Skip to main content

Posts

ஸ்ரீபாத மத்வாசாரியர்

  ஸ்ரீபாத மத்வாசாரியர் வழங்கியவர்: விக்ரம கோவிந்த தாஸ் 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 இன்று 26-10-2020 திங்கட்கிழமை ஶ்ரீபாத மத்வாசாரியர் அவதரித்த தினம் 🌼🌼🌼🌼🌼🌼🌼 வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார். குழந்தைப் பருவம் 🌼🌼🌼🌼🌼🌼🌼 நாராயணபட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக, ஸ்ரீ பாத மத்வாசாரியர் கி.பி. 1238ஆம் ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள பாஜக என்னும் கிராமத்தில் அத்தம்பதியினரின் மகனாக அவதரித்தார். தனது சிறு வயதில் தனது தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்களாக்கினார். தனது ஐந்தாம் வயதில் தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார். அதே வயதில் பூணூல் தரித்த அவர் சிறுவயதிலேயே சாஸ்திர அறிவில் ஒப்பில்லாதவராகத் தி...
 
 
 
 

Pasankusa Ekadasi / பாஸங்குசா ஏகாதசி

 பாஸங்குசா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஐப்பசி மாத வளர்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக் கூடிய பாஸங்குசா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! மதுசூதனா, ஐப்பசி மாத வளர்ப்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் தயவு செய்து எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த ஏகாதசியின் பெயர் பாஸங்குசா ஏகாதசி. ஒருவரின் பாவங்களை அழிக்கக் கூடிய இந்த ஏகாதசியின் பெருமைகளைக் கேள். சிலர் இந்த ஏகாதசியை பாயபங்குஸா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியன்று ஒருவர் விசேஷமாக பத்மநாபரை வணங்க வேண்டும். இந்த ஏகாதசி மேலுலக சுகங்களையும் முக்தியையும் மற்றும் ஒருவர் வேண்டிய பலன்களையும் கொடுக்கிறது. பகவான் விஷ்ணுவின் புனித நாமங்களை ஜெபித்தாலேயே ஒருவர் இந்த மண்ணுலகில் எல்லா புனித தலங்களுக்கும் செல்வதால் அடையும் புண்ணிய பலனை அடைவார். ஒரு கட்டுண்ட ஆத்மா, அறியாமையால் பல்வேறு பாவச் செயல்களில் ஈ...