Skip to main content

Posts

பிரம்மாவின் பிறப்பு மற்றும் ஶ்ரீமன் நாராயணனின் வல்லமை

  பிரம்மாவின் பிறப்பு மற்றும் ஶ்ரீமன் நாராயணனின் வல்லமை படைப்பிற்குப் பிறகு பிறந்த முதல் ஜீவராசியான பிரம்மா, நாராயணரின் நேரிடையான மகனாவார். நாராயணர், கர்போதகசாயி விஷ்ணுவாக ஜடப் பிரபஞ்சத்தினுள் முதன்முதலாகப் பிரவேசித்தார். ஆன்மீக தொடர்பின்றி ஜடத்தினால் படைக்க முடியாது. படைப்பின் முதல் துவக்கத்திலிருந்தே இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பரமாத்மா பிரபஞ்சத்திற்குள் புகுந்தார். விஷ்ணுவின் நாபியிலிருந்து உதயமாகி மலர்ந்த தாமரைப் பூவின் மீது முதல் ஜீவராசியான பிரம்மா பிறந்தார். இதனால் விஷ்ணு பத்மனாபன் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மா, தாய் லக்ஷ்மி தேவியின் தொடர்பில்லாமல், தந்யைிடமிருந்து நேரடியாகப் பிறந்தவராவார். இதனால் அவர் “ஆத்ம பூ” எனப்படுகிறார். லக்ஷ்மிதேவி நாராயணருக்குப் பணிவிடை செய்துகொண்டு அவரருகிலேயே இருந்தாள். இருப்பினும் லக்ஷ்மி தேவியின் தொடர்பு இல்லாமலேயே நாராயணர் பிரம்மாவைப் பெற்றார். அது பகவானின் சர்வசக்தியாகும். நாராயணர் மற்ற ஜீவராசிகளைப் போன்றவர் என்று முட்டாள்தனமாகக் கருதுபவன் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாராயணர் சாதாரண ஒரு ஜீவராசியல்ல. அவர் சாக்ஷாத் பரம புருஷ பகவானா...

பரம புருஷ பகவானான கிருஷ்ணரை வழிபட்டால் ஒருவனது எல்லாக் குறிக்கோளும் அடையப்படுகிறது

 

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரால் அறிவிக்கப்பட்ட தத்துவம்

 

காத்யாயனி விரதம்

 

கார்த்தியாயினி விரதம்

மார்கஸீர்ஷ மாதத்தில் ஆயர்குல இளமங்கையர் அதிகாலையில் எழுந்து ஒருத்தி மற்றொருத்தியின் கைகளைப் பற்றிக் கொண்டு கிருஷ்ணரின் கல்யாணகுணங்களைச் சிறப்பித்துக் பாடிக்கொண்டே யமுனை நதிக்கு நீராடச் செல்வர். நீராடி முடித்த கோபியர்கள் கிருஷ்ணரே தமது கணவராக வர வேண்டும் என்று விரும்பி கார்த்தியாயினி தேவியை தூய தீபங்கள் மற்றும் மலர்களைக் கொண்டு வழிபடுவர். ஒரு நாள் காலையில் கோபியர் தமது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்துவிட்டு, யமுனை நதியில் இறங்கி கிருஷ்ணரின் லீலைகளைப் போற்றியபடியே நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு தோன்றிய கிருஷ்ணர் கோபியர்களின் ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அருகில் நின்ற ‘கதம்ப’ மரத்தில் ஏறிக் கொண்டார். கோபியர்களைக் கேலி செய்ய விரும்பிய கிருஷ்ணர் அவர்களிடம் “நீங்கள் மேற்கொண்ட விரதங்களினால் எவ்வாறு களைப்புற்றிருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆகையினால் கரைக்கு வந்து உங்களது ஆடைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனைக் கேட்டுச் சினமுற்றவர்களைப் போல் நடித்த கோபியர்கள், அதிக நேரம் யமுனையின் குளிர்ந்த நீரில் தாங்கள் துன்புறுவதா...

கிருஷ்ண அவதாரம் மற்றும் நோக்கம்

ஸத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் குணாஸ் தைர் யுக்த:பர:புருஷ ஏக இஹாஸ்ய தத்தே ஸ்திதி-ஆதயே ஹரி-விரின்சி-ஹரேதி ஸம்ஞா: ஸ்ரேயாம்ஸி தத்ர கலு சத்வ-தனோர் நிர்ணாம் ஸ்யு: மொழிபெயர்ப்பு தெய்வீக புருஷராகிய பகவான், ரஜோ குணம், சத்வ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய ஜட இயற்கையின் முக்குணங்களுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டிருக்கிறார். மேலும் ஜடவுலகின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் முத்தொழில்களுக்காக அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று குண அவதாரங்களை ஏற்றுக்கொள்கிறார். இம்மூவருள், நற்குண (சத்வ) ரூபமான விஷ்ணுவிடமிருந்தே மக்களனைவரும் முடிவான நன்மைகளைப் பெற முடியும் பொருளுரை மேலே குறிப்பிட்டதுபோல், விரிவங்கங்களாகத் தோன்றியுள்ள அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்ற வேண்டும் என்பது இப்பதத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அவரது எல்லா விரிவங்கங்களும் ‘விஷ்ணு-தத்வங்கள்’ அல்லது பரம புருஷர்களேயாவர். ஸ்ரீ கிருஷ்ணரிலிருந்து வரும் அடுத்தத் தோற்றம் பலதேவராவார். பலதேவரிலிருந்து சங்கர்ஷணரும், சங்கர்ஷணரிலிருந்து நாராயணரும், நாராயணரிலிருந்து இரண்டாவது சங்கர்ஷணரும், இந்த சங்கர்...

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

    வழங்கியவர்: திருமதி. கிருஷ்ண காமினி தேவி தாஸி மிக உயர்ந்ததும் தொன்மை மிக்கதுமான வைஷ்ணவ தர்மம், ஆழமான பக்தி உணர்வுகள் மற்றும் நுணுக்கமான விளக்கங்களுடன் தெய்வீக மணங் கமழும் பொலிவு பெற்றதாகும். தனக்கு வேண்டியவற்றை எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வார் என்பதை உணர்ந்து, அவரது பாத கமலங்களுக்குத் தொண்டு புரிவதே தமது தொழில் என்று வாழ்வதே சரணாகதி எனப்படும் உயர்ந்த தத்துவமாகும். இதை நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக இம்மண்ணுலகில் தோன்றிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒன்பதாவது ஆழ்வாராக ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாளின் பெருமையை இங்கு சற்று பார்ப்போம். ஆண்டாளின் அவதார நோக்கம் லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷிகேஷ: என்று உபநிஷத் சொல்கின்றது. அதாவது, பகவானின் ஒவ்வொரு அவதாரத்தின்போதும் அவருடைய பத்தினிகளும் உடன் அவதரிக்கின்றனர். பகவானின் துணைவியர் மூவர்–திருமகள், மண்மகள், ஆயர் மடமகள். திருமகள் என்பது லக்ஷ்மியையும், மண்மகள் என்பது பூமிப் பிராட்டியையும், ஆயர் மடமகள் என்பது நீளா தேவியையும் குறிக்கும். இரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமிப் பிராட்டியை சமுத்திரத்தினுள் கொண்டு சென்று மறைத்து வைத்தான். அப்போது பெருமாள் வராஹ அவதார...