Skip to main content

Posts

சுகதேவர் கோஸ்வாமி

  சுகதேவர் கோஸ்வாமி  வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 சுகதேவர் கோஸ்வாமி மகரிஷி வியாசரின் மிகவும் பிரசித்தி பெற்ற மகன் மற்றும் சீடரும் ஆவார். அவர் பிறப்பிலிருந்தே முக்தி பெற்ற ஆத்மாவாக இருந்தார். தனது தாயின் கர்பத்தில் இருக்கும்பொழுதே முக்தியை பெற்றுவிட்டார்.  அவர் தனது ஜனனத்திற்கு பிறகு எந்த ஒரு ஆன்மீக பயிற்சிக்கும் செல்லவில்லை பிறப்பிலேயே அவர் ஒரு நல்ல வைஷ்ணவராக திகழ்ந்தார்.  இதனால் பிராமணர்களுக்கென்றுள்ள  உபநயனம் போன்ற சடங்குகள் எதுவும் நடைபெறாமல் இருந்தும் அனைத்து மங்களகரமான குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தார்.  அவர் சனாதன தர்மம் கொள்கைகளில் அதீதமான அறிவு பெற்றிருந்ததால் அவர் முற்றிலும் தூய்மையடைந்த  ஆத்மாவாக இருந்தார்.  அவர் முதன்முதலில் மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவத உபன்நியாசங்களை தனது தந்தையான வியாச தேவரிடமிருந்து கேட்டார்.  அவர் கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சஷர்களின் சபையில் 14 லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மகாபாரதத்தை உபந்நியாசம் செய்தார்.  அவர் முதன்முதலாக மகாராஜா பரீக்ஷித்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபந்நியாசம...

தவதிரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

  தவதிரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு 💐💐💐💐💐💐💐💐💐💐 ‘ நான் உங்கள் நாட்டிற்கு தூதுவனாக சென்றேன் மற்றும் மிகச்சிறந்த ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் கிருஷ்ணர் என்னிடம் அனுப்பிவைத்தார்.” ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ கிருஷ்ணரால் ஸ்ரீல பிரபுபாதரிடம் அனுப்பிவைக்கப்பட்ட மிகச்சிறந்த ஓர் ஆத்மாவே கடந்த 33 வருடங்களாக ஸ்ரீல பிரபுபாதரின் சேவையில் ‘சுய நலமற்ற சேவகராக” இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் தவத்திரு த்ரிதண்டி பிக்ஷூ ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் ஆவார். பிறப்பு, குழந்தைப்பருவம் மற்றும் கல்வி 💐💐💐💐💐💐💐💐💐💐💐 ஜான் கோர்தன் எர்ட்மன் என்றழைக்கப்பட்ட ஜெயபதாக ஸ்வாமி அவர்கள் 1949-ல் ஏப்ரல் 9 அன்று (ஸ்ரீ ராம நவமியை அடுத்துவரும் ஏகாதசியில்) அமெரிக்காவில் விஸ்கோன்சினில் உள்ள மில்வொகியில் ஜான் ஹுபர்ட் மற்றும் லாரெய்ன் எர்ட்மன் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். அவர் செல்வவளமிக்க குடும்பத்தில் பிறந்தவராவார். அவர் பிறந்தகாலத்திலேயே மிகப்பெரிய பெயிண்ட் தொழிற்சாலைக்கு அதிபதியாக, கோடீஸ்வரர்களில் ஒருவராக கருதப்பட்டவர் அவரது தாத்தாவார். பின்னாளில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் தனது பெயிரினைக் கண...

காமதா ஏகாதசி

  காமதா ஏகாதசி    🍁🍁🍁🍁🍁🍁 சித்திரை (சைத்ர) மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புக்குரிய தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் விஸ்தாரமாக வர்ணித்துக் கூற வேண்டுகிறேன்." என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு," ஹே ! பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை (உரையாடல்) உனக்கு அப்படியே சொல்கிறேன். கேள்." என்றார். ராஜா திலீபன் குரு வசிஷ்டரிடம்," குருதேவா, சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன? அன்று ...

இராமாயணம் கேள்வி - பதில்கள்

 இராமாயணம் கேள்வி - பதில்கள் வழங்கியவர் :  ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இராமாயணம்—பாரத தேசத்தின் பொற்காவியம். பன்னெடுங்காலத்திற்கு முன்பு முழுமுதற் கடவுளான ஸ்ரீ இராமர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்தபோது, அவரது செயல்களை, மக்கள் எக்காலத்திற்கும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக மாமுனிவர் வால்மீகி, இராமாயணம் என்னும் இதிகாசத்தின் வடிவில் தொகுத்தார். இராம லீலைகள் இப்பூமியில் நடைபெற்று இலட்சக்கணக்கான வருடங்களாகியும், இன்று வரை இராமாயணம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரத தேசத்தின் பண்பாட்டில் இராமாயணத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரதத்தின் பல்வேறு மொழிகளில் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அல்லது வால்மீகி எழுதியதை அடிப்படையாகக் கொண்டும் மற்ற சாஸ் திரங்களை அடிப்படையாகக் கொண்டும் முழுமையாகவே இதர மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் கம்பர் இயற்றிய இராமாயணம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், கலி யுகத்தின் தாக்கத்தினாலும், இராமாயணத்தை விளக்குவதற்குத் தகுதிவாய்ந்த ஆச்சாரியர்கள் இல்லாத காரணத் தினாலும், மக்களின் மூடத்தனத் தினாலும், நாத்திகர்களின் அர்த்தமற்ற வாதங்களினாலும், ...