நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன ஆக்ஞா டஹல் மஹா பிரபுவின் கட்டளைப்படி நகர் சங்கீர்த்தனம் செய்தல் கீதாவளியில் பக்திவினோத டாக்குரர் 1 நதியா கோத்ருமே நித்யானந்த மஹாஜன் பதியாச்சே நாம் ஹட்டா ஜீவேர் காரண் 2. (ஸ்ர்த்தாவான் ஜன் ஹே, ஸ்ர்த்தாவான் ஜன் ஹே) பிரபுர் ஆஞ்ஞை பாய் மாகி பேய் பிக்ஷா போலோ க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண கோரோ க்ருஷ்ண சிக்ஷா 3. அபராத ஸுன்ய ஹோய்யே லோஹோ க்ருஷ்ண நாம் க்ருஷ்ண மாதா, க்ருஷ்ண பிதா . க்ருஷ்ண தன - ப்ராண் 4. கிருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாச்சார் ஜீவே தோயா, க்ருஷ்ண நாம் ஸர்வ தர்ம ஸார் 1.நதீயா நகரத்தின் கோத்ரும த்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக புனித நாமச் சந்தையை திறந்து வைத்துள்ளார். 2. ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கௌரங்கரின் கட்டளைப்படி ஓ சகோதர்களே நான் இந்த மூன்று விண்ணப்பங்களை வேண்டி யாசிக்கின்றேன். கிருஷ்ணா என்று ஜபியுங்கள்! க்ருஷ்ணரையே வழிபடுங்கள்! க்ருஷ்ணரைப் பற்றியே அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள்!!!! 3.வைஷ்ணவ அபராத்த்திலிருந்து எப்போதும் கவனமாக விலகியிரு...