Skip to main content

Posts

யமதர்மராஜ

  யமதர்ம மஹாராஜ் வழங்கியவர் - சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவத் கீதை பத்தாம் அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்,  "நாகங்களில் நான் பல தலையுடைய அனந்தன்,  நீர்வாழினங்களில் நான் வருண தேவன்.  முன்னோர்களில் நான் அர்யமா.  நீதிபதிகளில் நான் மரணத்தின் அதிபதியான யமன்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் இந்திரன், வருணன், யமதர்மன்  மற்றும் குபேரன் போன்ற தேவர்கள் இந்த பிரபஞ்சத்தின் நான்கு முக்கிய திசைகளின் மேல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் ஸ்ரீமத் பாகவதத்தில் யமராஜர் "பிதாக்களின் ராஜா" அதாவது "பித்ருக்களின் அரசன்" (பித்ருக்கள் - மூதாதையர்)  என்று அழைக்கப்படுகிறார்.   யமராஜர் வசிக்குமிடம் சாமிய மணி என்று அழைக்கப்படுகிறது இவர் சூரியதேவன் விவஸ்வானின் மகனும்,  யமுனை நதியின் சகோதரனும் மற்றும்  யுதிஷ்டிர  மகாராஜாவின் தந்தையும் ஆவார். பகவான் ஹரியின்பால் பக்தி இல்லாத மக்களை அவரை நோக்கி திசைதிருப்பி பக்தியில் முன்னேற்றுவது யமராஜரின் முக்கிய கடமையாகும். உயிர் வழிகளின்  மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையை...

ஹரி நாமத்தின் மூலம் பொதீக சிறையில் இருந்து விடுதலை

  ஹரி நாமத்தின் மூலம் பொதீக சிறையில் இருந்து விடுதலை *********************** கிருஷ்ணரிடம் உதவி பெற்று கருவறைச் சிறையிலிருந்து நாம் விடுதலை பெற்றோம். ஆனாலும் உண்மையில் அது விடுதலையா? நாம் தற்போது சுதந்திரமாக இருக்கின்றோமா? நிச்சயமாக இல்லை. நாம் கிருஷ்ணரை மறக்கின்றபோது உடனடியாக முக்குணங்களால் ஆட்கொள்ளப்படுகிறோம். இந்த ஜடவுலகிலுள்ள ஒவ்வொன்றும் முக்குணங்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இவ்வுலகம், து:காலயம் அஷாஷ்வதம், அதாவது, துக்கத்தின் இருப்பிடமும் நிரந்தரமற்றதுமாகும். இத்தகு உலகில் சுதந்திரமாக அனுபவிக்க நாம் எவ்வளவு போராடினாலும், அது வீண் முயற்சியே. கானல் நீரைக் கண்டு மயங்கும் மான்போல், இன்பம் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தைக் கண்டு நாம் அதைத் தேடித் தேடியே வாழ்வை முடிக்க நேரிட்டு விடுகிறது. ****************************** தைவீ ஹ்யேஷா குண-மயீ மம மாயா துரத்யயா மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே “ஜட இயற்கையின் முக்குணங் களாலான எனது இந்த மாயா சக்தி வெல்லுவதற்கரியது. ஆயினும் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.” (பகவத் கீதை 7.14) ******************************...

மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்

   மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பத்திரிகையாளர்களுடன் நிகழ்ந்த கீழ்க்காணும் உரையாடலில், உலகிலுள்ள பிரச்சனைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம் காரணமல்ல என்றும், மேற்கத்திய பண்பாடுதான் காரணம் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக்காட்டுகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: தற்சமயத்தில் மேற்கத்திய பண்பாட்டைப் பின்பற்றுவதால் இந்தியா பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. விருந்தினர்: அப்படியெனில், மக்கள் தொகை பெருக்கத்தால் பிரச்சனைகள் ஏதும் உண்டாவதில்லையா? ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் தொகை பெருக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த எண்ணம் முட்டாள்தனமானது. விருந்தினர்: முட்டாள்தனமானதா! ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80 இலட்சம் உயிரினங்கள் மனித இனத்தைச் சார்ந்தவை அல்ல. நான்கு இலட்சம் உயிரினங்கள் மட்டுமே மனித இனம். அதிலும் நாகரிகமடைந்தவர்கள் சிலரே. அனைத்து பிரச்சனைகளும் இந்த பெயரளவு நாகரிகமான மக்களிடம் மட்டுமே உள்ளது. கடவுளே அனைவருக்கும் தந்தை என்பது நாம் ...

நான்கு யுகமும் பிரம்மாவின் ஆயுட்காலமும்

 நான்கு யுகமும் பிரம்மாவின் ஆயுட்காலமும் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸஹஸ்ர-யுக-பர்யந்தம் அஹர் யத் ப்ரஹ்மணோ விது: ராத்ரிம் யுக-ஸஹஸ்ராந்தாம் தே (அ)ஹோ-ராத்ர-விதோ ஜனா: மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்களைக் கொண்ட காலம் பிரம்மாவின் ஒரு பகலாகும்; அவரது இரவின் காலமும் அது போன்று நீண்டதே. மொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பௌதிக பிரபஞ்சத்தின் காலம் எல்லைக்கு உட்பட்டதாகும். இது கல்பங்களின் சுழற்சியாகத் தோற்றமளிக்கிறது. கல்ப என்பது பிரம்மாவின் ஒரு பகல். ஸத்ய, திரேதா, துவாபர, கலி எனும் நான்கு யுகங்கள், ஆயிரம் முறை சுழலும் போது அது பிரம்மாவின் ஒரு பகலாகும். புண்ணியம், விவேகம் மற்றும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஸத்ய யுகத்தில் அறியாமையும் பாவமும் கிடையாது, அது 17,28,000 வருடங்கள் நீடிக்கக் கூடியது. திரேதா யுகத்தில் பாவங்கள் ஆரம்பமாயின அது 12,96,000 வருடங்கள் நீடிக்கின்றது. துவாபர யுகத்தில் புண்ணியமும் தர்மமும் மேலும் சீர்குலைய, பாவங்கள் மேலோங்குகின்றன, அந்த யுகம் 8,64,000 வருடங்கள் நீடித்தது. இறுதியாக கலி யுகத்தில் (கடந்த 5000 வருடங்களாக நாம் அனுபவித்து வரும் யுகத்தில்) போர் அறியா...

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை