளுதல் , ஆலயத்திற்குச் சென்று விக்கிரகத்தை தரிசித்தல் , பகவான் முன்னிலையில் பிரார்த்தனைகள் செய்தல் , மற்றும் பகவானின் புகழ் பாடப்படுவதைக் கேட்டல் ஆகியவற்றை ஸ்ரீமத் பாகவதத்திலும் , பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளவாறு , கீர்த்தனமாகவும் வேறு முறைகளிலும் நிறைவேற்ற முடியும் . இன்னிசைகளுடன...

மொட்டைத் தலையும் வெறும் காலும்

 .               ஒரு மாலை வேளையில், இலண்டனில் உள்ள பக்திவேதாந்த பண்ணையில், ஸ்ரீல பிரபுபாதர் சீடர்கள் சிலருடனும் விருந்தினர்களுடனும் தமது அறையில் அமர்ந்திருந்தார், ஸ்ரீல பிரபுபாதரை பேட்டி காண வந்த ஒரு பெண் நிருபரும் அங்கே இருந்தார். மிதமான கோடைகாலமாக இருந்தபோதிலும், அந்த பெண் நிருபர் குட்டைப் பாவாடையே அணிந்திருந்தார். ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பற்றி அவள் எழுப்பிய சில வினாக்களிலிருந்து. அவளுடைய சந்தேகமும் குறை காணும் மனோபாவமும் வெளிப்பட்டன. இருப்பினும், ஸ்ரீல பிரபுபாதர் எப்போதும் போலவே அவளுடைய வினாக்களுக்கு பொறுமையாகவும் அருமையாகவும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அதனால் நம்பிக்கையிழந்த அவள் சவால் விடும் மனோபாவத்தில், "உங்களுடைய ஆட்கள் ஏன் மொட்டையடிக்கின்றனர்?' என வழக்கமான வினாவினை எழுப்பினாள். உடனே, பிரபுபாதர், "நீங்கள் ஏன் கால்களை ஆடையால் மறைத்துக்கொள்ளாமல், கால்கள் வெளியே தெரியும்படி ஆடையணிகிறீர்கள்?" என்று சற்று கோபமாக வினவினார். அவள் வாயே திறக்கவில்லை. அதன் பிறகு. ஸ்ரீல பிரபுபாதர். "கால்கள் வெது வெதுப்பாகவும், தலை குளுர்ச்சியுடனும் இருப்பதே சி...

மரணத்தை வெல்லும் அறிவு

மரணத்தறுவாயில் ஒவ்வொரு உயிரும் தன் மனைவி , மக்களுக்கு என்ன நேருமோ என்று கவலைப்படுகிறான் . அதுபோல் ஓர் அரசியல்வாதி நாட்டுக்கும் , தன் கட்சிக்கும் என்ன நேருமோ என்று கவலைப்படுகிறான் . ஒருவன் முழுதும் கிருஷ்ண உணர்வு பெறவில்லையென்றால் , அவன் எந்த உணர்வு நிலையில் இறக்கிறானோ அதற்கேற்ப மறுபிறவியில் உடலைப் பெறுகிறான் . மன்னர் புரஞ்ஜனன் முற்றிலும் தம் மனைவி மக்களின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார் . எனவே அவர் ஒரு பெண்ணின் உடலை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது . அதுபோல் தான் பிறந்த நாட்டின் மீது அதிகப் பற்றுடைய அரசியல்வாதி தன் வாழ்வு முடிந்தபிறகு மீண்டும் அநித நாட்டிலேயே பிறக்கிறான் . இம்மையில் ஒருவன் செய்யும் செயல்களின் விளைவு மறுமையிலும் அவனைப் பாதிக்கிறது . சிலநேரங்களில் அரசியல்வாதிகள் தங்கள் புலனுகர்ச்சிக்காக கொடிய பாவங்களைச் செய்கின்றனர் . எதிர்க்கட்டிசியை அழிப்பது ஒரு அரசியல்வாதிக்கு அசாதாரணமன்று . ஒரு அரசியல்வாதி அவனது தாய் நாட்டிலேயே மீண்டும் பிறந்தால் கூட அவன்தன் முந்தைய வாழ்வில் செய்த பாவங்களின் பலன்களை அனுப...