யமதர்ம மஹாராஜ் வழங்கியவர் - சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவத் கீதை பத்தாம் அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார், "நாகங்களில் நான் பல தலையுடைய அனந்தன், நீர்வாழினங்களில் நான் வருண தேவன். முன்னோர்களில் நான் அர்யமா. நீதிபதிகளில் நான் மரணத்தின் அதிபதியான யமன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் இந்திரன், வருணன், யமதர்மன் மற்றும் குபேரன் போன்ற தேவர்கள் இந்த பிரபஞ்சத்தின் நான்கு முக்கிய திசைகளின் மேல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஸ்ரீமத் பாகவதத்தில் யமராஜர் "பிதாக்களின் ராஜா" அதாவது "பித்ருக்களின் அரசன்" (பித்ருக்கள் - மூதாதையர்) என்று அழைக்கப்படுகிறார். யமராஜர் வசிக்குமிடம் சாமிய மணி என்று அழைக்கப்படுகிறது இவர் சூரியதேவன் விவஸ்வானின் மகனும், யமுனை நதியின் சகோதரனும் மற்றும் யுதிஷ்டிர மகாராஜாவின் தந்தையும் ஆவார். பகவான் ஹரியின்பால் பக்தி இல்லாத மக்களை அவரை நோக்கி திசைதிருப்பி பக்தியில் முன்னேற்றுவது யமராஜரின் முக்கிய கடமையாகும். உயிர் வழிகளின் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையை...