Skip to main content

Posts

ரமா ஏகாதசி

  ரமா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 ரமா ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிங்கம் போன்றவனே! இந்த ஏகாதசியின் பெயர் ரமா ஏகாதசி. இது ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும். இந்த புனிதமான ஏகாதசியின் பெருமைகளைக் கேள். பழங்காலத்தில் முசுகுந்தா என்று ஒரு புகழ்பெற்ற மன்னர் இருந்தார். அவர் சுவர்கலோக மன்னனான இந்திரனின் நண்பன். அவர் யமராஜா. வருணன், குபேரன் மற்றும் விபிஷணர் போன்ற மகான்களிடத்தில் நட்பு வைத்திருந்தார். இந்த மன்னர் மிகவும் வாய்மையுள்ளவர் மற்றும் அவர் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் இணைந்திருந்தார். அவர் தன் இராஜ்ஜியத்தை சரியான விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆண்டு வந்தார். நாளடைவில் முசுகுந்தர் ஒரு மகளைப் பெற்றார். அவர் சந்திரபாகா என்ற ஒரு நதியின் பெயரை ...

கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்

  கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்  🍁🍁🍁🍁🍁🍁🍁 காளிங்கனின் கொடிய விஷத்தினால் கெட்டுப் போயிருந்த யமுனை நதியினை மீண்டும் தூய்மை பெறச் செய்வதற்காக பகவான் கிருஷ்ணர் கரையருகே நின்றிருந்த “கதம்ப” மரத்தின் மீது ஏறி யமுனை நதியினுள் குதித்தார். பிறகு அவர் ஒரு மதங் கொண்ட யானையைப் போல் யமுனை நதியில் விளையாடி மகிழ்ந்தார். கிருஷ்ணர் அத்துமீறி தனது எல்லைக்குள் நுழைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத காளிங்கன் மிகுந்த சீற்றத்துடன் பகவானிடம் வந்து அவரது மார்பில் கொத்தினான். இதனைக் கண்ட கிருஷ்ணரின் நண்பர்கள் அதிர்ச்சியினால் மூர்ச்சையடைந்து நிலத்தில் வீழ்ந்தனர். அச்சமயம் விரஜத்தில், நிலநடுக்கம், விண்மீன்கள் உதிர்தல், பல்வேறு உயிர்களின் இடதுபுறம் துடித்தல் போன்ற தீக்குறிகள் தோன்றின. விரஜத்திலிருந்தோர் “பலராமரின் துணையின்றி கிருஷ்ணன் இன்று காட்டிற்குச் சென்றிருக்கிறான், அதனால் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லையே” என்று மனம் வருந்தினர். இவ்வாறு வருந்திய அவர்கள் கிருஷ்ணரின் காலடித் தடத்தினைப் பின்பற்றி யமுனை நதிக்கரைக்கு வந்தனர். நதியினை ஒட்டியிருந்த குளத்தில் அவர்களது உயிருக்கு உயிரான பகவான...

தேனுகாசுரன்

  தேனுகாசுரன் 🌼🌼🌼🌼🌼🌼🌼 கிருஷ்ணருக்கு ஆறு வயதானபோது, அவரிடம் மாடு மேய்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது, அதுவரை அவர் கன்றுக் குட்டிகளை மட்டுமே மேய்த்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணரும் பலராமரும் மாடு மேய்ப்பதற்காக வனத்திற்குச் சென்ற போது, அவர்களின் நண்பர்களான ஸ்ரீதாமர், ஸுபலர், ஸ்தோக கிருஷ்ணர் ஆகியோர் தால வனத்தில் இருக்கும் பழங்களை உண்ண விரும்பினர். தால வனத்தை அவர்கள் அடைந்தபோது, பலராமர் அங்கிருக்கும் மரங்களை உலுக்கினார். பழங்கள் கீழே விழுந்த சத்தத்தைக் கேட்ட கழுதை வடிவிலிருந்த தேனுகாசுரன் என்ற அசுரன் பூகம்பம் போன்ற ஒலியை எழுப்பி, கிருஷ்ண பலராமரை தாக்க முன்னோக்கி ஓடி வந்தான். பலராமர் தேனுகாசுரனின் கால்களை ஒரு கையால் பிடித்து சுழற்றி பனை மரத்தின் உச்சியில் வீசி எறிந்து வதம் செய்தார். இதைப் பார்த்த தேனுகாசுரனின் மற்ற கழுதை நண்பர்களும் கிருஷ்ண பலராமரை தாக்க முன் வந்தனர். அந்த கழுதைகளின் கால்களை பிடித்து கிருஷ்ணரும் பலராமரும் சுழற்றி சுழற்றி மரத்தின் உச்சியில் வீசி எறிந்து வதம் செய்தனர். தேனுகாசுரன் நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் ஆன்மீக அறியாமை மற்றும் பௌதிக புத்தி கூர்மையை குறிப்...

