கடவுள் இல்லாத மதமா ? பொதுவாகவே தற்காலத்தில் மதத் தலைவர்களாக காட்டிக் கொள்பவர்கள் கடவுளைப் பற்றிய கருத்தற்றவர்களே. இருந்தும் அவர்கள் மதத்தைப் பற்றி உபதேசிக்கிறார்கள். அத்தகைய மதத்தினால் பயன்தான் என்ன ? மக்கள் தவறாகவே வழிகாட்டப்படுகிறார்கள். கடவுளின் கட்டளையே உண்மையான மதமாகும்; தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-பரணீதம். கடவுளைப் பற்றிய எண்ணமேயில்லாதபோது மதமென்ற கேள்விக்கிடமேது ? இப்பாசாங்கு எவ்வளவு நாள் நீடிக்கும்? நிச்சயமாக அழிந்தே தீரும். கடவுளைப் பற்றிய அறியாமையே தற்போதைய சீரழிவுக்கு காரணம் சட்டமென்பது அரங்கத்தின் கட்டளையென்பது போல, மதம் கடவுளின் கட்டளையாகும். ஆனால் சமுதாயத்தில் அரசாங்கமே இல்லாதபொழுது அரசாங்கத்தின் சட்டத்திற்கு இடமேது ? ஒவ்வொருவரும் சொந்த சட்டங்களையே உற்பத்தி செய்வார்கள். அதுவே இன்றைய மதங்களின் நிலையாகும். கடவுளே இல்லை என்பதால், கடவுளின் கட்டளைகளை பின்பற்றுபவர்களுமில்லை.. ஆனால், கிருஷ்ண பக்தர்களாகிய நாங்கள் கடவுள் பற்றிய தெளிவான சிந்தனையுடையவர்கள். இதோ பரமபுருஷரான கடவுள் கிருஷ்ணர். அவர் கட்டளையிடுகிறார். அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆகையால் இது தெளிவான மாதமாகிறது...