Skip to main content

Posts

நினைவில் கொள்ளுதல் என்றால் கேட்பதும் உச்சரிப்பதுமாகும்

  நினைவில் கொள்ளுதல் என்றால் கேட்பதும் உச்சரிப்பதுமாகும் அப்யாஸ-யோக-யுக்தேன சேதஸா நான்ய-காமினா பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தானுசிந்தயன் மொழிபெயர்ப்பு பரம புருஷ பகவானாக என்னை தியானித்து, எப்போதும் தனது மனதை நினைப்பதில் ஈடுபடுத்தி, இவ்வழியிலிருந்து சற்றும் பிறழாது பயிற்சி செய்பவன், பார்த்தனே, நிச்சயமாக என்னை அடைகிறான். பொருளுரை இப்பதத்தில் தன்னை நினைப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணர். ஹரே கிருஷ்ண மஹாமந்திர உச்சாடனத்தின் மூலம் கிருஷ்ணரைப் பற்றிய நினைவு மீண்டும் எழுப்பப்படுகிறது. பரம புருஷரின் ஒலி அதிர்வினை கேட்பதும் உச்சரிப்பதுவுமான இந்த வழிமுறையில், காது, நாக்கு மற்றும் மனமும் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த உன்னதமான தியான முறையினை பயிற்சி செய்து மிகவும் எளிதானதாகும். மேலும், இவ்வழிமுறை பரம புருஷரை அடைய உதவுகின்றது. புருஷம் என்றால் அனுபவிப்பாளர். உயிர்வாழிகள், இறைவனின் நடுநிலை சக்தியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், பௌதிகத்தின் களங்களத்தில் உள்ளனர். தங்களை அனுபவிப்பாளராக எண்ணிக் கொண்டுள்ள போதிலும், அவர்கள் பரம அனுபவிப்பாளர் அல்ல. நாராயணர், வாஸுதேவர் போன்...

கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருப்பவன், நிச்சியமாக ஆன்மீக உலகை அடைவான்.

  கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருப்பவன், நிச்சியமாக ஆன்மீக உலகை அடைவான். ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரஹ்மாக் னெள ப்ரஹ்மணா ஹுதம் ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்ம-கர்ம-ஸமாதினா மொழிபெயர்ப்பு ******************** கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருப்பவன், நிச்சியமாக ஆன்மீக உலகை அடைவான்; ஏனெனில், அவன் ஆன்மீக செயல்களுக்காகத் தன்னை முழுமையாக சமர்ப்பித்துள்ளான். பிரம்மனை இலக்காகக் கொண்ட இச்செயல்கள் அதே ஆன்மீக இயற்கையின் மூலம் அர்ப்பணிக்கப்படுவதாகும். பொருளுரை ****************** கிருஷ்ண பக்தியின் செயல்கள் எவ்வாறு இறுதியில் ஆன்மீக இலக்கை நோக்கிக் கொண்டுச் செல்கின்றன என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பக்தியில் பல்வேறு செயல்கள் உள்ளன. அவை பின்வரும் பதங்களில் விளக்கப்படும். ஆனால் தற்போது கிருஷ்ண உணர்வின் அடிப்படைக் கொள்கை மட்டும் விளக்கப்பட்டுள்ளது. பௌதிகக் களங்கத்தினால் பந்தப்பட்டுள்ள கட்டுண்ட ஆத்மா, ஜடச் சூழ்நிலையில் செயலாற்றுவது நிச்சியம். இருப்பினும், அத்தகு சூழ்நிலையிலிருந்து அவன் வெளியேற வேண்டும். கட்டுண்ட ஆத்மா பௌதிகச் சூழ்நிலையிலிருந்து வெளியேறும் முறையே கிருஷ்ண உணர்வாகும். உ...

நம்முடைய அற்பமான புத்தி கூர்மையைக் கொண்டு “கிருஷ்ணருடைய கனபரிமாணங்களை அளவிட முடியாது”

  நம்முடைய அற்பமான புத்தி கூர்மையைக் கொண்டு “கிருஷ்ணருடைய கனபரிமாணங்களை அளவிட முடியாது” பெரும்பாலான ஞானிகளும், யோகிகளும், பொது வாழ்வில் அருவவாதிகளாகவே விளங்குகின்றனர். ஆன்மீக விண்வெளியில், பிரகாசமான பிரம்ம ஜோதியில் கலப்பதின் மூலம் அவர்கள் தற்காலிக மோட்சத்தைப் பெறுகின்றனர். இருந்த போதிலும், ஸ்ரீமத் பாகவதத்தின் கண்ணோட்டத்தின்படி, அவர்களுடைய அறிவு தூய்மையானதாகக் கருதப்படுவதில்லை. கடும் தவம், தியானம், வேள்விகள் ஆகியவற்றினை புரிவதன் மூலம் அவர்கள் பிரம்ம ஜோதி நிலைக்கு தம்மை உயர்த்திக் கொள்கின்றனர். ஆயினும் ஏற்கனவே குறிப்பிட்டப்படி இறைவனான கிருஷ்ணருடைய திரு உருவ நிலையை அவர்கள் பொருட்படுத்தாததால் மீண்டும் ஜட உலகில் விழுகின்றனர். கிருஷ்ணருடைய தாமரைப் பாதங்களைச் சேவிக்காவிடின் சந்தேகமின்றி எவரும் மீண்டும் ஜட உலக வாழ்க்கைக்குத் திரும்பியே ஆக வேண்டும். “நான் என்றும் உம்முடைய சேவகன். எவ்வாறாயினும் உம்முடைய சேவையில் ஈடுபட எனக்கு அருள் புரிவீராக” என்று நினைப்பதே மிகச் சிறந்த மனப்பாங்காகும். ‘வெற்றி காண முடியாதவர்’ என்று பொருள் பட ‘அஜித’ என அழைக்கப்படுகிறார். ஆகையினால், இறைவனை ஒருவராலும் வெற்றி கா...

கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.

  கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும். யோ மாம் அஜம் அனாதிம் ச வேத்தி லோக-மஹேஷ்வரம் அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வ–பாபை: ப்ரமுச்யதே மொழிபெயர்ப்பு ************************ எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான். பொருளுரை *************** ஏழாம் அத்தியாயத்தில்(7.3) கூறப்பட்டுள்ளபடி, மனுஷ்யாணாம் ஸஹஸரேஷூ கஷ்சித் யததி ஸித்தயே-ஆன்மீக உணர்வின் தளத்திற்குத் தம்மை உயர்த்திக் கொள்ள முயல்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஆன்ம உணர்வினைப் பற்றிய சற்றும் அறிவற்ற கோடிக்கணக்கான சாதாரண மனிதர்களைவிட அவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். ஆனால் தமது ஆன்மீக நிலையைப் புரிந்து கொள்ள உண்மையிலேயே முயற்சி செய்யும் அத்தகு சிறந்த மனிதர்களில், கிருஷ்ணரே பரம புருஷ பகவான், அவரே எல்லாவற்றின் உரிமையாளர், அவர் பிறப்பற்றவர் என்னும்அறிவு நிலையை வந்தடைபவனே ஆன்மீக உணர்வை அடைந்தவர்களில் மிகவும் வெற்றி பெற்றவனாவான். க...