Skip to main content

Posts

ஸ்ரீ கேவலாஷ்டகம்

  ஸ்ரீ கேவலாஷ்டகம் ***************************************************************************** பதம் – 1 மதுரம் மதுரேப்யோ அபி மங்களேப்யோ அபி மங்களம் பாவனம் பாவனேப்யோ அபி ஹரேர் நாமைவ கேவலம் மொழிபெயர்ப்பு இனியவை அனைத்திலும் மிகவும் இனியது . மங்களம் அனைத்திலும் மிகவும் மங்களகரமானது . புனிதப்படுத்துவதில் அனைத்திலும் உன்னதமான புனிதப்படுத்துவது . அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே   பதம் – 2 ஆபிரஹ்மா ஸ்தம்ப பர்யந்தம் ஸர்வம் மாயா மயம் ஜகத் ஸத்யம் ஸத்யம் புன : ஸத்யம் ஹரேர் நாமைவ கேவலம் மொழிபெயர்ப்பு முழு பிரபஞ்சத்திலும் உயர்ந்தவரான பிரம்மா முதல் அற்பமான புல் வரையிலும் பரமபுருஷருடைய ஜடசக்தியின் மாயப் படைப்புகளே ஆகும் . ஒன்றே ஒன்று மட்டும் உண்மை , முழு உண்மை மீண்டும் நான் சொல்கிறேன் முழு உண்மை அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே .     பதம் – 3 ஸ குரு : ஸபிதா ச அபி ஸா மாதா பந்தவோ அபி ஸ : சிக்ஷயேக் சேத் சதா ஸ்மர்தும் ஹரேர...