Skip to main content

Posts

துளசி தீர்த்தம் மற்றும் கார்த்திகை மாத விரதத்தின் மகிமை

  துளசி தீர்த்தம் மற்றும் கார்த்திகை மாத விரதத்தின் மகிமை ஆதாரம் - பத்ம புராணம் ஆதாரம் - பத்ம புராணம் / உத்தர காண்டம் / அத்தியாயம் 6 வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁      முன்னொரு காலத்தில் "கர்மவீரபும்" என்ற ஊரில் தர்மதத்தன் என்ற பெயருடைய ஒரு பிராமணன் வசித்தான். அவன் சதா காலமும் பகவான் விஷ்ணுவை ஆராதித்து வந்ததோடு பகவானுக்குப் பிரியமான விரதங்களையும் நியமம் தவறாமல் அனுசரித்து வந்தான், துவதாச அட்சர மந்திரத்தையும் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தையும் இடையறாமல் ஜெபித்துவந்தான். அதிதிகளை உபகரிப்பதிலும் சிறந்து விளங்கினான்.      கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் இரவு பகவான் ஹரியை தியானித்தபடி விழித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் பயங்கரமாக அலறிக்கொண்டு வந்த ராட்சசியைக் கண்டான். ரத்தத்தைப் போல் சிவந்த கண்களும் அகன்ற தாடையில் வெளிப்பட்டுக் காணப்பட்ட கோரப் பற்களுமாக அவள் மிகவும் பயங்கரமாகக் காட்சியளித்தாள் உடம்பில் ஆடையில்லாமலும், பிணவாடைவீசக்கூடிய நீண்ட கரங்களை அசைத்தபடியாகவும், பயங்கரமான அலறலோடு ...

எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை

 

மூவகை துன்பங்கள்

 

கிருஷ்ண உணர்வில் ஒருவருக்கு பொறுமை மற்றும் தன்னம்பிக்கை வேண்டும்

கிருஷ்ண உணர்வில் ஒருவர் பொறுமையற்றவராக இருக்கக் கூடாது. உண்மையில், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் பிறருதவி இல்லாமல் தனியே ஆரம்பிக்கப்பட்டதாகும். மேலும் துவக்கத்தில் இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் நமது பக்தித் தொண்டை நாம் பொறுமையுடன் தொடர்ந்து செய்தால், இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் படிப்படியாக அறியத் துவங்கினர். மேலும் இப்போது அவர்கள் விருப்பத்துடன் பங்கு பெறுகின்றனர். பக்தித் தொண்டை நிறைவேற்றுவதில் பொறுமையை இழந்து விடக் கூடாது. ஆனால் ஆன்மீக குருவிடமிருந்து உபதேசங்களை ஏற்று, அவற்றை குரு, கிருஷ்ணரின் கருணையை நம்பி, பொறுமையுடன் நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ண உணர்வுச் செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பொறுமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன. புதிதாக திருமணமணான பெண் ஒருத்தி இயல்பாகவே தனது கணவனிடம் இருந்து குழந்தையை எதிர்பார்க்கிறாள். ஆனால் திருமணமான உடனேயே அதை அவள் எதிர்பாபர்க்க முடியாது. திருமணமான உடனேயே குழந்தை பெறும் முயற்சியில் அவள் ஈடுபடலாம் என்பது சரிதான். ஆனால் அவள் தனது கணவனிடம் சரணடைந்து, குழந்தை விருத்தியடைந்து, உரிய காலத்தில் பிறக்கும் என்பதில் அவள் ...

பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி

 பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி  வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பல வருடங்களுக்கு முன்னர், அயோத்தியில் தசரத மஹாராஜா வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு  நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை புத்திர கமேஷ்டி என்ற ஒரு யாகத்தின் மூலம் ஒரே சமயத்தில் நான்கு குழந்தை பெறும் பாக்கியம் பெற்றனர். அதில் கௌசல்யா தேவிக்கு பகவான் ஶ்ரீ ராமசந்திரமூர்த்தியும் கைகேயிக்கு பரதனும் .சுமித்ரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்னனும்  பிறந்தனர். இவர்களில் ராமர் மூத்தவர். இளவரசர்கள் நால்வரும் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினர் - போர் கலை, வில் அம்பு பிரயோகிப்பது, வாள் வீச்சு, நாட்டு மக்களை பாதுகாத்தல், அரச கடமைகளை எவ்வாறு செவ்வனே செய்வது - போன்ற அனைத்தையும் கற்றனர். சில காலத்திற்கு பின்னர், ராமர் "சீதா" என்ற அழகிய இளவரசியை மணந்தார். அவர்கள் அயோத்தியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.  தனக்கு வயதாகி விட்டது என்றுணர்ந்த தசரத மகாராஜா, தனது மந்திரிகளுடன் ஆலோசித்து, ஶ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு, தான் துறவறம் ஏற்று. கானகம் செ...

கங்கா சாகர் - புனித கங்கை வங்க கடலில் சங்கமிக்கும் இடம்

பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி, கங்கா சாகர் தீவுக்கு ஏராளமான பகதர்கள் வருகை தந்து புனித நீராடுவது வழக்கம்.  இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுக்கு வந்து பக்தர்கள் புனித நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.  தினந்தோறும் அந்திப்பொழுதில் ஹரித்வாரிலும் காசியிலும் கங்கா சாகரத்திலும் ஶ்ரீதாம் மாயாபூரிலும் மற்றும் கங்கை நதி பாய்தோடும் கங்கை கரையில்  கங்கைக்கு கோவில் அமைந்துள்ள சில இடங்களிலும்  கங்கைக்கு ஆரத்தி நடக்கிறது என்பதை நாம் அறிவோம். கங்கை கடலோடு கலக்கும் சங்கமத்தில் நடைபெறும் திருவிழாவை கங்கா சாகர் மேளா என்று அழைக்கப்படுகிறது. பொங்கல் என்று நாம் கொண்டாடும் மகர சங்கராந்தி தினத்தன்று, கங்கை நதியானது வங்காள விரிகுடா கடலில் சேரும் இடத்தில் கங்கா சாகர் மேளா நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில் சூரியன் தனுசு ராசியிலிருந்து மகரராசிக்குள் பிரவேசிக்...

உத்திராயண புண்ணியகாலம்

சூரியன் கடக ராசியிலிருந்து மகர ராசிக்கு நகர்வதே ‘மகர சங்கராந்தி’ என்ற பெயர் வந்ததற்குக் காரணம் மேலும் தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். உத்தம வாழ்வு தரும் உத்திராயணம் உத்திராயண   காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம்) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம். பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார். தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலமான ஆடி 1 முதல...