சுகதேவர் கோஸ்வாமி வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 சுகதேவர் கோஸ்வாமி மகரிஷி வியாசரின் மிகவும் பிரசித்தி பெற்ற மகன் மற்றும் சீடரும் ஆவார். அவர் பிறப்பிலிருந்தே முக்தி பெற்ற ஆத்மாவாக இருந்தார். தனது தாயின் கர்பத்தில் இருக்கும்பொழுதே முக்தியை பெற்றுவிட்டார். அவர் தனது ஜனனத்திற்கு பிறகு எந்த ஒரு ஆன்மீக பயிற்சிக்கும் செல்லவில்லை பிறப்பிலேயே அவர் ஒரு நல்ல வைஷ்ணவராக திகழ்ந்தார். இதனால் பிராமணர்களுக்கென்றுள்ள உபநயனம் போன்ற சடங்குகள் எதுவும் நடைபெறாமல் இருந்தும் அனைத்து மங்களகரமான குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தார். அவர் சனாதன தர்மம் கொள்கைகளில் அதீதமான அறிவு பெற்றிருந்ததால் அவர் முற்றிலும் தூய்மையடைந்த ஆத்மாவாக இருந்தார். அவர் முதன்முதலில் மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவத உபன்நியாசங்களை தனது தந்தையான வியாச தேவரிடமிருந்து கேட்டார். அவர் கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சஷர்களின் சபையில் 14 லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மகாபாரதத்தை உபந்நியாசம் செய்தார். அவர் முதன்முதலாக மகாராஜா பரீக்ஷித்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபந்நியாசம...