Skip to main content

Posts

உண்மையான அறிவு

 
 
 

ஓடன சஷ்டி

(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்யலீலை 16.78 முதல் 16.81 ) 💐💐💐💐💐💐💐 குளிர் காலத்தின் தொடக்கத்தில் ஓடன ஷஷ்டி என்று அறியப்படும் விழா ஒன்று உள்ளது. அந்த நாளிலிருந்து பகவான் ஜெகன்நாதருக்கு  குளிர் காலத்திற்கு உகந்த போர்வைகளை அணிவிக்க வேண்டும் என்பதை இந்த விழா சுட்டிக்காட்டுகிறது. அந்த போர்வை நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. அர்ச்சன வழிமுறையின்படி, துணியை முதலில் நன்றாக துவைத்து அதிலுள்ள கஞ்சியை எடுத்து விட வேண்டும், அதன் பின்னரே அதனை பகவானுக்கு போர்த்த வேண்டும் ஆனால் பகவான் ஜெகநாதரின் பூஜாரி அந்த விதியினை புறக்கணித்து கஞ்சியுடன் கூடிய உடைகளை ஜெகநாதருக்கு அணிவித்தார். அதைப் பார்த்த புண்டரீக வித்யாநிதி, பக்தர்களிடம் குற்றம் காண்பதற்கான தனது எண்ணத்தினால், கடும் கோபம் கொண்டார்  பகவான் ஜெகன்நாதருக்கு கஞ்சியுடன் கூடிய ஆடை வழங்கப்பட்டதை கண்டபோது புண்டரீக வித்யாநிதி சற்று வெறுப்படைந்தார். அதனால் அவரது மனம் கலங்கமுற்றது. அன்றிரவில் சகோதரர்களான பகவான் ஜகன்னாதரும் பலராமரும் புண்டரீக வித்யாநிதியிடம் வந்து புன்னகைத்தபடி அவரை அறையத் தொடங்கினர். அறை வாங்கியதால் அவரது கன்னங்கள் ...

வாழைத்தண்டு பச்சடி

வாழைத்தண்டு பச்சடி   தேவையான பொருட்கள் ***************************** வாழைத்தண்டு - 1 (சிறியது) கெட்டி தயிர் - 1 கோப்பை கறிவேப்பிலை - சிறிதளவு வர மிளகாய் - 3 கடுகு - 1/4 தேக்கரண்டி உடைத்து உளுந்து - 1/4 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - 2 சிட்டிகை எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை ******************** 1. வாழைத்தண்டை வட்டவட்டமாக நறுக்கி நார்களை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி மோர்த் தண்ணீரில் போடவும். 2. பிறகு இதனை பிழிந்து எடுத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். 3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து, வேக வைத்த தண்டைப் போட்டு லேசாக வதக்கி இறக்கவும். 4. பிறகு கெட்டித் தயிரில் உப்பு சேர்த்து கலக்கி வேகவைத்து, தாளித்த வாழைத்தண்டில் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும். குறிப்பு ******************** 1. தயிர் கலந்த பின்பு அடுப்பில் வைக்கக் கூடாது. 2. தயிர் தண்ணியாகவும் இருக்கக் கூடாது. 3. வாழைத்தண்டு கறுக்காமல் இருப்பதற்காக மோர் தண்ணீரில் போடவும்.

தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி  தேவையான பொருட்கள் ****************************** தேங்காய் துருவல் - 1 கப் (நன்கு அழுத்தியது) சர்க்கரை - 1 கப் (200 கிராம்) ஏலக்காய் - 4 (பொடி செய்தது) முந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக சீவியது) நெய் - 1 தேக்கரண்டி (வறுக்க)\ செய்முறை ********************* 1. முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 2. அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். 3. பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும். 4. நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும் 5. ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். 6. ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும். 7. லேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும். குறிப்பு **************** 1. அடுப்பில் தொடர்ச்சியாக வி...

பீட்ரூட் அல்வா

 பீட்ரூட் அல்வா தேவையான பொருட்கள் ************************** பீட்ரூட் - 2 பால் - 2 மேஜைக் கரண்டி கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி நெய் - 1/2 கோப்பை ஏலக்காய் - 4 உலர்ந்த திராட்சை - 5 சர்க்கரை - 1 1/2 கோப்பை வறுத்த முந்திரி - 10 செய்முறை ************** 1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். 2. துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும். 4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.