Skip to main content

அகாசுரன்


 அகாசுரன்

🌼🌼🌼🌼🌼🌼🌼


ஒருநாள் கிருஷ்ணர் காட்டில் வனபோஜனம் செய்ய விரும்பினார். எனவே மற்ற இடைச் சிறுவர்களுடனும், அவர்களது கன்றுகளுடனும் சுக்கிரமாக அவர் காட்டிற்குச் சென்றார். அவர்கள் வனபோஜனத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தபொழுது பூதனைக்கும். பகாசுரனுக்கும் தம்பியான அகாசுரன், கிருஷ்ணரையும், அவரது சகாக்களையும் கொல்லும் எண்ணத்துடன் அங்கு தோன்றினான். கம்சனால் அனுப்பப்பட்ட அந்த அசுரன், எட்டு மைல்கள் நீளத்திற்கும், ஒரு மலையின் உயர்த்திற்கும் தன்னை விரிவடையச் செய்து கொண்டான். அவனது வாய் பூமியிலிருந்து சுவர்க்க லோகங்கள் வரை விரிந்திருப்பதபோல் காணப்பட்டது. அகாசுரன் இந்த ரூபத்தை ஏற்று சாலையில் படுத்திருந்தான். அசுரனின் இந்த ரூபத்தை, பிருந்தாவனத்தின் அழகிய இடங்களுள் ஒன்றாக எண்ணிய கிருஷ்ணரின் நண்பர்களான இடைச்சிறுவர்கள், அப்பெரிய மலைப் பாம்பின் வாய்க்குள் புக விரும்பினர். அந்த மலைப்பாம்பின் பிரம்மாண்டமான ரூபம் அவர்களுக்கு விளையாடி மகிழும் இடமாயிற்று. ஒருவேளை அந்த ரூபம் ஆபத்தானது என்றாலும், தங்களைக் காப்பாற்ற கிருஷ்ணர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் சிரித்துக் கொண்டே அந்த அசுரனின் வாய்க்குள் அவர்கள் புகுந்தனர்.




அகாசுரனைப் பற்றிய எல்லா விவரங்களையும் கிருஷ்ணர் அறிந்திருந்ததால், அவனது வாய்க்குள் தம் நண்பர்கள் பிரவேசிப்பதைக் கிருஷ்ணர் தடுக்க விரும்பினார். ஆனால் அதற்குள் எல்லா இடைச்சிறுவர்களும் தங்கள் கன்றுகளுடன் அந்த அசுரனின் வாய்க்குள் புகுந்து விட்டனர். கிருஷ்ணர் வெளியில் காத்திருந்தார். அவர் வாய்க்குள் நுழைந்ததும், வாயை மூடி எல்லோரையும் கொன்று விடாலம் என்றெண்ணிய அகாசுரன் கிருஷ்ணருக்காகப் பொறுமையோடு காத்திருந்தான். இதற்கிடையில் சிறுவர்களைக் காப்பாற்றி, அகாசுரனைக் கொல்லம் உபாயத்தைப்பற்றி கிருஷ்ணர் யோசித்தார். பிறகு அசுரனின் பிரம்மாண்டமான வாய்க்குள் புகுந்து தம் நண்பர்கள் இருக்கும் இடத்தை அடைந்த அவர், தம் உடலை மிகவும் பெரிதாக விரிவடையச் செய்தார். இதனல் அந்த அசுரன் மூச்சுத் திணறி இறந்தான். அதன் பிறகு, கிருஷ்ணர் தமது அமுதான பார்வையைத் தம் நண்பர்கள் மீது செலுத்தி அவர்களைப் பிழைக்கச் செய்தார். பிறகு அவர்களனைவரும் பாதிக்கப்படாமல் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர், இவ்விதமாக கிருஷ்ணர் எல்லாத் தேவர்களையும் உற்சாகப்படுத்தினார். அவர்களும் தங்கள் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். துர் புத்தியுள்ள ஒரு பாவிக்கு, கிருஷ்ணரின் பிரகாசத்துடன் ஜக்கியமாகும் (ஸாயுஜ்ய-முக்தியடையும்) வாய்ப்பில்லை. ஆனால் பரமபுருஷர் அகாசுரனின் உடலுக்குள் புகுந்ததால், அவரால் தொடப்பட்ட அந்த அசுரன், பிரம்மஜோதியில் இரண்டறக் கலந்து, ஸாயுஜ்ய-முக்தியைப் பெறும் வாய்ப்பைப் பெற்றான்.

இந்த லீலையை கிருஷ்ணர் நிகழ்த்தியபொழுது, கிருஷ்ணருக்கு ஜந்து வயது மட்டுமே பூர்த்தியாகி இருந்தது.

 

🌼🌼🌼🌼🌼🌼🌼


அகாசுரனை நம் இதயத்தில் இருக்கும் கொடூரமான வன்முறை செயல்களுக்கு பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார். கிருஷ்ணர் அகாசுரனை தன் ஐந்து வயதில் வதம் செய்தார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...