ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா லீலை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாபெரும் பக்தரான ஶ்ரீ நாரத முனிவர், விரஜ லீலைகளை தரிசிக்கவும் , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளை கண்டு ஆனந்தமடையவும் விருந்தாவனம் செல்வார் . அப்படி செல்லும் போது ஸ்ரீமதி ராதாராணியை தொடர்ந்து தரிசிப்பது வழக்கம் .இதை கவனித்து வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாரணியிடம், நாரதர் கலகம் செய்வதில் கைதேர்ந்தவர் ஆகையால், அவரிடம் கவனமாக பழக வேண்டும் என்று எச்சரித்தார். ஏனெனில், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நாரதர் முனிவர் தனக்கும் ராதாரணிக்கும் இடையே ஏதேனும் கலகம் செய்துவிடுவார் என்று நினைத்தார். ஶ்ரீமதி ராதாராணி, தன்னக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள அன்பு பிணைப்பில் யாரும் கலகம் ஏற்படுத்த முடியாது என்று ஆணித்தனமாக நினைத்தார். அவரது ஆழ்ந்த பிரேமபக்தியினால் கிருஷ்ணரின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், "நான் கூறும் வார்த்தையின் தீவிரத்தை உணராமல் இருக்கிறாய்; நாரத முனிவரால் பிரச்சினை அனுபவிக்கும்போதுதான் உனக்கு நான் சொல்வது விளங்கும் ", என்று மீண...