அகாசுரன்

  அகாசுரன் 🌼🌼🌼🌼🌼🌼🌼 ஒருநாள் கிருஷ்ணர் காட்டில் வனபோஜனம் செய்ய விரும்பினார். எனவே மற்ற இடைச் சிறுவர்களுடனும், அவர்களது கன்றுகளுடனும் சுக்கிரமாக அவர் காட்டிற்குச் சென்றார். அவர்கள் வனபோஜனத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தபொழுது பூதனைக்கும். பகாசுரனுக்கும் தம்பியான அகாசுரன், கிருஷ்ணரையும், அவரது சகாக்களையும் கொல்லும் எண்ணத்துடன் அங்கு தோன்றினான். கம்சனால் அனுப்பப்பட்ட அந்த அசுரன், எட்டு மைல்கள் நீளத்திற்கும், ஒரு மலையின் உயர்த்திற்கும் தன்னை விரிவடையச் செய்து கொண்டான். அவனது வாய் பூமியிலிருந்து சுவர்க்க லோகங்கள் வரை விரிந்திருப்பதபோல் காணப்பட்டது. அகாசுரன் இந்த ரூபத்தை ஏற்று சாலையில் படுத்திருந்தான். அசுரனின் இந்த ரூபத்தை, பிருந்தாவனத்தின் அழகிய இடங்களுள் ஒன்றாக எண்ணிய கிருஷ்ணரின் நண்பர்களான இடைச்சிறுவர்கள், அப்பெரிய மலைப் பாம்பின் வாய்க்குள் புக விரும்பினர். அந்த மலைப்பாம்பின் பிரம்மாண்டமான ரூபம் அவர்களுக்கு விளையாடி மகிழும் இடமாயிற்று. ஒருவேளை அந்த ரூபம் ஆபத்தானது என்றாலும், தங்களைக் காப்பாற்ற கிருஷ்ணர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் சிரித்துக் கொண்டே அந்த அசுரனின் வாய்க்குள் அவ...

பகாசுரன்

  பகாசுரன் 🌼🌼🌼🌼🌼🌼🌼      ஆயர்குலச் சிறுவர்களெல்லாம் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம் . கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடித்தபோது சிறுவர்களும் நீர் அருந்தினார்கள் . அவ்வாறு ஒருநாள் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது , உருவத்தில் வாத்தைப் போலவும் ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு மிருகத்தைக் கண்டார்கள் . அதன் அசாதாரண வடிவத்தைக் கண்டு அவர்கள் இருவரும் பயந்து போனார்கள் . கம்சனின் நண்பனான அம்மிருகத்தின் பெயர் பகாசுரன் , அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி வேகமாக விழுங்கினான் . கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட பலராமரும் அவரின் தோழர்களும் மூச்சற்றுப் போனார்கள் . ஆனால் பகாசுர அரக்கன் கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவதுபோல் உணர்ந்தான் . கிருஷ்ணரின் ஒளிமிகு சக்தியின் காரணமாக உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் எறிந்துவிட்டுத் தன் கூரிய அலகுகளால் குத்திக் கொல்ல முயன்றான் .  ...