Skip to main content

Posts

தூய பக்தித் தொண்டு

 

கலப்படமற்ற பக்தி

 

தூய பக்தித் தொண்டின் பூரணத்துவம்

 

சுத்த பகத சரண ரேணு

சுத்த பகத சரண ரேணு  (அருளியவர் :- ஶ்ரீல பக்தி வினோத தாகூர்) (1)   சுத்த பகத சரண ரேணு  பஜன அனுகூல  பகத சேவா பரம சித்தி  ப்ரேம லதிகார மூல மொழிபெயர்ப்பு சுத்த பக்தர்களது பாதத் தூளிகள் பக்தித் தொண்டிற்கு அனுகூலமானவை. பக்தர்களுக்கு சேவை செய்வதே பரம சித்தியும், பிரேமை என்னும் கொடியின் வேருமாகும். (2) மாதவ திதி பக்தி ஜனனி ஜதனே பாலன கோரி  க்ருஷ்ண பசதி பசதி போலி  பரம ஆதரே போரி மொழிபெயர்ப்பு ஏகாதசி, ஜென்மாஷ்டமி ஆகிய நாள்கள் பக்திக்கு அன்னையாகத் திகழ்வதால், நான் அச்சமயங்களில் கவனத்துடன் விரதம் அனுசரிக்கிறேன். பெரும் அன்புடனும் மதிப்புடனும் ஸ்ரீ கிருஷ்ணாது தெய்வீக தாமத்தை எனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். (3) கௌர் ஆமார ஜே சப ஸ்தானே  கோரலோ ப்ரமண ரங்கே சே சப ஸ்தான ஹேரிபோ ஆமி  ப்ரணயி பகத சங்கே  மொழிபெயர்ப்பு எனது கௌராங்கர் தமது லீலைகளுக்காக எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் நான் பக்தர்களுடைய சங்கத்துடன் செல்வேன். (4) ம்ருதங்க பாத்ய சுனிதே மன  அபசர சதா ஜாசே  கௌர பிஹித கீர்தன சுனி  ஆனந்த ஹ்ருதோய நாசே மொழிபெயர்ப்பு மிருதங்க வாத்தியத்...

ஓஹே, வைஷ்ணவ தாகுர தோயார சாகர

  ஓஹே, வைஷ்ணவ தாகுர தோயார சாகர  (அருளியவர் :- ஶ்ரீல பக்தி வினோத தாகூர்) 🔅🔅🔅🔅🔅🔅 (1) ஓஹே வைஷ்ணவ தாகுர தோயார சாகர  ஏ தாஸே கோருணா கோரி தியா-பத-சாயா சோதோ ஹே ஆமாயா தோமார சரண தோரி மொழிபெயர்ப்பு (1) பெருமதிப்பிற்குரிய வைஷ்ணவ தாகூரே, கருணையின் கடலே, என் மீது கருணைக் காட்டுவீராக. உமது திருவடி நிழலைக் கொண்டு இந்த சேவகனைத் தூய்மைப்படுத்துவீராக, நான் உமது திருவடிகளைப் பற்றிக் கொண்டுள்ளேன். (2) சய பேக தோமி சய தோஷ சோதி  சய குண தேஹோ தாஸே  சய சத்-சங்க தேஹோ ஹே ஆமாரே  போசேசி சங்கேர ஆசே மொழிபெயர்ப்பு உமது தாஸனான எனது ஆறு உந்துதல்களைக் * கட்டுப்படுத்தி, ஆறு தவறுகளைத் தூய்மைப்படுத்தி, ஆறு நற்குணங்களை* எனக்கு அளிப்பீராக. ஆறு விதமான சத்சங்கத்தினையும் எனக்கு அளிப்பீராக. உமது சங்கத்தைப் பெறும் நோக்கத்துடன் நான் இங்கு அமர்ந்துள்ளேன். (3) ஏகாகி ஆமார, நாஹி பாய பல ஹரி நாம சங்கீர்தன  துமி  கி ருபா கோரி ஷ்ரத்தா பிந்து தியா  தேஹோ  கி ருஷ்ண நாம தனே மொழிபெயர்ப்பு  தனிமையில் ஹரி நாம ஸங்கீர்த்தனம் புரிய எனக்கு பலமில்லை. எனவே, ஒரு துளி நம்பிக்கையை வழங்கி, கிருஷ்ண ...

