Skip to main content

Posts

பூனையும், எலியும் – நட்பும், பகையும்!

தருமர் பீஷ்மரை நோக்கி..'நண்பர், பகைவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?' எனக் கேட்க பீஷ்மர் உரைக்கிறார் தருமா..ஆபத்துக் காலத்தில் எப்படி தப்பிப்பது என சொல்கிறேன் கேள். பகைவனாய் இருப்பவன் சில சமயம் நண்பன் ஆவான்.அதுபோல நண்பனும் சில சமயங்களில் பகைவன் ஆகலாம்.மக்களிடம் பகை,நட்பு ஆகியவை ஒரே மாதிரி இருப்பதில்லை.இடத்திற்கேற்ப, காலத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை ஆகியவற்றைப் புரிந்துக் கொண்டு நம்பவும் வேண்டும்..நம்பாது இருக்கவும் வேண்டும்.நம் நலனில் அக்கறை கொண்டவரிடம் எப்போதும் நட்புடன் மனம் மாறாமல் இருக்க வேண்டும்.உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பகைவரிடம் சமாதானம் செய்துக் கொள்ளவும் வேண்டும்.எந்தச் சமயத்திலும் சமாதானத்தை விரும்பாதவன் அறிவாளி அல்லன்.மேலும் அவன் எந்த நன்மையும் பெற மாட்டான்.காரியத்தின் பயனைப் புரிந்துக் கொண்டு பகைவனிடம் நட்பாகலாம்.நண்பனிடம் பகை கொள்ளலாம்.இது தொடர்பாக ஒரு ஆலமரத்தில் பூனைக்கும், எலிக்கும் நடந்த உரையாடலைக் காண்போம்.. ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது.அதில் பலவிதமான பறவைகள் வசித்து வந்தன.அந்த மரத்தடியில் நூறு துவாரங்கள் உள்ள வலையில் ...

கீதாசாரம்

மத்–கர்ம–க்ரூன் மத்–பரமோ மத் 3 –ப 4 க்த: ஸங்க 3 –வர்ஜித: நிர்வைர: ஸர்வ–பூ 4 தேஷு ய: ஸ மாம் ஏதி பாண்ட 3 வ மொழிபெயர்ப்பு எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக் கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துள்ளானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான். பொருளுரை:  பகவானின் எல்லா ரூபங்களிலும் உயர்ந்தவராக விளங்கும் கிருஷ்ணரை ஆன்மீக வானிலுள்ள கிருஷ்ண லோகத்தில் அணுகுவதற்கும், அந்த உத்தம புருஷருடன் நெருக்கமான உறவு கொள்வதற்கும் எவரேனும் விரும்பினால், அந்த பரமனாலேயே இங்கே கூறப்பட்டுள்ள வழிமுறையை ஏற்றுக்கொள்வது அவசியம். எனவே, இப்பதம் பகவத் கீதையின் ஸாரமாகக் கருதப்படுகின்றது. உண்மையான வாழ்க்கையான ஆன்மீக வாழ்வைப் பற்றி அறியாமல், இயற்கையை ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு ஜடவுலகில் ஈடுபட்டுள்ள கட்டுண்ட ஆத்மாக்களுக்கான நூல் பகவத் கீதை. ஆன்மீக மான பரம புருஷருடனான நித்திய உறவைப் பற்றியும், ஆன்மீக இருப்பைப் பற்...

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின்  வாழ்க்கையும் கொள்கைகளும் அருளியவர்: ஸ்ரீல பக்திவினோத தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கலி யுக தர்மத்தைப் பரப்ப “ஸ்ரீ சைதன்யராக அவதரித்தார். அவரது சரிதத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்” (Sri Caitanya Mahaprabhu: His Life and Precepts) என்ற தலைப்பில் ஸ்ரீல பக்திவினோத தாகூர், ஆங்கிலத்தில், ஆகஸ்ட் 20, 1896ல் சிறிய கட்டுரையாக வெளியிட்டார். அக்கட்டுரை ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட Teachings of Lord Caitanya (விரைவில் தமிழில் வெளிவரவிருக்கும் “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள்”) என்னும் புத்தகத்தில் அறிமுகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள்… சைதன்யரின் தோற்றம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸகாப்த வருடம் 1407, பல்குன மாதத்தின் 23ம் நாளின் (கி.பி. 1486, பிப்ரவரி 18) மாலை வேளையில் சூரியன் மறைந்த சற்று நேரத்தில், சைதன்ய மஹாபிரபு நாதியா மாவட்டத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். சந்திர கிரஹணத்தின் போது அவர் பிறந்தார், இதுபோன்ற சூழ்நிலைகளில் வழக்கமாக நடைபெறுவதுபோல, அவர் பிறந்தபோதும் நாதியாவின் மக்கள் பாகீரதியில் நீர...

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி

  ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார் , அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது “வைஷ்ணவர்களில் முதன்மையானவர்” என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில் கண்டுபிடித்ததில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஸ்ரீல ஜகந்நாத பாபாஜி மஹாராஜர் 1800 வருடவாக்கில் பிறந்தார். அவர் பல்வேறு வருடங்களை விருந்தாவனத்தில் கழித்து ஒரு பக்குவமான பக்தராக பிரபலமடைந்தார். அதன் பின்னர் நவத்வீப தாமத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார். அவர் சுமார் 120 வயதை அடைந்த காலக் கட்டத்தில் ஸ்ரீ நவத்வீபத்தில் ஒரு குடிசையில் வசித்து வந்தார் , அவருடைய சேவகரான பிஹாரி லால் அவருடைய தேவைகளைப் பார்த்துக் கொண்டார். பாபாஜி மஹாராஜர் எங்கேனும் செல்ல வேண்டுமெனில் அவருடைய சேவகர் அவரை ஒரு கூடையில் தூக்கிச் செல்வது வழக்கம். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடத்தினை ஸ்ரீல பக்திவினோத் தாகூர் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் ஜகந்நாத தாஸ பாபாஜியையும் தன்னுடன் வருமாறு அவர் வேண்டிக் கொண்டார். சைதன்ய மஹாபிரபு அவதரித்து பல்வேறு வருடங்களுக்குப் பின்னர்...