Skip to main content

Posts

 

தாமோதர மாதம் / பக்தர்கள் கையேடு

ஹரே கிருஷ்ண தாமோதர மாதம் / பக்தர்கள் கையேடு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் https://www.scribd.com/.../%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0

ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைக்கும் புகழ்பெற்ற நூலான ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றைக் காண்போம்.  வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்  🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி மேற்கு வங்க மாநிலத்தின் பர்தமான் மாவட்டத்தில் ஜமத்புர் என்னும் ஊரில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இவ்வூர் சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற கட்வா என்னும் திருத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இவரது தாய்தந்தையரைப் பற்றிய தெளிவான தகவல் இல்லை. சிலரது அபிப்பிராயத்தின்படி, இவரது தந்தையின் பெயர் ஸ்ரீ பகீரதர் என்றும், தாயின் பெயர் ஸ்ரீ சுனந்தா என்றும் அறியப்படுகிறது. கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமிக்கு ஓர் இளைய சகோதரரும் இருந்தார். கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி, அறுபதிற்கும் மேற்பட்ட சாஸ்திரங்களின் மேற்கோளுடன், சுமார் 11,555 ஸ்லோகங்களுடன் சைதன்ய சரிதாம்ருதம் என்னும் புகழ்பெற்ற நூலை இயற்றியுள்ளார்.  இல்லத்தில் நிகழ்ந்த வாக்குவாதம்  🍁🍁🍁🍁🍁🍁🍁 ஆச்சாரியர்கள் இவ்வுலகில் சாதாரண மக்களைப் போன்று தோன்றினாலும், அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னரே அவர்களின் அற்புத செயல்கள் பெ...

ஸ்ரீபாத மத்வாசாரியர்

  ஸ்ரீபாத மத்வாசாரியர் வழங்கியவர்: விக்ரம கோவிந்த தாஸ் 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 இன்று 26-10-2020 திங்கட்கிழமை ஶ்ரீபாத மத்வாசாரியர் அவதரித்த தினம் 🌼🌼🌼🌼🌼🌼🌼 வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார். குழந்தைப் பருவம் 🌼🌼🌼🌼🌼🌼🌼 நாராயணபட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக, ஸ்ரீ பாத மத்வாசாரியர் கி.பி. 1238ஆம் ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள பாஜக என்னும் கிராமத்தில் அத்தம்பதியினரின் மகனாக அவதரித்தார். தனது சிறு வயதில் தனது தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்களாக்கினார். தனது ஐந்தாம் வயதில் தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார். அதே வயதில் பூணூல் தரித்த அவர் சிறுவயதிலேயே சாஸ்திர அறிவில் ஒப்பில்லாதவராகத் தி...