வக்ரேஷ்வர பண்டிதர்

  ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகவும் பிரியமான சேவகர் ஆவார்,  கௌர-கணோத்,தேஷ தீபிகா வில், வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் நாராயணரிலிருந்து வரும் (வாசுதேவர், சங்கர்சனர், அனிருத்தர், மற்றும் பிரதியும்னர்) நான்கு விரிவாக்கங்களில் ஒன்றான அனிருதரின் அவதாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வக்ரேஷ்வர பண்டிதரின் சீடர் கோபால குரு கோஸ்வாமியும் , கோபால குரு கோஸ்வாமியின் சீடரான தியான் சந்திரரும் அவர்கள் எழுதிய புத்தகங்களில் வக்ரேஷ்வர பண்டிதர், ஸ்ரீமதி ராதரானியின் நெருங்கிய தோழிகளான அஷ்ட-சகிகளில் ஒருவரான துங்கவித்யா-சகியின் அவதாரம் என்று கூறுகிறார். இந்த துங்கவித்யா சகி மிக சிறந்த பாடகரும் நேர்தியான நடனக் கலைஞருமாவார். வக்ரேஷ்வர பண்டிதர் நதியா மாவட்டம், திரிவேணிக்கு அருகிலுள்ள குப்தபரா என்னும் கிராமத்தில் பிறந்தார். அனுதினமும் ஸ்ரீவாச பண்டிதரின் வீட்டில் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் ,மற்றும் நாட்டிய நாடகங்கள் நடைபெறும். அதில் பங்கு கொண்டு நடித்தபோது, ​​வக்ரேஷ்வர பண்டிதர் தலைமை நடனக் கலைஞர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் தொடர்ந்து எழுபத்திரண்டு...

வெடித்து போன தவளை

  உபாக்யானே உபதேசம் ( ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) 🍁🍁🍁🍁🍁🍁🍁 வெடித்து போன தவளை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு குளத்தில் தவளையொன்று தனது மகன் தவளையுடன் வசித்து வந்தது. ஒரு நாள் மகன் தவளை குளக்கரையில் ஒரு யானையைக் காண நேர்ந்தது. உடனே குளத்திர்குத் திரும்பிய அந்த தவளை தன் தாயிடம் உற்சாகமாக, "அம்மா நான் இன்று ஒரு பெரிய விலங்கைப் பார்த்தேன்" என்றது.  அதற்கு அதன் தாய், அப்படியா!! அது எவ்வளவு பெரியதாக இருந்தது?  அதற்கு குழந்தை தவளை, " ஓ அது உங்களை விட பெரியது!'' என்றது. அப்போது அந்த தாய் தவளை தனது உடலை ஊதி பெருக்கிக் கொண்டு (உப்பியபடி) "இவ்வளவு பெரியதா?' என்றது.  அதற்கு மகன் தவளை, "இல்லையம்மா இதை விட பெரியது" என்றது.  மறுபடியும் தாய் தவள இன்னும் அதிகமாக அதன் உடல உப்பி வைத்தபடி, "இவ்வளவு பெரிதாக இருந்ததா? என்றது.  உடனே மகன் தவளை, "ஓ இல்லையம்மா இதை விட பெரியது" என்றது. இப்பொழுது தாய் மேலும் தனது உடல உப்பிக்காட்டியது. இவ்வாறாக திரும்ப திரும்ப செய்யவும் மகன் தவளை, "இல்லை இல்லை இதை விட பெரியது என்றது. இதனால் மேலும் மேலும் தனது உடலை தனது ச...