மஹாபாரத யுத்தத்திற்கு பின் யுதிஷ்டிர மகாராஜாவின் கேள்விக்கு அம்புபடுக்கையில் இருந்த பிதாமகர் பீஷ்மரால் சொல்லப்பட்ட ராஜ நீதி கதைகளில் கீழ்காணும் கதையும் ஒன்று ஒரு ஊரில் வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தது அதில் சிறிதும், பெரியதுமாக நிறைய மீன்கள் இருந்தன. அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தது. அவைகள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக அக்குளத்தில் வாழ்ந்தன. மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ தன்மை, குணம் இருந்தது. ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை. முதலாவது மீனின் பெயர் தூரதர்சி அதாவது இதன் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன் எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது. இரண்டாவது மீனின் பெயர் பிரத்யுன்மதி இதன் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயம் தோன்றி பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்...